டிசம்பர் மாதம் கச்சேரி மழை மட்டுமல்ல... புத்தக மழையும் பொழியும் என்று இந்த மாதம் நடந்து வரும் பல புத்தக வெளியீட்டு விழா காட்டியுள்ளது. பல புது பதிப்பகங்களும் களத்தில் குதித்துள்ளது. இதில் அடியேனும் பங்கு பெறுகிறேன் என்பதில் மகிழ்ச்சி.
சரி... ரொம்ப மொக்க போடமா நேர விஷயத்துக்கு வா... என்று நீங்கள் சொல்லுவது புரிகிறது.
வரும் டிசம்பர் 25ஆம் தேதி, காலை 10.30 மணிக்கு, மாம்பலம் சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
என்னை எழுதிய தேவதைக்கு... - (சிறுகதை தொகுப்பு)
பதிப்பகம் தொடங்குபவர்கள் செய்ய கூடாத பெரிய முயற்சியை செய்திருக்கிறேன். நான் சொந்தமாக எழுதிய நூலை வெளியீடுவதை தான் சொல்கிறேன்.
அடுத்தவர் எழுதிய நூலில் சோதனை முயற்சிகள் செய்வதை விட நான் எழுதிய நூலில் செய்வது பரவாயில்லை என்று தோன்றியது.அந்த சோதனை (?) முயற்சித் தான் இந்த புத்தகம்.படிப்பவர்களுக்கு சோதனையாக இருக்காது என்ற நம்பிக்கையில் 'காதல் சிறுகதைகள்' மட்டும் தேர்வு செய்து தொகுத்துள்ளேன்.
பக்கங்கள் : 96
விலை : ரூ.55/-
காந்தி வாழ்ந்த தேசம் (கவிதை தொகுப்பு)
50 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு நூல். முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துக்காக தொகுக்கப்பட்ட நூல் என்று சொல்லலாம். ( நூல் வேலை தொடங்கும் முன்பே 50 பேரிடம் புத்தக பெயர் சென்று அடைந்து விட்டதே !) பல எழுத்தாளர்களின் தொடர்பும் கிடைத்திருக்கிறது.
பக்கங்கள் : 80
விலை : ரூ.45/-
வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் பிரமுகர்களை பற்றிய விபரங்கள் அடுத்த பதிவில் தெரிவிக்கப்படும்.
பதிவர் நண்பர்கள் அனைவரும் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
7 comments:
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
இனிய வாழ்த்து(க்)கள்.
அப்பாடா..... பதிவரே பதிப்பிப்பதால் பதிவர்களுக்கு முன்னுரிமையை உண்டு என்பதைத் தெரிவிக்காம இருக்கலாமோ!!!!!
வாழ்த்துக்கள் குகன்..!
நன்றி நண்பரே.
முயற்சிக்குப் பாராடுக்கள்.
விழா சிறக்க வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் குகன்.
Post a Comment