இலக்கிய நிகழ்வில் ஒன்றில் முத்த பத்திரிக்கையாளர் ’மின்னூர்’ சீனிவாசன் அவர்கள் நேருவைப் பற்றி உரையாற்றினார். நேருவின் மீது எனக்கு ஆர்வம் இல்லை என்றாலும், சீனிவாசன் அவர்களின் உரையை கேட்பதற்காக அமர்ந்தேன். சில தகவல்கள் உண்மையிலே மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது.
**
அறிஞர் அண்ணா அவர்கள் நேருவின் கருத்துக்கு எதிராக மேடையில் பேசியது நேருவின் காதுக்கு சென்று இருக்கிறது. அப்போது, நேரு முதல்வர் ராஜாஜியை தொடர்பு கொண்டு கேட்ட போது ராஜாஜி, “ Don’t worry Nehruji. I will Suppress them” என்றார்.
அதற்கு நேரு, “நான் அவர்களை கட்டுப்படுத்த சொல்லவில்லை. உங்கள் மாநிலத்திற்குள் ஒரு கலாச்சார ஏக்கம் தெரிகிறது. அதை இங்கு இருந்து என்னால் உணர முடிகிறது. அதை கவனித்து சரி செய்யுங்கள்” என்றார்.
**
ராஜாஜி கவர்மெண்ட் ஜென்ரல் பதவியில் இருந்து ஓய்வு பெரும் விழாவில் எல்லோரும் ராஜாஜியை பெருமையாக பேசினார்கள். அவரைப் பற்றி நேரு பேசும் போது, “ இதயத்தின் பங்கு இல்லாமல் எப்படி மூளை பலத்தை கொண்டு பொதுவாழ்க்கையில் இவரால் நிர்வாகம் செய்ய முடிகிறது என்பதை பல முறை பார்த்து வியந்துள்ளேன்” என்றார்.
ராஜாஜி இதயமில்லாமல் நிர்வாகம் செய்தார் என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.
**
நேரு இந்தியாவை நான்கு மாநிலமாக (வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு) பிரிக்கலாம் என்று எண்ணிய போது, எல்லா தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், காமராசர் மட்டும் ஏற்றுக் கொள்ள்வில்லையாம். அதற்கு அவர் கூறிய பதில், ” எங்க தமிழ் நாட்டுக்காரங்கள் ஒத்துக்க மாட்டாங்க” என்றார்.
ஒரு சில கருத்தின் காரணமாக நேருவும் நான்கு மாநிலமாக இந்தியாவை பிரிக்கும் எண்ணத்தை கைவிட்டார்.
**
நேருவின் மொழிகள்
I am not Socialist. I am not communist. I am an Individualist.
There is one way traffic in Time.
1 comment:
Interesting!
Post a Comment