வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, July 1, 2013

மத தீவிரவாதிகள்

மத தீவிரவாதம் என்று பேசும் போது உடனே மக்கள் பேசுவது 'இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றி தான். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் நடத்தும் குண்டு வெடிப்புகள், படுகொலைகள் தான் அவர்களுக்கு நினைவில் வரும் . உண்மையை சொல்லுவதென்றால் இஸ்லாமிய தீவிரவாதம் தொன்னூறு தொடக்கத்தில் தான் தொடங்கியது. அதுவும், அமெரிக்காவின் ஆப்கான் ஆதரவு என்ற பெயரில் வளர்த்த தீவிரவாத இயக்கத்தால் வந்தது. அதற்கு முன் மற்ற நாடுகளைப் போல இஸ்லாமிய நாட்டுக்குள் சில சில சண்டைகள், பிரச்சனைகள் நடந்திருக்கிறது.

மதத்தின் பெயரில் இஸ்லாமியர்கள் மட்டும் தான் தீவிரவாதம் நடத்துகிறார்களா ? என்றால் கண்டிப்பாக இல்லை.

எண்பதுகளில், தொன்னூறு தொடக்கத்தில் இந்தியாவுக்கு மிக பெரிய தலைவலியாக இருந்தது சீக்கிய தீவிரவாதம். கனிஷ்கா குண்டு வெட்டிப்பு, அரசு அதிகாரிகளை கொலை செய்வது, இந்திரா காந்தி படுகொலை என்று சீக்கிய தீவிரவாதத்தால் பல பிரச்சனைகளை இந்தியா சந்தித்துள்ளது.

இந்தியா இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலை உணர்ந்தது 1993ல் நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தான். ஆனால், அந்த தீவிரவாதத்தை உசுப்பி விட்டது பாபர் மசூதி இடிப்பு என்று இந்துக்கள் நடத்திய கலவரச் செயல். இது ‘இந்து தீவிரவாதம்’ என்பது சந்தேகமில்லை. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ இந்தியாவின் இஸ்லாமியர்கள் உதவி கிடைக்காமல் தவித்தப் போது, இந்த சம்பவத்தை வைத்து இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை உசுப்பிவிட்டது.

இலங்கையில் நடக்கும் புத்த பேரினவாதம். தங்கள் இனத்தை தவிர வேறு இனமே இருக்கக் கூடாது என்று நினைக்கும் தேசமாக மாறியிருக்கிறது. இது பௌத்த தீவிரவாதம் என்ற வார்த்தையை ஏன் யாரும் பயன்படுத்தவில்லை.

இந்து தீவிரவாதத்தைப் பற்றி திராவிட கழங்கள் அதிகம் பேசியிருக்கிறார்கள். அமெரிக்காவும், அதன் அடிவரிடிகளும் இஸ்லாமிய தீவிரவத்தைப் பற்றி உலகம் முழுக்க பரப்பியிருக்கிறார்கள். ஆனால், நாம் பேசாமல் தெரியாமல் இருக்கும் எத்தனையோ மத தீவிரவாதங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

உலகில் தீவிரவாதி தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகும் நாடுகள் என்று எடுத்துக் கொண்டால் ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா என்று வரிசைப்படுத்தி இருக்கிறது ஒரு புள்ளி விபரம். கடந்த இருபது ஆண்டுகளில் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்கள் இந்த நாட்டில் என்று கூறிப்பிட்டுயிருக்கிறார்கள். அதே சமயம், கடந்த இருபது ஆண்டுகளில் அடுத்த நாட்டுடன் போர் தொடுத்தவர்கள் என்று பட்டியலிட்டால் அதற்கு முதல் இடம் சந்தேகமில்லாமல் எல்லோரும் கை தூக்கி "அமெரிக்கா" என்பார்கள். ஆனால், அதற்கு அடுத்த நாடு என்று யாராவது சொல்ல முடியுமா ?

இஸ்ரேல்.

