மனிதனாக பிறந்த ஒவ்வொரு உயிர்களும் திருடர்கள் தான். ஏதாவது ஒரு கட்டத்தில் எதையாவது திருட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும். சிலர் முயற்சித்து வெற்றி பெற்று இருப்பார்கள். ஒரு சிலர் பயத்தில் முயற்சிக்காமல் விட்டு இருப்பார்கள். அப்படி ஒரு 'ஆசை'. தப்பு.... 'ஆசை' என்று சொல்ல கூடாது. 'வேகம்' என்று தான் சொல்ல வேண்டும். 'பேனா' திட வேண்டும் என்ற வேகம் என்னுள் எழுந்தது.
சனிக்கிழமை (5.12.09) அன்று அவரமாக திருச்சி செல்ல வேண்டிய வேலை வந்தது. அதனால், தக்கலில் டிக்கெட் வாங்கி அரை மணி நேரம் முன்பாகவே ஏழும்பூர் ரெயில்வே நிலையத்திற்கு சென்றுவிட்டேன். பயண சமயத்தில் என்னிடம் எப்போது மூன்று புத்தகங்களாவது இருக்கும். ராமேஸ்வர எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் என் சீட்டை தேடி கண்டு பிடித்து அமர்ந்தேன். பையில் இருக்கும் பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதிய 'சில நேரங்களில் சில அனுபவங்கள்' புத்தகத்தை படிக்க எடுத்தேன்.
புத்தகம் படிக்கும் போது எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எனக்கு பிடித்த வரிகளை கோடிட்டு குறித்துக் கொள்வேன். முடிந்தவரை கோடு, கட்டம், வீடு எல்லாம் கட்டி அடுத்தவர் அந்த புத்தகத்தை படிக்க முடியாமல் செய்துவிடுவேன். அப்படி அந்த புத்தகத்தை படிக்கும் போது கோடு போட சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்தேன். எழுதவில்லை.
தட்டி பார்த்தேன். கிறுக்கினேன். ஹூம். ஒன்றும் பலனில்லை. கடைசியில், பலூனை உதுவது போல் பேனாவை திறந்து ரிப்பில்லை எடுத்தேன். அப்போது தான் கவநித்தேன். பேனா இங்க் ரிப்பில் பின் வழியாக வழிந்து இருக்கிறது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அதை ஜன்னல் வழியாக தூக்கி ஏறிந்தேன்.
வெளியே வந்து புது பேனா வாங்கலாம் என்று பெட்டியுடன் இறங்கினேன் ( அந்த கம்பார்ட் மெட்டில் நான் தான் முதலில் ஏறியிருந்தேன். பெட்டியை தனியாக விட்டு வர பயமாக இருந்தது.) பிளாட் பாரம் கடை முழுக்க முழுக்க டீ, காபி, கூல் டிரிக்ஸ், பேப்பர் என்று இருந்தது. ஆனால், எந்த கடையிலும் பேனா இல்லை. ட்ரெயின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனை வரை இருக்கும் கடைகளை அலசிவிட்டேன். பேனாயில்லை. அந்த நேரம் பார்த்து பலர் சட்டை பையில் பேனாவுடன் அலைந்து எனக்கு எரிச்சல் மூட்டினர். அவர்களை பார்க்க பொறாமையாக இருந்து. கோபம் கூட வந்தது.
ஐந்து மணி நேர பயணத்தில் புத்தகத்தை எப்படி கோடு போடாமல் படிப்பது ? கோடி கணக்கில் செலவு செய்யும் தென்க ரயிலே ஸ்டேஷன் கட்டி என்ன பயன் ? எந்த ஒரு கடையிலும் பேனா விற்பனைக்கு இல்லை. இப்போது ரயில் புரப்பட இன்னும் பத்து நிமிடம் தான் உள்ளது. வெளியே சென்று வாங்கி வருவதும் சாத்தியமில்லை.
