ஒரு இலக்கிய நிகழ்வில், நண்பர் ஒருவர் "ஒரு செல் உயிர்கள்" என்ற கவிதை புத்தகத்தை எனக்கு பரிசாக அளித்தார். வி.டெல்லிபாபு எழுதியது.
நூல் அட்டை வடிவமும், கவிதைக்கான படங்களும் பார்த்த மாத்திறத்தில் படிக்க ஈர்த்தது. சில கவிதைகள் ரசிக்கும் படியாகவே இருந்தது.
அந்த நூலின் நான் மிகவும் ரசித்த கவிதைகள்.
சாயங்கால
வரவேற்பறை
வசதியான
இருக்கைகளில்
வந்து அமர்ந்தனர்
குடும்பத்தில் எல்லோரும்
கதாபாத்திரங்கள்
பேசிக் கொண்டன
**
ஒரே நிறம் தான்
கருப்பு பலகையும்
சவபெட்டியும்
இரண்டும் போதிக்கின்றன
முதலாவது அவனுக்கு
இரண்டாவது
அவன் மற்றவனுக்கு
**
நாளைய மழழை
அம்மா...
என்ன பறவை அது ?
கத்துகிறதே
உன் ரிங்டோன் போல
**
வேட்டி கட்டிய
வேடத்திற்கு
விருது வாங்க
'நடிகர்' வந்தார்
'டை' கட்டி
**
அரசியல்வாதி
இவர்கள்
குதிரை பேரத்தில்
வாங்கிய மனிதர்கள்
**
வந்துவிட்டது
தடை
பைகளுக்கு
குப்பைகளுக்கு ??
**
தாளுக்குத்
தீயிட்ட பின்
கல்வெட்டாயின
உன் கடித வரிகள்
**
இன்று, அதிகமாக வெளிவரும் நூல் என்றால் 'கவிதை' நூல்கள் தான். அதே சமயம், வாசகனிடம் சென்றடையும் நூல்களில் குறைவாக சென்றடைவதும் கவிதை நூல் தான்.
வணிக நோக்கத்திற்காக எத்தனையோ கவிதைகள் இன்னும் அச்சுக்கு வ்ராமல் இருக்கிறது.எத்தனையோ கவிஞர்களை தொலைத்திருக்கிறது, இந்த சமூகம்.
கவிதை நூல்கள் பட்டியல் நீளுவதைப் போல, தொலைந்த கவிஞர்களின் பெயர் பட்டியலும் நீண்டுக் கொண்டே போகிறது.
2 comments:
வாழ்த்துக்கள் தொடருங்கள்
கவிதைகள் எல்லாம் நல்லாயிருக்கு...!!!
Post a Comment