உலகில் மதத்தை முன் நிறுத்தி தீவிரவாத நடவடிக்கை செய்வத இஸ்லாம் மதத்தினர் என்று ஊடகம் காட்டிக் கொண்டு இருக்கிறது. காரணம், ஊடகத்தின் விளம்பரங்கள். பிரச்சாரங்கள். மதத்தை வைத்து ஒரு நாடே தீவிரவாத நடவடிக்கை செய்து வருகிறது. தாக்குதல் நடத்துகிறது. ஆனால், இதை போர் என்று சொல்கிறார்கள். இதை ஏன் ஜீயோனிச தீவிரவாதம் என்று யாரும் சொல்லவில்லை. பிரச்சாரம் செய்யவில்லை.

பிறந்து முழுசாக எழுபது வருடம் கூட ஆகவில்லை. ஒரு நூற்றாண்டு விழா கூட கொண்டாடாத தேசம். இவர்கள் நூற்றாண்டு விழா கொண்டாடினால் அமெரிக்க அண்ணன் வாழ்த்திவிட்டு கவிதைப் பாடி செல்வார்கள். ஏதாவது முன்னேற்ற தீட்டத்திற்கு பணத்தேவை என்றால், அமெரிக்க அண்ணன் ஓடிவந்து உதவுவான். போர் என்றால் சொல்லவே வேண்டாம். என்ன என்ன ஆயுதங்கள் வேண்டுமோ கேட்காமல் கொடுப்பான். புது ஆயுதங்களை அறிமுகப்படுத்தி பயற்சிக் கொடுப்பான். மொத்தத்தில், "முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... " என்ற பழைய பாடலை பாடி இஸ்ரேலை வளர்த்து விட்டது அமெரிக்கா தான்.

அண்ணன் முதல் இடத்தில் இருக்கும் போது, தம்பி இரண்டாவது இடத்தில் இருப்பது தானே நியாயம்.

அமெரிக்கா உலக போலீஸ் என்றால், இஸ்ரேல் மத்திய கிழக்கு போலீஸ். என்ன எந்த மத்திய கிழக்கு நாடும் இஸ்ரேலுடன் சுமுகமான உறவு இருந்ததில்லை. மத்திய கிழக்கில் எந்த தேசமும் இஸ்ரேலில் மீது மதிப்பும், மரியாதை இல்லை. ஆனால், இஸ்ரேலின் உளவாளிகள் ஒவ்வொரு நாட்டில் ஒழிந்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களுக்கு ஆபத்தாக எந்த நாட்டில் என்ன திட்டம் போடுகிறார்கள் என்பதை உடனே தகவல் அனுப்பிவிடுவார்கள். தங்களுக்கு பயனில்லை என்றாலும், அமெரிக்க அண்ணனுக்கு பயனாக இருந்தாலும் அந்த தகவலைக் கொடுத்து விஸ்வாசத்தைக் காட்டிக் கொள்வார்கள்.

கை விரலில் ப்ளேட் வெட்டி இரத்தம் வடியும் அளவில் தான் இஸ்ரேல் தேசம். ஆனால், மத்திய கிழக்கு பகுதியில் தலைவலியாக இருப்பவர்கள் இவர்கள். இஸ்ரேல் என்ற நாடு உருவானது இருந்து இவர்கள் நிம்மதியாக இருந்ததில்லை. மற்றவர்களையும் நிம்மதியாக இருக்க விட்டதில்லை.

இஸ்ரேல் என்ற ஒரு தேசம் உருவாகவில்லை என்றால் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற தீவிரவாத இயக்கங்கள் தோன்ற வேண்டியதில்லை. இஸ்ரேல் என்ற யூத தேசம் மட்டுமல்ல. யூத தீவிரவாத தேசம்.

5 comments:

குருநாதன் said...

பஞ்சாபிலும் டெல்லி வீதிகளிலும் சீக்கியர்களை கொன்று குவித்தார்களே! அந்த தீவிரவாதிகள் யார்?

சீக்கிய கலவரத்திற்கு காரணமான காங்கிரஸ்வாதிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லையே!! நீதி கேட்கும் சீக்கியர்கள் உங்கள் கண்ணுக்கு எப்படி தீவிரவாதிகளாக தெரிகிறார்கள்??

சக்கர கட்டி said...

உண்மையை பதிவாக்கியமைக்கு நன்றி

Barari said...

குருநாதன் அவர்கள் கட்டுரையை சரியாக படித்து புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.மீண்டும் ஒருமுறை படியுங்கள் நண்பரே.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

'மத பயங்கரவாதம்' ...?!

