யாரும் இந்த அளவுக்கு என்னை அசிங்கப்படுத்தியதில்லை. முதுகுக்கு பின்னாடி இது போல் பேசுவார்கள் என்று தெரியும். ஆனால், மேடையில் அத்தனை பேர் முன்னால் எனக்கு திருமணமாகததை இழிவு படுத்தி அந்த சகோதரி பேசி இருக்க கூடாது.
"இப்போது... பெண்களை அடிமைப்படுத்துவது பெண்கள் என்ற அணியில் பேச கே.கேவை அழைக்கிறேன். வாருங்கள் கே.கே.... எங்கள் காதுகள் கேட்க காத்திருக்கிறது" என்று நடுவர் மாசிலாமணி அறிவித்தார்.
கே.கே எழுந்து மைக்கை தொடும் வரை கை தட்டலும், விசிலும் ஒளித்தது.
" மேடையில் வீற்றுயிருக்கும் நடுவர் மாசிலாமணிக்கும்... ஆண்களுக்காக பேச வந்திருக்கும் எங்கள் அணிக்கும், வீட்டில் ஆண்களை அடிமைப்படுத்தி பெண்களுக்காக பேச வந்திருக்கும் எதிர் அணிக்கும் என் தாழ்மையான வணக்கம்" என்று தொடங்கியதுமே கே.கே வுக்கு கைத்தட்டல் கிடைத்தது.
"பெண்கள் வேலைக்கு போக கூடாது என்று அவர்களின் வளர்ச்சியைதடுப்பது பெண்ணடிமை தனமோ... ஆண்கள் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்து, கவிஞனாக, விளையாட்டு வீரனாக,இசை மேதையாக உருவாக்காமல் செய்வது ஆண்ணடிமை தனம்.
குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சுதா நாராயணமூர்த்தி சொன்னதால் தான், நாராயணமூர்த்தியால் 'இன்போசிஸ்' என்ற பெரிய நிறுவனத்தை உருவாக்க முடிந்தது. சுதா போல் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள். மனைவி, குழந்தைகளை காப்பாற்ற எத்தனை பேர் குமாஸ்தாவாகவே இருக்கிறார்கள். குடும்பத்தால் ஆண்களே அடிமையாகி இருக்கும் போது அவர்கள் எப்படி பெண்களை அடிமை படுத்த முடியும்.
அரங்கத்தில் சிரிப்பொலியுடன் கைதட்டல் பலமாய் ஒலித்தது. கே.கே எவ்வளவு சீரியஸான தலைப்பாக இருந்தாலும் தன் நகைச்சுவை பேச்சால் தன் அணிக்கு வெற்றி பெற்று தந்துவிடுவார். அதனாலே,மாசிலாமணி மேடை பட்டிமன்றங்களில் கே.கே எப்போதும் இருப்பார். அவர் பேச்சை கேட்கவே ஒரு தனி கூட்டம் வரும்.
"குடும்பத்திற்குள் சிறை கைதியாக இருக்க பெண்கள் விரும்புகிறார்கள். உடல் உழைப்பு, அறிவை சிரமப்படுத்தி வேலை செய்வது வீட்டில் இருக்கும் பெண்கள் விரும்புவதில்லை. வேலைக்கு செல்லும் பெண்கள்,தான் பெண் என்று சொல்லியே எல்லா இடத்திலும் சலுகையை எதிர்பார்க்கிறாள். இதில் பெண் தான் தன்னை அடிமையாக்கி கொள்ளுகிறாளே தவிர ஆண் எங்கிருந்து வந்தான் ?"
கே.கே பேசிய ஐந்து நிமிடங்கள் அரங்கம் மூழுக்க சிரிப்பு மழை தான். எப்படியும், அவர் அணி தான் வெற்றி பெரும் என்று பலர் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
" என்ன ஒரு கருத்தை சொன்னார் பாருங்க...! ஆண்களே குடும்பத்துல அடிமையா இருக்கான். இத தெரிஞ்சு தான் கே.கே. கல்யாணமே பண்ணிக்கல போல. சரி ! பெண்களை ஆண்கள் தான் அடிமைப்படுத்துகிறார்கள் பேச வரப்போறது... அம்மையார் கோமதி அவர்கள். உங்கள் திறமையான பேச்சு உங்கள் அணிக்கு அவசியம். கோமானை போல் காப்பாற்ற கோமதியை மேடைக்கு அழைக்கிறேன்" என்று நடுவர் மாசிலாமணி அறிவித்தார்.
