வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, October 26, 2009

ஒழுக்கம்

இராவணன் ஒழுக்கம் தவறினான்
இராமயணம் பிறந்தது !
துரியோதனன் ஒழுக்கம் தவறினான்
பாரத போர் பிறந்தது !
இயற்கையின் ஒழுக்கத்தை கெடுத்தனர்
வறட்சி பிறந்தது !
இந்து-முஸ்லிம் ஒற்றுமையில் ஒழுக்கம் தவறியது
டிசம்பர் ஆறு பிறந்தது !

ஆராய்ச்சியில் ஒழுக்கத்தை சிதைத்தனர்
அணுகுண்டு பிறந்தது !
அணுக்கள் ஒழுக்கமில்லாமல் செயல் பட்டன
ஊனமுற்ற குழந்தைகள் பிறந்தன !
ஓட்டுநர் ஒழுக்கம் தவறினான்
சாலையில் விபத்துக்கள் பிறந்தது !
அரசாங்க அதிகாரி ஒழுக்கம் தவறினான்
லஞ்சம் பிறந்தது !

ஒரு சிலர் ஒழுக்கம் தவறினர்
AIDS பிறந்தது !
காற்றின் ஒழுக்கத்தை கெடுத்தனர்
SWINE FLU பிறந்தது !

ஒழுக்கம் தவறி பிறந்தது எல்லாம்
மக்களை கொல்லும் கத்தியாய் எதிரே !
அதை எதிர்த்து போர் செய்ய
நம் கையில் இருக்கும்
ஒரே ஆயுதம் ஒழுக்கம் !

--

ஒரு பள்ளி மாணவன் தன் பள்ளி கவிதைப் போட்டிக்காக 'ஒழுக்கம்' தலைப்பில் கவிதை கேட்டிருந்தான். அந்த கவிதையை பதிவில் ஏற்றியிருக்கிறேன்.

3 comments:

தங்க முகுந்தன் said...

அருமை! வாழ்த்துக்கள்!

ரோஸ்விக் said...

//ஒழுக்கம் தவறி பிறந்தது எல்லாம்
மக்களை கொல்லும் கத்தியாய் எதிரே !
அதை எதிர்த்து போர் செய்ய
நம் கையில் இருக்கும்
ஒரே ஆயுதம் ஒழுக்கம் !//

அருமையான வரிகள். பள்ளி மாணவனுக்கு வாழ்த்துக்கள். (அது நீங்களாக இருந்தாலும்) :-)


http://thisaikaati.blogspot.com

திகழ் said...

பகிர்வுக்கு நன்றிங்க‌

LinkWithin

Related Posts with Thumbnails