'கலாம்' என்ற மந்திர சொல் எத்தனை காலம் கடந்தாலும் இளைஞர்களால் உச்சரிக்கப்படும். அதிபர் பதவி அவருக்கு அலங்காரமாக இருந்தது என்று சொல்வதை விட, அவர் அதிபர் பதிவிக்கு பெருமை சேர்த்தார் என்று சொல்லலாம். அப்படிப் பட்ட 'அப்தூல் காலம்' பற்றி இரண்டு சுவையான நிகழ்ச்சி. அதுவும் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுடன்.
*
1.
ஒரு சமயம் சில ரஷ்ய விஞ்ஞானிகள் ஹைதராபாத்திற்கு தொழில் பேச வந்திருந்தார்கள். அதில், கலாமும், சுஜாதாவும் கலந்து கொண்டனர். முக்கிய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து விட்டதைக் கொண்டாடும் சந்தோஷத்தில் ஒரு ரஷ்ய விஞ்ஞானி கலாம் கையில் ஒரு கோப்பை ஓட்காவை திணித்து விட்டு அதை அருந்துமாறு வற்புற்த்தினார். கலாம் சுத்த சைவம் மட்டுமல்லல் எந்தவித மதுபானங்களையும் தொடாதவர். விளக்கிச் சொன்னாலும் ரஷ்யருக்கு ஆங்கிலம் புரியாது. அதை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
கலாம் தர்ம சங்கட நிலையில் சுஜாதாவிடம் வந்து, " இந்த பானம் தண்ணி மாதிரி தான் இருக்கு. நீ நேரா போய், இதே மாதிரி கிளாஸ்ல கொஞ்சம் வெறும் தண்ணி எடுத்துட்டு வந்திரு. என்கிட்ட யாருக்கும் தெரியாம கொடுத்து மாத்திரு" என்றார். சுஜாதா அவர்களும் அவ்வாறே செய்து விட, கலாம் ஒரு கோப்பை தண்ணீரை ரஷ்யர்களை நோக்கி உயர்த்தி 'சியர்ஸ்' என்றார்.
***
2.
கலாமும், சுஜாதாவும் திருச்சியில் இருந்த காலத்திலே நல்ல நண்பர்கள். இருவருக்கும் இந்திய ராக்கெட்ட் இயலைப் பற்றி திப்பு சுல்தானிலிருந்து ஆரம்பித்து, ஒரு புத்தகம் எழுதுவதாகத் திட்டம் போட்டனர். சுஜாதா அவர்கள் கலாமை எப்போதும் விமானத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பார்த்தாலும், " கலாம் என்னாச்சு புத்தகம்" என்பார்.
"இதோ ! அடுத்த மாசம் லீவு எடுத்திட்டுப் பத்து நாள் வரேன்யா ! ரெண்டு பேரும் முதல்ல மைசூர் போவோம். அங்க எழுத ஆரம்பிக்கலாம் ! " என்பார்.
அந்தப் புத்தகம் கலாமின் கனவை போல மாற்றிவிட்டது 'சுஜாதாவின் மரணம்.
2 comments:
நல்ல தகவல்கள் குகன்.
ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே?
//ஒரு புத்தகம் எழுதுவதாகத் திட்டம் போட்டோம்//
திட்டத்துல உங்க பங்கு உண்டா? ஏன்னா இடுகை முழுதும் நீங்க சொல்லற மாதிரி இருக்க, இந்த ஒரு இடத்துல நீங்க அவங்க ரெண்டு பேரோட இணைந்து விட்டது போல தெரியுது. ரெம்ப ஆர்வமா எழுதும் போது நானும் பல தடவ எப்படி எழுதி இருக்கேன். இல்ல நீங்க சொல்ல வந்தத நான் புரிந்து கொள்ளவில்லையோ?
// திட்டத்துல உங்க பங்கு உண்டா? //
எனக்கு இன்னும் அவ்வளவு வயதாக வில்லை. விடியற்காலை பதிவு போடுவதால் வந்த பாதிப்பு. மாற்றிவிட்டேன்.
நன்றி,
குகன்
Post a Comment