" மேடையில் அமர்ந்திருக்கும் நடுவருக்கும், சக பேச்சாளருக்கும்... குறிப்பாக திருமணமே செய்துக் கொள்ளாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றிய கே.கேவுக்கும். வணக்கம்" என்று சொல்லி கோமதி தொடங்கினார்.
ஆரம்பத்திலே தன்னை தாக்கியது கே.கேவிற்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது.
" பெண்ணை பற்றி தெரியாமல், பெண்ணின் மனதை தெரியாதவர்,பெண்ணோடு வாழதாவர்.... பெண்ணின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் பேசுவதில் எனக்கு பெரிய வியப்பு ஒன்றுமில்லை. ஆனால், அவர் பேசியதை கேட்டு நடுவர் முதல்க் கொண்டு கை தட்டியது எதோ ஆணாதிக்க அரங்கித்திற்கு வந்திருக்கிறேன் என்று புரிகிறது."
இவ்வளவு நேரம் அரங்கத்தில் உள்ளவர்களை சிரிக்க வைத்த கே.கே.,கோமதி பேச தொடங்கியது அமைதியானார்கள்.
" கே.கே திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்று சொல்வதை விட அவரின் ஆணாதிக்க குணத்தை பார்த்து எந்த பெண்ணும் திருமணம் செய்ய முன் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்".
தனக்கு கிடைத்த ஐந்து நிமிடத்தில் மூன்று நிமிடமும் கே.கேவின் தனிப்பட்ட வாழ்க்கையை தாக்குவதில் செலவிட்டார். கடைசியாக அவர் தயார் செய்ய இரண்டு நிமிட பேச்சையும் பேசி முடித்தார்.
நடுவர் மாசிலாமணி தன் தலைமை உரையை முடித்து, தீர்ப்பு சொல்ல இரண்டு தரப்பு வாதங்களையும் முன் வைத்தார்.
இறுதியில், " பெண்களை அடிமைப்படுத்துவது பெண்களை விட ஆண்கள் தான் என்று என் தீர்ப்பை" வழங்குகிறேன் என்று முடித்து தான் ஆணாதிக்கவாதி அல்ல என்பதை காட்டிக் கொண்டார்.
பட்டி மன்ற நிகழ்ச்சி முடிந்ததும், கோமதி ஒருவர் மனதை புண்படுத்திவிட்டோம் என்ற குற்றவுணர்வு இல்லாமல் சென்றார். கே.கே தன் சொந்த வாழ்க்கை மேடையில் விமர்சணமாக்கப்பட்டது மிக வருத்தமாக இருந்தது. நகைச்சுவைக்காகவும் ,தான் இருந்த அணிக்கு சாதகமாக பேசவும் சொன்ன கருத்துக்கள் தனிப்பட்ட விமர்சணமாக மாறியதற்கு நடுவர் கூட வருத்தம் தெரிவிக்காமல் இருந்தது மேலும் கஷ்டமாக இருந்தது.
கல்லூரி பேராசிரியாக இருந்து, எழுத்தில் அதிகம் ஆரவம் கொண்டவர். ஆரம்பத்தில் குறைந்த சம்பளம் என்பதால் திருமணத்தை தவிர்த்தார். பிறகு எழுத்து உலகில் அதிக கவனம் செலுத்த முடியாது என்று கொஞ்ச நாள் திருமணத்தை தவிர்த்தார். திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது வயது முப்பத்தியெட்டானது. அதன் பிறகு திருமணம் செய்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.
பெண் சுகம் தேவைப்படும் போதும், மனதில் சோகம் இருக்கும் போதும் பத்மா வீட்டுக்கு செல்வான். விஸ்கி, பிராந்தியை விட அதிகம் போதை கொடுப்பவள் என்று கே.கே அடிக்கடி சொல்லுவான். எல்லா சோகத்திற்கும் காரணம் பெண் தான். மருந்து பெண் தான். இப்போது அவனது கால்கள் பத்மாவின் வீட்டை அடைந்தது.
