மனிதர்கள் யாரையும் சந்தித்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் போதும். வாழ்க்கையில் ஏதேதோ பிரச்சனைகள், சிக்கல்கள் எனக் கூறுவர். அதனால் என் முன்னற்றமே தடைபட்டு வருகிறது. அதனால் நிம்மதி இல்லை என்று கூறுவதை கேட்க முடிகிறது. ஆனால், எந்த ஒரு பிரச்சினைக்கும், சிக்கலுக்கும் காரணம் நாம்தான் என்பதையும், அதற்கான தீர்வும் நம்மிடமே உள்ளது என்பதையும் பலரும் உணர்ந்ததாக தெரியவில்லை. அதனால் தான், நமது தமிழ் மூதுரையில், ”தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று கூறப்படுள்ளது என்பதை எண்ணிப் பார்த்தாலே பொதும். நமது நம்மால் தீர்க்க முடியும் என்பதுடன், வராமலும் தடுத்துக் கொள்ள முடியும் என்பதை அறியலாம். ஆம், நமது சிக்கல்களுக்கான தீர்வு நம்மிடமே உள்ளது. பூட்டுப் போட்டது நாம்தான். எனவே, சாவியும் நம்மிடம் தான் உள்ளது. அதனை முறையாக பயன்படுத்த வேண்டும். தவறவிட்டிருந்தால் தேடி எடுத்து பயன்படுத்த வேண்டும்.
பென்சில் வாழ்க்கை
இதனை வலியுறுத்த, ஆசிரியர் சுரேகா ”நீங்கதான் சாவி” என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இதற்காக ‘பென்சில் வாழ்க்கை’ என்ற கட்டுரை வரையில் 19\8 தனித்தனி தலைப்புகளில், நாம் செய்யும் தவறுகளையும் அதற்கான தீர்வுகளையும் எளிய தமிழில், பலருக்கு புரியும் எடுத்துக்காட்டுடன் விளக்கி உள்ளார். ’பென்சில் வாழ்க்கை’யில் நாம் நம்மை எப்போதும் கூர்மை படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த, நமக்கு ‘அறிவு விஷயத்தில் போதும்கிற மனசும், பண விஷயத்தில் போதாதுன்கற மனசும் இருக்கு’. அது அப்படியே மாறினா போதும், வெற்றிக்கு நிரந்தர நண்பனா ஆகிடலாம் என்பதை சிறப்பாக கூறியுள்ளார். இது போன்ற பல்வேறு விஷயங்களும் இந்த புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனை படித்து முடிக்கும் யாருக்கும் சிறு மாற்றமாவது நிச்சயம் கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.
- மதிவாணன்
இணையத்தில் புத்தகம் வாங்க.... இங்கே
1 comment:
நன்றி தலைவரே!
Post a Comment