நான் அறிந்தவரை எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை கொலை செய்ய சொல்லி பயங்கரவாதத்தை போதிக்கவில்லை. ஆனால்... இன்று உலகில் 'பயங்கரவாதிகள்' இருக்கிறார்கள் என்றால்... அதற்கு எந்த மதமும் காரணம் அல்ல..! எனில், 'மத பயங்கரவாதம்' எப்படி முளைக்கிறது...? ஆட்சியாளர்களால்தான்..!

ஆமாம்...! மத பயங்கரவாதத்துக்கு முழு காரணமும் தவறான முறையில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களே. அவர்கள்தான் 'மத பயங்கரவாதம்' உருவாவதற்கு காரணம்..! அவர்கள்... செய்த தவறு என்ன..?

ஒரு குறிப்பிட்ட மதத்து மக்களுக்கு அநீதி இழைப்பது... ஒரு குறிப்பிட்ட மக்களின் செல்வத்தை அதிகார துழ்பிரயோகம் செய்து சூறையாடுவது... ஒரு குறிப்பிட்ட மத மக்களுக்கு சமநீதியோ, சம உரிமையோ தராதிருப்பது... தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மத மக்களின் உடமைக்கும் உயிருக்கும் சேதம் ஏற்படுத்துவது... அவர்களை அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தி ஆள்வது... என்ற இந்நிலை நீடிக்கும் போது... அந்த சமூகத்தில் என்றாவது ஒருவன் எதிர்த்து கேட்கும் ஒருவன் தோன்றினால்... அவனின் பின்னால் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அணி திரள்வார்கள். கையை காற்றில் ஓங்கி குத்தி... வாயை திறந்து கத்தி... தங்கள் உரிமையை நீதியை ஜனநாயக முறையில் கேட்பார்கள்.

இதற்கு நேரமியான அரசு செவிசாய்க்க வேண்டும். அல்லது நேர்மை தவறிய அரசு சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டாவது இருக்க வேண்டும். சில காட்டுமிராண்டி அரசுகள் இங்கேதான் மிகப்பெரிய தவறு செய்கின்றனர். அவர்கள் மீது தடியடி... துப்பாக்கிச்சூடு... என்கவுண்டர்... உயிர் மிஞ்சியவர்கள் சிறையிலடைப்பு... என்று ஏகப்பட்ட சித்திரவதை..!

இதன் பின்னே அந்த ஒடுக்கப்பட்ட மக்கள்... ஜனநாயக வழியில் போராடுவதை விட்டுவிட்டு... அரசுக்கு எதிராக அதே வழியில் ஆயுதத்தை தூக்குகிறார்கள்..! அது வெடிக்கும் போது... "மத பயங்கரவாதம்" பிறந்ததாக ஊடகங்களில் சொல்லப்படுகிறது..! அரசால் சொல்ல வைக்கப்படுகிறது..! இப்படி சொல்லப்படுவதை நான் மிக கடுமையாக மறுக்கிறேன்..!

வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் பகிரங்க ஜனநாயக உரிமைக்குரலை துப்பாக்கிச்சூடு /தடியடி கொண்டு அரசாங்கம் ஒடுக்கும் போதே ஆட்சியாளர் எந்த மதமோ அந்த மதத்தின் 'மத பயங்கரவாதம்' அங்கெ பிறந்து விட்டது..! அதை "அரச பயங்கரவாதம்" என்று (இலங்கை விஷயத்தில் மட்டும் தமிழர்களும்... அமெரிக்க விஷயத்தில் முஸ்லிம்களும்) சொல்கிறார்கள்..!

ஒடுக்கும் ஆட்சியாளரும் ஒடுக்கப்படும் சமூகமும் ஒரே மதமாக இருந்தால்... அது "இன பயங்கரவாதமாகவோ" (உதாரணம் அமெரிக்காவில் நிற வெறி) அல்லது "கொள்கை பயங்கரவாதமாகவோ" (சிரியாவில் ஷியா-சுன்னா) அல்லது "சாதி பயங்கரவாதமாகவோ" "மொழி பயங்கரவாதமாகவோ" இருக்கும்..!

திண்டுக்கல் தனபாலன் said...

நாளை முதல் பொறுப்பேற்கும் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...

LinkWithin

Related Posts with Thumbnails