வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, December 5, 2009

சில கேள்விகளும் கலைஞரின் பதிலும்

எப்படி இருந்தால் அது கலை ? எப்படி இருந்தால் எழுத்து இலக்கியமாகிறது ?

எதோ ஒருவகையில் உணர்வுகளை வருடுவது கலை ! என்றைக்கும் சாகாத எழுத்து, இலக்கியமாகிறது.

**சிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, கட்டுரை, கவிதை என்று எல்லா வகையிலும் முயற்சி செய்திருக்கிறீர்கள். இந்த இலக்கிய வடிவங்களில் உங்களுக்குப் பிடித்து எது ? எந்த வடிவத்தில் தேர்ருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள் ?

நீங்கள் குறிப்பிடும் எல்லா இலக்கிய வடிவங்களிலும் எனக்கு மிகுந்த ஆர்வமும், அக்கரையும், அயற்வில்லா முயற்சியும் உண்டு ! எதில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என்பதை மதிப்பெண் வழங்கிட உரிமை பெற்றுள்ள மக்கள் தான் தீர்மானிக்க முடியும்.

**

முன்பு குமுதத்தில் உங்களை விமர்சித்து கார்ட்டூன், செய்திகள் வந்தன என்பதற்காக குமுதத்தில் எழுதியதை நிறுத்தியது, ஜனநாயகம் போக்குதானா ? விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா நீங்கள் ?

குமுதத்தில் என் தொடர் வெளிவந்த போது அரசியல் அடிப்படையில் என்னை விமர்சித்தும், கேலி புரிந்தும், எத்தனையோ கட்டுரைகள் கார்ட்டூன்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை நான் ரசித்திருக்கிறேன். ஆனால், எனது தமிழ் அறிவையே கேள்விக்குறியாக்கி "கார்ட்டூன்" போட்ட போதுதான் குமுதம் ஆசிரியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, " இனி தொடர்ந்து குமுதம் இதழில் எழுதிட இயலாதவனாக இருக்கிறேன்" எனத் தெரிவித்திட நேர்ந்தது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற நிகழ்ச்சி.

**
டாக்டர் பட்டம் பெற்றதால், உங்களுக்கு என்ன புது புகழ் வந்தது என்று நினைக்கிறீர்கள் ?

புத்துப்புகழ் எதுவும் வரவில்லை. அதனால் தான் என்னைப் பொறுத்த மட்பில் என் பெயருக்கு முன்னால் 'டாக்டர்' பட்டத்தை நான் பயன்படுத்துவதில்லை. பரவாயில்லை, "புது புகழ் வந்ததா ?" என்று கேட்பதின் மூலம் "பழைய புகழ்" இருப்பதாக ஒப்புக் கொண்டதற்கு நன்றி ! அதாவது, அந்தப்பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பே !

**

1936-1937ம் ஆண்டு பள்ளிப் பாடத்தின் வாயிலாக நீதிக் கட்சிகளைப் பற்றி அறிந்து கொண்டவர் நீங்கள். உங்கள் ஆட்சிக் காலத்தில், திராவிட இயக்கம் பற்றி மாணவர்கள் அறிய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?

பெரியார், அண்ணா மற்றும் தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளும் - அவர்தம் கருத்துக்களும் கழக ஆட்சிக்காலத்தில் பாட புத்தங்கள்களில் இடம்பெற்றன.

**

திராவிட இயக்கத் தலைவராகிய உங்களின் குடும்பத்தார் நடத்தும் பத்திரிகைகள் குங்குமம், குங்குமச் சிமிழ், சுமங்கலி போல சனாதானத்தின் குறியீடுகளைத் தூக்கிப் பிடிப்பது ஏன் ? யாரைத் திருப்திப்படுத்த இந்தப் பெயர்கள் ?

உங்களுக்கு அந்தப் பெயர்கள் அல்லது பொருள்கள் சனாதனத்தின் குறியீடுகளாகத் தோன்றலாம். பழங்காலர் தோட்டு தமிழ் நாட்டுப் பெண்களின் பழக்கத்திலிருக்கும் பண்பாட்டுச் சின்னங்கள் என்றும் கூறலாமல்லவா ? உண்டியல் என்றால் உடவடியாக கோயிலில் இருக்கிற ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. அதற்காக வீட்டில் தாய்மார்கள் சேமிப்புக்காக உண்டியலைப் பயன்படுத்துவது சனாதனமாகிவிடுமா ?

**

நவீன இலக்கியம் என்றால் என்ன ? ஆங்கிலம் கலந்து எழுதுவது தான் " நவீனம்" என்று கருதுகிறீர்கள். இலக்கியத்தில் நவீனத்துவம் என்றால் என்ன ?

ஆங்கிலம் கலந்து எழுதுவது தான் நவீன இலக்கியம் என்ற கருத்து எனக்கு உடன்பாடல்ல ! இலக்கியத்தில் நவீனத்துவம் என்பது ; வளர்ந்து வரும் சமூதயத்தில் புதிய சிந்தனைகளைத் தூண்டுவது.

**

சங்கத் தமிழ் மாதிரி, தொல்காப்பியம் பற்றி எழுதுகிறீர்களாமே ? அகம், புறம் மட்டுமே எழுதுவீர்களா ? எழுத்து, சொல்லையும் எழுதுவீர்களா ?

அந்தப் பணிக்கான ஓய்வு இன்னும் கிடைக்கவில்லை. தொல்காப்பியம் பற்றி எழுத முயற்சி தொடங்கினால், முதல் கட்டமாக பொருளதிகாரத்தைத்தான் எடுத்துக் கொள்வேன்.

**

எழுத்துத் துறைக்கு மட்டும் நீங்கள் வராமல் இருந்திருந்தால், உங்கள் அரசியல் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் ?

அரசியல் களத்தில் நின்று போராட எனக்குத் தேவையான ஒரு படைக்கலன் குறைந்திருக்கும்.

**
திரவிட இயக்கப் பாரம்பரியத்தில் ஒரு பிராமணப் பெண்மணி முதல்வராக நேர்ந்தது, திராவிட இயக்கத்தின் தத்துவப் பின்னடைவு காரணம் என்று சொல்லலாமா ? திராவிட இயக்கத்தின் மூத்த தளபதி என்ற நிலையிலிருந்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

தத்துவத்தின் பின்னடைவு அல்ல ! தத்துவங்களால் ஏற்பட்ட பின்னடைவு !

**

'1950 ம் ஆண்டுகளில் தாங்கள் எழுதிய எழுத்துப் பாணியை 90 களிலும் பயன்படுத்துவது, தங்கள் எழுத்து வளர்ச்சியைக் காட்டுவதாக இல்லை' என்று விமர்சகர்கள் கூறுகிறார்களே, அதற்குத் தங்கள் பதில் என்ன ?

என் எழுத்து வளர்ச்சியைக் காட்டும் அளவுகோல் நீங்கள் குறிப்பிடும் அந்த எரிச்சல் விமர்சகர்களிடம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.


நானும் இலக்கியமும் - பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞர் அளித்த பதில்கள். கலைஞர் கையெழுத்திலேயே அச்சிடப்பட்டுள்ள நூல்.

பக்கங்கள்.96. விலை.70
நக்கீரன் வெளியீடு

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails