
திருஷா, நயந்தாரா, ஸ்னேகா, நமீதா போன்ற அழகுள்ள நான்கு பெண்கள் உங்களை திருமணம் செய்து கொள்ள கேட்டால், எந்த பெண்ணை தேர்வு செய்வீர்கள். உங்களுக்கு பிடித்த பெண்ணை சொல்லுவதறு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வீர்கள். ஒவ்வொரு பெண்ணிலும் ப்ளஸ் எது ? மைனஸ் எது ? யோசிப்பீர்கள். மற்றவர் 'ஸ்னேகா' என்று கருத்து சொன்னாலும் நம் மனம் 'நமீதா' என்று சொல்லும். இதற்கு, பதில் சொல்ல எவ்வளவு யோசிப்பார்களா +2 படித்து முடித்த மாணவன் எந்த பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்பதையும் அதிகம் யோசிக்க வேண்டும்.
படிப்பை தேர்ந்தெடுப்பதும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது போல தான். அதை வைத்து தான் நமக்கு வேலை, சம்பளம், சமூகத்தில் மரியாதை எல்லாமே !
பொறியியலில் Chemical, Civil, Electrical போன்ற பிரிவுக்கு என்று மதிப்பு உண்டு. இருபது வருடம் முன்பு பொறியியலில் இந்த மூன்று பிரிவு மட்டும் தான் இருந்தன. ஆனால், Computer, Marine, Aeronautics என்று பல எஞ்ஜுனியரிங் படிப்புகள் வந்து விட்டன. கண்டிப்பாக இதில் எது படிக்க வேண்டும் என்ற குழப்பம் பல மாணவர்களுக்கு இருக்கும். பெற்றோர்களும் தங்கள் சொந்தத்தில் இருப்பவர்கள் படித்த படிப்பை விசாரித்து அதையே தங்கள் பெண்ணை, மகனை படிக்க சொல்லுவார்கள். எந்த யோசனை இல்லாதவர்களும் பெற்றோர்கள் சொன்னப்படி கேட்பார்கள். வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர், தம்பி ! இந்த படிப்பு படி. நல்ல எதிர்காலம் இருக்கு. உனக்கு நான் வேலை வாங்கி தரேன்.' என்பார். உறவினர், ' பாரும்மா ! இன்னைக்கு கம்யூட்டர் படிச்சா வெளிநாட்டு வேலை கிடைக்கும். அது படி !'.
எந்த துறையை விரும்பமாக உங்களுக்கு உள்ளதோ அந்த துறை படித்தவர்களிடம் கேளுங்கள். ப்ளஸ், மைனஸ் பார்த்து நமக்கு எது ஏற்றதாக இருக்கும் யோசித்து சேருங்கள். முதல் வருடம் Electrical Engg. படித்த மாணவன் பெரிய ஆளை பிடித்து அதே கல்லூரியில் இரண்டாவது வருடம் Computer Engg வகுப்பு வந்தான். மூன்றாவது வருடம், 'I.T. down' என்ற செய்தி கேட்டவுடன் 'பேசாமல் நாம Electrical லே படிச்சிருக்கலாம்' தோணும், இன்னொருன் " போடா.. Circut theory படிச்சு அரியர் வைக்கிறதுக்கு, 'கம்யூட்டரே பெஸ்ட். என்று சக மாணவன் சொல்லுவான்.
படிப்பில் எதுவுமே வேஸ்ட் என்பது கிடையாது. பலர் 'பெஸ்ட்' என்று சொல்லுவது அதில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தான். எந்த படிப்பு படித்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், நாம் முன்னேற முன்னேற சம்பளம் அதிகமாகும். இது எல்லா படிப்புக்கு பொருந்தும்.
திருஷா, நயந்தாரா, ஸ்னேகா, நமீதா - இதில் யார் உங்களுக்கு யார் பிடிக்கும் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அடுத்தவர்கள் அல்ல....!!
--
பிரபல வார இதழுக்காக எழுதிய கட்டுரை. பிரசுரமாகததால் பதிவெற்றிவிட்டேன் :(
No comments:
Post a Comment