வேறு வழி இல்லை. பேனாவை திருட வேண்டியது தான். யாரிடமாவது பேனாவை வாங்கி அப்படியே ஒடிவிடலாம் என்று முடிவு செய்தேன். என் கெட்ட நேரம் அவர்களின் நல்ல நேரம். என் கண் முன்னே இந்தி பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் பேனாவை ஆட்டைய போட்டால், 'தமிழன்' பேனா எடுத்து ஓடிவிட்டான் என்பார்கள். அதனால் வேண்டாம். தமிழ் பேச தெரிந்தவர்களிடம் சுடலாம் என்று இருந்தால் அவர்கள் சட்டை பையில் பேனா இல்லை. யாராவது ஏமாளி கிடைக்க மாட்டானா திரும்பி வந்தேன்.
'S2' கம்பார்ட்மென்ட். நான் பயணம் செய்ய வேண்டிய கம்பார்ட்மென்ட். ஏமாற்றத்தோடு என் இடத்துக்கு வந்து அமர்ந்தேன். வேறு வழியில்லாமல் படிக்க தொடங்கினேன். அப்போது ஒரு முதிய தம்பதியர்களை ஏற்றிவிட சபரிமலை மாலை போட்ட ஒருவர் வந்தார். பாக்கெட்டில் 'செல்லோ' பேனா. அவரிடம் திருட மணமில்லை. ஆனால், எனக்கு பேனா வேண்டும். ஐந்து மணி நேரம் கிறுக்காமல் புத்தகம் எப்படி படிப்பது.
கடைசியில் துணிந்து விட்டேன். செய்து விட வேண்டியது தான். தப்பாக இருந்தாலும் வெட்கத்தை விட்டு செய்து விட்டேன். ஆம்.... !
"ஸார் ! உங்க பேனா கொடுக்க முடியாமா !" என்று கேட்டேன். நான் திருப்பி கொடுப்பேன் என்ற நம்பிக்கையில் கொடுத்தார். என் நிலைமையை ( இது எல்லாம் நிலைமையா ??) அவரிடம் சொன்னேன். "நீங்களே பேனாவ வச்சிக்கோங்க" என்று சொல்லி சென்றுவிட்டார். ( மனதில் என்ன நினைத்தாரோ ??)
அப்பாடா ஒரு வழியாக பேனா கிடைத்துவிட்டது ! இது எப்படி பேனா திருட்டாகும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முதலில் எழுதவில்லை என்று தூக்கி போட்டேனே அது திருட்டு பேனா தான்.
4 comments:
//ஜன்னல் வழியாக தூக்கி ஏறிந்தேன்//
PAiyil vaithu irangumidathil ulla kuppai thottiyil pottirukkalaam, kanda idathil kuppai podakkoodathu enbathu theriyavillaiya?
thiruttu pena vai kanda idathil poduvathuthaan thangal valakkama? irandume thappu, thappu seithaalum tamilan maanam poga koodathunu solreenga, tamilankitta unga maanam pogalaam matravargalidam poga koodatha?
பேனா திருடுவதை பற்றி எதுவும் சொல்வதற்க்கில்லை.
ஆனால் புத்தகத்தில் கிறுக்குவதும் கோடு போடுவதும், காதை மடிப்பதும் ஒரு குழந்தையை துன்புறுத்துவதர்க்குச் சமம்.
இனிமே புத்தகத்தில் எழுதாதீங்க. அப்படி கை சும்மா இல்லன்னா சீத்தலை சாத்தனார் மாதிரி உங்கள் மேலேயே எழுதிக்கோங்க.
--வித்யா
சூப்பருங்க .... இப்பிடித்தான் பண்ணனும் ...... நான்கூட ஸ்கூல்ல ரிசல்ட் பாக்க போனா அது வரைக்கும் பாக்காதவங்க ரிசல்ட பேனாவால கிறுக்கி வெச்சுட்டு வந்துருவேன் .... ஜாலியா இருக்கும் !
நல்லதொரு பதிவு குகன்.. பேனா திருடனை மையமாக வைத்து சென்ற வருடம் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன்.இங்கே படிக்கலாம்: http://nilaraseegansirukathaigal.blogspot.com/2008/08/blog-post.html
Post a Comment