கருவில் சுமக்காத குழந்தையை
கையில் சுமந்து
யாசகம் கேட்ட பிச்சைக்காரி !
குமரியாக இருந்தாலும்
அன்னை வேடத்தில்
அனுதாபத்தை காசாக்க
காரின் ஜன்னல் வெளியே
கைய்யேந்தினாள் !
பெண் என்றதும்
காற்றடித்த காகிதம் போல்
சீமானின் சட்டை பையில்
தெரிந்தே விழுந்தது
ஐந்நூறு ரூபாய் காகிதம் !
இரவில்
அதுவே அவள் ஆடையானது !
காலையில்
மீண்டும் அன்னையானாள்
அடுத்த நாள் இரவை கடப்பதற்கு... !
**
உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை
12 comments:
முதல் மூன்று வரிகளே ரொம்ப நல்லா வந்துருக்கு குகன்...!
nice kavithai
நல்லாயிருக்கு.... அதுசரி அது அடையானதா ஆடையானதா???
good one
அருமை நல்லாயிருக்கு...
//காலையில்
மீண்டும் அன்னையானாள்
அடுத்த நாள் இரவுவை கடப்பதற்கு... !//
உண்மை அப்படித்தான் இருக்கிறது, அவர்களது நிலைமை...
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்...
நல்லாயிருக்கு
மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்
வெற்றி பெற வாழ்த்துகள்
அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...
சமூக அவலத்தை எடுத்து சொல்லும் அருமையான வார்த்தைகள்.. வாழ்த்துக்கள்..
கவிதை நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் அனைத்து பிச்சை எடுக்கும் பெண்களும் குழந்தை வைத்திருப்பார்கள் கரணம் குழந்தைக்காக பரிதாபப்பட்டு பிச்சை இடுவார்கள். இதற்காக குழந்தைகள் திருடப்படுகின்றனர்.எனவே இது போன்ற கவிதைகல்மூலன் ஆதரிப்பதை நிறுத்தவும்.
Post a Comment