வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, May 6, 2008

ராம். கோபலனுக்காக இதோ தசாவதாரம் கதை !!தசாவதாரம் கதை படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம். கோபாலன் வழக்கு போட்டுள்ளார். அவருக்காக இந்த தசாவதாரம் கதையை வெளியிடுகிறேன்.

வயதை குறைத்து இளமையாக காட்டிக் கொள்வதில் கமலுக்கு நிகர் கமல் தான்.

12 ஆம் நூற்றாண்டில் இருந்து கதை துவங்குகிறது. குலோத்துங்க மன்னன் ( நெப்போலியன் ) போரில் தோல்வியுற்ற விரக்தியில் தன் நகரத்தில் இருக்கும் பெருமாள் சிலையை கடலில் தூக்கி ஏறிய சொல்கிறார். கோயிலில் பணி புறியும் கமல் இதை எதிர்க்கிறார். அதனால், அவரையும் சேர்த்து பெருமாள் விக்கிரகத்தை கடலில் எறிகிறார்கள்.

இப்போது கதை 12ஆம் நுற்றாண்டில் இருந்து 21ஆம் நூற்றாண்டுக்கு நகர்கிறது. அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜேன்டுக்கள் மல்லிகா உட்பட கடலில் விழுந்த பெருமாள் விக்கிரகத்தை தேடி இந்தியா வருகிறார்கள். காரணம், அந்த விக்கிரகத்தில் விஞ்ஞானப் பூர்வமான சக்திகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அங்கு பணி புறியும் விஞ்ஞானி கமல் சி.ஐ.ஏ எஜேன்டுக்கு தெரியாமல் விக்கிரகத்தை காப்பற்ற இந்தியா வருக்கிறார். அசின் அவருக்கு உதவியாக இருக்கிறார். பாட்டி கமல் பல நூற்றாண்டுக்கள் முன் நடந்த சம்பவந்தை கூறி விஞ்ஞானி கமலுக்கு உதவி செய்து, பெருமாள் விக்கிரகத்தை இந்தியாவை விட்டு தூக்கி செல்லாமல் காப்பற்றுவது தான் மீது கதை. இதில் அமெரிக்க அதிபர் வேடத்தில் வருவதும் கமல் தான்.

கதையை உறுதி செய்துக் கொள்ள திரைப்படத்தை பார்க்கவும். :)

படம் பார்க்காமல் சர்ச்சை செய்து பெயர் வாங்வதில் அரசியல்வாதிகளுக்கு அடுத்து, ஆன்மீகவாதிகளும் இறங்கிவிட்டனர்.

6 comments:

Anonymous said...

See Please Here

Anonymous said...

Thanks for your swift post.
Great!!

வெங்கட்ராமன் said...

/**************
படம் பார்க்காமல் சர்ச்சை செய்து பெயர் வாங்வதில் அரசியல்வாதிகளுக்கு அடுத்து, ஆன்மீகவாதிகளும் இறங்கிவிட்டனர்.
**************/

நண்பரே, இப்பொழுதெல்லாம் அரசியலும் ஆன்மீகமும் ஒரு சாயம் தான், உள்ளே இருப்பது ஆனவமும் ஆசையும் தான்.

பிரேம்ஜி said...

Gugan! Story line is intresting.
Please dont approve "Malware" comments like the first one.

Sridhar Narayanan said...

நடுவில் வரும் பஞ்சாபி கமல்? ஆதிவாசி? சுனாமி? அந்த பகுதிகளைப் பற்றி ஒன்றுமில்லையா? :-)

சர்ச்சை கதையில் அல்ல. சைவம் வளர்க்க குலோத்துங்க சோழன் வைணவத்தை வளரவிடாமல் செய்ததை எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் என்று நினைக்கின்றேன். Unified இந்து மதம் என்ற கோட்பாட்டை முன் வைக்கும் சங் பரிவாருக்கு இப்படிப்பட்ட பழைய சைவ / வைணவ பிரச்சினைகளை வைத்து பிரும்மாண்டமாக படம் தயாரிப்பது சங்கடம் தரும் செயல்தான்.

அதுவும் தில்லையின் இன்றைய பிரச்சினைகளோடு இந்த கதை எப்படி ஒட்டி வரப்போகிறது என்பதும் கேள்விக்குறிதான்.

கதையில் இருக்கும் 10 முக்கிய பாத்திரங்களையும் தானே ஏற்று நடிக்கிறார் என்பதைத் தவிர தசாவதாரம் என்ற தலைப்புக்கும் கதைக்கும் வேறு எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.

படம் வெளிவந்த பிறகுதான் பல கேள்விகளுக்கும் விடை தெரியும் போல.

ரசிகன் said...

நன்றிகள்:)

LinkWithin

Related Posts with Thumbnails