" ரண்டி சாரு....! பாகவுண்டாரா " என்று சிரித்த முகத்தோடு வரவேற்றாள். பத்மாவின் விபச்சார விடுதியில் வரும் கஸ்டமர்களுக்கு எல்லா பெண்களுக்கும் கே.கே மீது தனி மரியாதை உண்டு. காரணம்,பலர் அவர் எழுத்தை படித்தவர்கள் அல்லது கேள்விப்பட்டவர்கள். இன்னொரு காரணம், அந்தரங்கரத்தில் அவன் கில்லாடி.
" ஏமி சார் ! மூத்தி டல்லுகாவுந்தி... தல வலிக்குதா. ஏ சுஜா ! ரைட்டர் ஸாருக்கு மந்து எத்துரா..." என்று சுஜாவை கூக்குரலிட்டு அழைத்தாள்.
" அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் பத்மா..." என்று பத்மாவின் மாப்பிளை உபச்சாரத்தை தவிர்த்தான்.
"பத்மா ! எந்த பொண்ணு ப்ரீயா இருக்கா...." என்று கேட்க, " ஐயோ ரைட்டர் ஸாரே ! மிரு வௌச்ச தெளிச்சிவுண்டே இரண்டு அம்மாயி இங்கே வச்சிருப்பேன். பக்கத்து ஏரியாவுல ஒரு தலைவருக்கு பொறந்த நாளாம். இப்போது தான் எல்லாம் அம்மாயியும் போச்சிங்கோ... சுஜா மட்டும் நாக்கு தோடுகா வுந்து.." என்று சொல்ல, சுஜா தலைவலி மருந்தோடு வந்தாள்.
" சரி சுஜா இருக்கால்ல... அவ போதும்" என்றான்.
" உங்களுக்கு ஓ.கே ! எனக்கு என்ன ஸாரே ! சுஜா அம்மா ! ஸாரு பாக கவனிச்சிக்கோம்மா..." என்று சொல்லி சுஜாவோடு ரைட்டரை அனுப்பி வைத்தாள். அறைக்கு செல்லும் முன் பார்ட்டி கொடுக்கும் பணத்தை வைத்து பத்மா விரலை காட்டுவாள். எத்தனை விரல் காட்டுகிறாளோ ஆந்தை முறை சம்மதிக்க வேண்டும் என்பது அந்த விடுதின் சம்பாஷை. ஆனால், கே.கேவுக்கு மட்டும் விதி விளக்கு உண்டு. கே.கேவுடன் செல்லும் பெண்களிடம் எண்ணிகை விரலை பத்மா காட்டமாட்டாள்.
அந்த விடுதியில் சுஜாவின் ரேட்டு தான் கம்மி. பார்க்க சுமாரான உருவம்,ஆள் கொஞ்சம் கருப்பு என்பதால் பல சமயம் விடுதிக்கு வரும் ஆண்கள் அவளை தேர்ந்தெடுப்பதில்லை. கே.கே பல முறை அந்த விடுதிக்கு வந்திருந்தாலும் சுஜாவுடன் முதல் முறையாக இருக்க போகிறான்.
கே.கே வருவதாக தெரிந்தால் போதும் மற்ற பெண்கள் முந்தியடித்துக் கொண்டு அவன் முன் வந்து விடுவார்கள். எல்லாம் கே.கேவின் அந்தரங்க ரகசியதிற்காக தான்.
அறைக்குள் நுழைந்ததும் சுஜா தனது புடவையை நீக்கினாள்.
" என்ன ? உனக்கு அவசரம்மா "
" ரூம்குள்ள வந்ததும் செய்யுறது தானே ! நீங்க என் ட்ரெஸ்களட்டனுமா?"
" செக்ஸ் போது பொண்ணுங்க தான் அவங்க துணிய களட்டனும். ஆம்பளைங்க களட்டினா அவங்க விருப்பதுக்கு மாற செய்யுற மாதிரி"
சுஜா சிரித்துக் கொண்டு , " ட்ரிஸ்ஸ யார் களட்டுனா என்ன ? செக்ஸ் நடக்குறது தான் முக்கியம் இருக்குற இடத்துல வித்தியாசமா பேசுறீங்க !" கூறினாள்.
கே.கேவின் பேச்சு சுஜாவுக்கு மேலும் பேச வேண்டும் என்ற ஆரவத்தை தூண்டியது. அரை மணி நேரம் மேல் அந்த அறைக்கு என்ன செய்ய வந்தோம் என்று மறந்து சுஜா கே.கேவின் நகைச்சுவை பேச்சில் ஆழ்ந்துவிட்டாள்.
