வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, June 5, 2012

நண்பேன்டா !!!

"அறிவு கெட்டவங்க... போன் பேசிக்கிட்டே வண்டிய ஓட்டுறது. யார் மேலாவது இடிக்க வேண்டியது." என்று சாலையில் போகிற கிழவர் பைக்கில் செல்லும் ஜெகனை திட்டிக் கொண்டு இருந்தார்.

காதில் ப்ளூ டுத் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு வண்டி ஒட்டும் ஜெகனுக்கு சாலையில் அவனை யார் திட்டினாலும் கேட்க போவதில்லை.

"சும்மா...சும்மா... எத்தன வாட்டிடா தேங்க்ஸ் சொல்லிட்டே இருப்ப !" என்று வண்டி ஓட்டிக் கொண்டு கேட்டான் ஜெகன்.


எதிர்முனையில், " நீ பண்ண உதவிக்கு என்னால தேங்க்ஸ் மட்டும் தான் இப்போ சொல்ல முடியும். கை மாற வேற எதுவும் செய்ய முடியாதுடா..." என்றான் ஜெகனின் நண்பன் வினோத்.

"டேய் ! ரொம்ப சென்டிமெண்ட்டா பேசற...."

"நீ மட்டும் இல்லனா. என் குடும்பமே என்ன அயிருக்கும் நினைச்சுக் கூட பார்க்க முடியல..."

ஜெகன் பேசிக் கொண்டு வரும் போது சாலை ஓறமாய் இருந்த ட்ராபிக் போலீஸ் ஜெகனை கை காட்டி நிறுத்தினார்.

ட்ராப்பிக் போலீஸ் "ஹெல்மட் மாட்டாம, போன் பேசிட்டு வண்டிய ஓட்டுற.... ரூ.1000 பைன் எடு"

 "ஸார் ! ஹெல்மட் போடாததுக்கு வேணும்னா ரூ.100 பைன் போடுங்க... நா போன் பேசல்ல..."

"என்ன பார்த்த குருடன் மாதிரி தெரியுதா. நீ தான் பேசி கிட்டே வந்தத நா பார்த்தேன்."

" நான் பேசல சார் ! பாடிட்டே வந்தேன்." என்றான்.

"நக்கல்லா ! உன் போன எடு." என்று போனை வாங்கி போலீஸ் கான்ஸ்டெபிள் பார்த்தார். கடைசி ஒரு மணி நேரமாக ஜெகன் யாருக்கும் போன் செய்யவில்லை. அவனிடம் வேறு ஏதாவது போன் இருக்கிறதா என்று கூட சோதனை செய்து பார்த்தார். அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை.

ரூ.1000 சொல்லி ரூ.500 கரக்கலாம் என்று இருந்த கான்ஸ்டெபிளுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. வந்தவரை லாபம் என்று ரூ.100 பைன் போட்டார். ஜெகன் மறக்காமல் ரசீதை கேட்டு வாங்கி கொண்டான்.

பணத்தை கட்டிவிட்டு பைக் எடுத்தான்.

"என்னால மறுபடியும் உனக்கு பண செலவு" என்றான் வினோத்.

"மறுபடியும் முதல்ல இருந்தா...!" என்று சொல்லிக் கொண்ட ஜெகன் வண்டியை சுடுக்காட்டில் நிறுத்தினான்.

"உன்ன மாதிரி பிரெண்ட் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும். என் கடன எல்லாம் அடைச்சுட்ட . என் குடும்பம் நிம்மதியா இருக்குறதுக்கு நீ தான் காரணம்"

" நீ பண்ண காரியத்துல உன் குடும்பம் நிம்மதியா இருக்கும்னு நினைக்கிறீயா ! பண பிரச்சனனு எனக்கு ஒரு வார்த்த சொல்லியிருந்தா. நா உதவி செஞ்யிருக்க மாட்டேன். இப்போ எல்லா பிரச்சனை முடிஞ்சு போச்சு. நீ பண்ணது மாத்தமுடியுமா" என்று கோபமாக கேட்டான் ஜெகன்.

"மாத்த முடியாது தான். இனி புரிஞ்சு என்ன பண்ணபோறேன். என்ன சுடுகாடுல வரைக்கு வந்து விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்டா. நா போறேன்டா" என்று சொல்லி நடந்தான் வினோத்.

கொஞ்சம் தூரம் சென்றதும், "ஜெகன் ! என் குடும்பத்த பத்திரமா பார்த்துகோடா !!" என்று கூறி தன் கல்லறைக்குள் மறைந்தான்.

ஜெகன் கண்ணில் நீர்ப்பட அவனையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails