
பொழுது சாய்ந்த பிறகு நகத்தை வெட்டுவது வீட்டுக்கு ஆகாது என்பார்கள். ஆனால், இதை விட நல்ல பொழுது இல்லை என்று சிதம்பரம் சொல்பவன். அலுவக வேலை பலுவுக்கு நடுவில் தன் நகத்தை கடித்து எடுத்துவிடுவான். டென்ஷனாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் அவன் கையில் நகம் வளர விடமாட்டான். வளர்வதும் பிடிக்காது.
இரவு சாப்பிட்டு கட்டிலுக்கு பாலுடன் வந்த மனைவியின் விரலை பார்த்தான். ஒவ்வொரு விரலின் நகம் பெரிதாக இருந்தது. ஆடி மாதம் முடிந்து நேற்று தான் அம்மா வீட்டில் இருந்து மல்லிகா வந்தாள். ஒரு மாத பிரிவில் அவளை அனைப்பதிலும், முத்தமிடுவதிலும் ஆசையாய் இருந்த சிதம்பரம் அவள் நகத்தை கவனிக்க வில்லை. இப்போது தான் பார்த்தான்.
"என்ன இவ்வளவு பெருசா நகத்த வளர்த்திருக்க..."
"தினமும் சாப்பாடு போட்டு வளர்க்கிறேன்" என்று கிண்டலாக கூறினாள்.
சிதம்பரம் செல்லமாக அவளை முறைத்தாள். மல்லிகா சிரித்தபடி, " பின்ன என்ன ! நகத்த வெட்டல வளர்ந்திடுச்சு....!"
"இரு வெட்டுறேன்...."
" இராத்திரி நேரத்துல வேணாம். காலையில வெட்டுங்க..."
" நேத்து ‘அந்த’ சமயத்துல என்ன கீறிட்ட. அப்போ எனக்கு பெருசா தெரியல. இப்போ வெட்டுனா தான் அது செய்ய எனக்கு மூடு வரும்...!!"
மல்லிகா தன் கையை எடுக்க நினைத்தும், சிதம்பரம் விடாமல் அவள் கையை இழுத்தான். தன் கையில் நகம் இல்லாததால் அவள் நகத்தை வாய்யால் கடித்து வெட்டினான்.
" ஐய்யோ ! இப்போ தான் பாத்திரம் கவுவின..."
" பராவாலே...! " அவளின் நகத்தை கடித்தப்படி சொன்னான்.
" ஒரு மாச ஊருல இருந்தியே...! உங்க சொந்தகார எல்லாரு வீட்டுக்கு போனீயா..!!" என்றான்.
" எங்க டைம்மே இல்ல. அம்மாவோட கோயிலுக்கு போனேன். அண்ணா பசங்களோட விளையாடுவேன். உங்க கிட்ட போன் பேசுனேன். அவ்வளவு தான்."
" ஒரு மாசமா இந்த வேல தானா ???"
" பின்ன... நம்ப ஊரு மாதிரி சுத்தி பாக்குற மாதிரி அந்த ஊருல எதுவும் இல்லையே...."
வடது கையில் நான்கு விரலில் நகத்தை எடுத்து விட்டு கட்டை விரலின் நகத்தை எடுத்து காகிதத்தில் போட்டான்.
" அப்புறம் சொல்ல மறந்திட்டேன். உங்க பெரியம்மாவ கோயில்ல பார்த்தேன். வீட்டுக்கு வர சொன்னாங்க... எனக்கு தான் போக நேரமில்ல. அத்த வீடு, சித்தி வீடு போறத்துக்கு சரியா இருந்துச்சு...."
" அடிபாவி ! இப்போ தான் எங்கையும் போகல சொன்ன..."
" அதுக்காக சொந்தகார வீட்டுக்கு போகமா இருப்பாங்களா..."
ஒரு மாச பிரிவில் தன் சொந்தகாரர்கள் வீட்டில் போகாதத் பெரிதாக தெரியவில்லை. அவள் நகம் தான் பெரிதாக தெரிந்தது. பொறுமையாக இடது கையில் விரல்களில் நகத்தை கடித்தான்.
" ஆமா ! எங்க மாமாவுக்கு 500 ரூபா தரணும் சொன்னனே தந்தியா....!"
" இல்லங்க...! அண்ண பசங்களுக்கு எதுவும் வாங்கிட்டு போலியா.... பொம்மை வாங்கி கொடுத்திட்டேன்..."
" ஐந்நூறு ரூபாய்க்கும் பொம்மையா..." என்று நடுவிரல் நகத்தை கடித்தபடி அதிர்ந்தான்.
" பின்ன...! பெரிய அண்ணன் பசங்க இரண்டு, சின்ன அண்ண பசங்க மூனு... ஆளுக்கு 100 ரூபா வச்சாலும்... ஐந்நூறு வருதா..."
"ம்ம்ம்....சரி..." என்று ஆள்காட்டி விரலை கடித்தான்.
இந்த சமயத்தில் ஐந்நூறு ரூபாய்க்கு சண்டை போடுவது சரியில்லை என்பதற்காக அமைதியாக இருந்தான். கட்டை விரல் நகத்தை கடித்து, நகங்கள் வைத்த பேப்பரை குப்பையில் போட்டான்.
தன் சொந்தக்காரர்களை பார்க்காதது சிதம்பரத்துக்கு பெரிதாக தெரியவில்லை. பெரிதாக இருந்த நகம் வெட்டியாகிவிட்டது. எதுவாக இருந்தாலும் காலையில் பேசலாம். சண்டை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.
மல்லிகாவை படுக்க வைத்து சிதம்பரம் அவள் மேல் படுத்து முத்தமிட தொடங்கினான். நேற்று அவனை கீறிய நகம், இன்று இல்லாதது சிதம்பரத்துக்கு நிம்மதியாக இருந்தது.
1 comment:
கதை அருமை தல...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
Post a Comment