விடுதலை புலிகள் தங்கள் தலைவர் பிரபாகரின் மரணத்தை உறுதி செய்து விட்டனர். இறந்த உடல் பிரபாகரன் தானா என்று எழுதிய கேள்விகள் எல்லாம் குப்பையில் போட வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு விட்டோம்.
பிரபாகரன் மரணத்தை பற்றி சிங்கள இராணுவம் அறிவித்த போது நான் வருந்தி பதிவு எழுதினேன். அதன் பின், வந்த ஒரு சில பதிவுகள் ( குறிப்பாக லக்கி லுக் பதிவுகள்), பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பும் வகையில் எனக்கு ஆறுதலாக இருந்தது. அடுத்து, நக்கீரன் வெளியீட்ட செய்தியும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நம்பினேன். இப்போது, விடுதலை புலிகள் பிரபாரனின் மரணத்தை உறுதி செய்த பிறகு 'தமிழ் ஈழம்' கனவு என்று உறுதி செய்யும் நிலையில் நாம் இருக்கிறோம்.
இனியாவது என் தமிழர்களுக்கு இலங்கையில் உயிர் பாதுகாப்பு இருக்குமா...? மூன்று வேளை உணவு சாத்தியமா... ? இயல்பால வாழ்க்கை வாழ முடியாமா ? என்று பல கேள்விகள் எழுகின்றன.
‘போர் முடிந்த விட்டது’ என்று ராஜபாக்ஷே அறிவித்த பிறகும்... ஏன் வெளி நாட்டு ஊடகங்கள் இலங்கையில் அனுமதிக்க வில்லை...? நிவாரண நிதி சரியாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் சென்று அடைகிறதா என்று இப்போதாவது யாராவது உறுதியாக சொல்ல முடியுமா...? பிரபாகரன் கையில் துப்பாக்கி இருந்த போதே தமிழர்களின் உயிருக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. இப்போது, பிரபாகரன் இறந்து விட்டார். அவர்கள் நிலை....??? இந்த கேள்விகள் எல்லாம் வேள்வியில் எரிந்துக் கொண்டு இருக்கின்றன. பதில் அளிப்பவர்கள் தான் யாருமில்லை.
பிரபாகரனின் நண்பன் கலைஞர் தன் கட்சி தமிழருக்கு மத்திய அமைச்சர் சீட் வாங்குவதில் கவனமாக இருக்கிறார். காங்கிரஸின் சந்தோஷத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.
இனி.... அதகதிகள் மூகாம் அதிகரிக்கும். தமிழர்களை பிச்சைக்காரனாக்கிய சந்தோஷத்தில் ஆட்சி நடக்கட்டும். தமிழர்கள் உயிரை பேரம் பேசியவர்கள் மானங்கெட்டு வாழ்க்கை வாழட்டும்.
வாழ்க அகதிகள் மூகாம் !
****
படங்கள்
நன்றி : http://www.inllanka.com/
4 comments:
நல்லதே நடக்கும் என்று நம்புவோம் குகன். நம்பிக்கைக்கு என்ன காசா பணமா செலவழிக்கப் போகிறோம்?
// லக்கிலுக் said...
நல்லதே நடக்கும் என்று நம்புவோம் குகன். நம்பிக்கைக்கு என்ன காசா பணமா செலவழிக்கப் போகிறோம்?
//
'நம்பிக்கை' ஒன்று இருப்பதால் தான் எல்லாருடைய வாழ்க்கையும் செல்கிறது :)
vanakam kukan porada parimanam maralam porada ilaku marathu...நல்லதே நடக்கும் என்று நம்புவோம் குகன்...
// Suthan said...
vanakam kukan porada parimanam maralam porada ilaku marathu...நல்லதே நடக்கும் என்று நம்புவோம் குகன்... //
தோல்விகளிலும் இன்னும் 'நம்பிக்கை' ஒன்று தான் ஆயுதம்....
உங்கள் நம்பிக்கையான வார்த்தைகளுக்கு நன்றி
Post a Comment