மணியாவதை உணர்ந்தாலும் வாங்கிய பணத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சியில் சுஜா, " என்ன சார் ! நைட் முழுக்க பேசிக்கிட்டே இருக்க போறிங்களா " என்று கேட்டாள்.
" ஓ.. நா வந்து ரோம்ப நேரமாச்ச " என்று சிரித்தப்படி சுஜாவின் தோள் மீது கைவைத்தான்.
" என் ட்ரிஸ்ஸ களட்ட போறீங்களா "
" உனக்கு என்ன புடிச்சிருந்தா... ட்ரிஸ்ஸ நீயே கலட்டு...” என்று கே.கே சொல்ல, சுஜா தன் உடைகளை ஒவ்வொன்றாக அகற்றத்தொடங்கினாள். கே.கேவுன் தன் ஆடைகளை துறந்த துறவியானான். இருவரும் பிறந்த மேணியில் கட்டிலில் புரண்டனர்.
கே.கே.வின் இரண்டு கையும் சுஜாவின் உடலில் இருக்கும் எல்லா பாகங்களை தீண்டியது. உச்சி முதல் பாதம் வரை கே.கேவின் உதடுகள் சுவைத்தது. கொஞ்சம் மூச்சு தினறியது. வியர்வை துளிகளில் அனைந்த விளக்கின் நடுவில் கே.கேவின் மோகத்தின் புன்னகை மின்னியது.
"சுஜா ! எனக்கு இது போதும். உனக்கு மூட் இருந்தா என்ன அனுபவிச்சிக்கோ" என்றான்.
சுஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் தேவை தீர்ந்தும், தன் பசியாற்றிய பெண்ணுக்கும் பசி இருக்கும் என்பதை கே.கே சொன்னது வியப்பாக இருந்தது.
ஸீரோ வாட்ஸ் பள்ப் வெளிச்சத்தில் கே.கே அதிசய பிறவிப் போல் பார்த்தாள்.
" என்ன சுஜா ! அப்படி பார்க்குற"
" பணத்திற்காக வர்றவங்க ! அவங்களோட உடம்பு பசியை மட்டும் தான் பார்ப்பாங்க. நீங்க உங்க பசி தீர்த்து வச்சவங்க பசி பத்தி யோசிக்கிறீங்க...நீங்க ரொம்ப பெரிய மனுஷன் ஸார் !!”
" என்ன தான் விபச்சாரியா இருந்தாலும். ஒரு ஆண்ணோட படுக்கும் போது உங்களுக்கு செக்ஸ் பீலிங் இருக்கும்ல. நா பணத்துக்காக வந்தாலும் உங்க உணர்வுக்கு மதிப்பு கொடுக்குறேன். அவ்வளவு தான்.இதுக்கு போய் என்ன பெரிய மனுஷன் சொல்லுற. எனக்கு வயது 38 தானாவது”
சுஜாவின் கண்கள் அறியாமல் கண்ணில் இருந்து கே.கே மீது இரண்டு துளி விழிந்தது.
" என்ன சுஜா ! அழுவுறியா..."
" ஸார் ! நா பல பேரோட படுத்திருக்கேன். கொடுத்த காசுக்கு மேல அனுபவிக்கனும் தான் நினைப்பாங்க. எந்த ஆம்பளையும் அவங்கள அனுபவிக்க விட்டதில்ல.....”
“உண்மையான பெண்ணியவாதி விபசாரிய கூட கட்டுல சமபங்கு தரவன் தான். இப்படி நீ அழுவறதா இருந்தா நா போறேன்.”
சுஜா தன்னை அறியாமல் கே.கேவின் தோள்களை பிடித்து கட்டிலில் தள்ளினாள். கே.கே மீது தன் உடலை பாம்புப் போல் நெளிந்து சென்றாள்.
கே.கேவின் அந்தரங்க ரகசியம் சுஜாவுக்கும் தெரிந்தது.
1 comment:
தலைவா கில்மா கதை எல்லாம் எழுதுறீங்க !!!! இந்த ரேஞ்சுல போனா உங்க ப்ளாக் சூப்பர் ஹிட் ஆகிடும் போங்க
Post a Comment