வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, April 11, 2009

வரதட்சனை வாங்குறது தப்பில்லைங்க....

‘பொற்காலம்’ படத்தில் ஒரு காட்சி...

" நம்ப மனசுல ஊனத்த வச்சிக்கிட்டு... ஊருல இருக்குறவங்களோட ஊனத்த பத்தி பேசி என்ன பண்ணுறது. உன் தங்கச்சிக்கு 'ராசா' மாதிரி மாப்பிள்ளை வேணும்னு நினைச்சியே... என்ன மாதிரி கருப்பா... அசிங்கமா இருக்குறவங்க உன் கண்ணுக்கு தெரியல... நீ மட்டும் என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா... உன் தங்கச்சிய நான் கல்யாணம் பண்ணி என் பொண்ணாட்டியாக்கியிருப்பேன்"

தங்கைக்கு திருமணம் செய்ய முடியாமல் தவிக்கும் முரளியிடம் வடிவேலு இப்படி வசனத்தை பேசுவார். வடிவேலு பேசுவதை கேட்டு தன் தங்கையை அவனுக்கு திருமணம் செய்து வைக்க முரளி சம்மதிப்பார். மண்சட்டி விற்பவனே மண்சட்டிக்காரனுக்கு பெண் கொடுக்காவிட்டால் அவனுக்கு எப்படி தான் திருமணம் ஆகும்..? இந்த இடத்தில் பல வரன்கள் முரளியிடம் 'வரதட்சனை' கேட்டதால் தான் 'வடிவேலுவுக்கு' பெண் கொடுக்க சம்மதிக்கிறார் முரளி. அதனால் ‘வரதட்சனை வாங்குறது தப்பில்லைங்க....’

இந்த கட்டுரை தொடர்ந்து படிக்கும் நீங்கள் இரண்டு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளவும்.
* காதல் திருமணத்தில் வரதட்சனை வாங்குவதை நான் ஆதரிக்கவில்லை.. எதிர்கிறேன். இரண்டு மனம் சேர்ந்த பிறகு ஜாதகம், ஜாதி பார்ப்பது எப்படி தவறோ அதே போல் 'வரதட்சனை வாங்குவதும் தவறு.

* திருமணத்துக்கு பிறகு பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்பி பணம், நகை வாங்கி தர சொல்லுவதும் தவறு. இரண்டு பேர் வாழ்க்கையை பங்கு போடும் எல்லாமே சரி பாதியாக இருக்கும் போது ஒருவர் மட்டும் இதில் துயரப்படக் கூடாது.

அப்போ... வரதட்சனை எப்போது தான் வாங்க வேண்டும் ? அது தப்பில்லை என்று சொல்ல முடியும் ?

இதற்கு பதிலை சில சம்பவங்களோடு சொல்கிறேன்.

1. சில மாதங்களுக்கு முன்பு விஜய் டி.வியில் “நீயா ? நானா?” நிகழ்ச்சியில் ஒரு திருமணம் ஆகாத பெண் தனக்கு வர போகும் கணவனுக்கு என்ன தகுதி வேண்டும் என்று சொல்கிறாள் தெரியுமா... " 1/2 கிரவுன்ட் பிளாட், கிரடிட் கார்ட், பைக்" வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறாள். அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான பெண்கள் வருங்கால கணவன் பற்றி சொல்லும் போது வசதிகளை பற்றி தான் அதிகமாக சொன்னார்கள். கணவன் அதிமாக அன்பு காட்ட வேண்டும், தன் மீது அக்கரை செலுத்த வேண்டும் என்று எந்த பெண்ணும் சொல்லவில்லை.இப்படிப்பட்ட பெண்ணை, ‘கட்டிய புடவையோடு வா, கண்கலங்காமல் வாழ வைக்கிறேன்’ என்று சொன்னால் ஆண்களை நம்ப மாட்டார்கள். இவர்களிடம் வரதட்சனை வாங்குறதில் தவறு என்ன இருக்கிறது.
2. இரண்டு வருடங்களுக்கு முன்பு, பெண்ணை வெளிநாட்டில் இருக்கும் இந்தியனுக்கு கொடுப்பதை பெண் வீட்டினர் ரொம்ப பெருமையாக நினைத்தனர். எவ்வளவு செலவு செய்தாலும் பரவாயில்லை. அவர்கள் பெண் வெளிநாட்டில் வாழ்வதை சொந்தக்காரர்களிடம் பெருமையாக சொல்லவேண்டும். இதற்கு பெற்றோர்கள் மட்டும் காரணமல்ல, ஒரு சில பெண்களும் தங்களுக்கு வர போகும் கணவன் வெளிநாட்டில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பதும் ஒரு காரணம்.
இவர்களுக்கு ஆண்கள் பாஸ்போட்டாகவும், விசாவாகவும் தான் தெரிகிறார்கள். வெளிநாட்டை பார்க்க ஆசைப்படும் பெரும்பாலான படித்த பெண்கள் வேலைக்கு போகிறவர்கள் தான். அவர்கள் தங்கள் அலுவலகத்தின் மூலம் செல்வதை விட்டுவிட்டு... ஒரு ஆண்ணை பாஸ்போட்டாக தேர்வு செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

பத்து பெண் வீட்டார்களிடம் வரதட்சனை கேட்டால், நான்கு பேராவது வரதட்சனை கொடுக்க முடியாமல் லோக்கலில் இருக்கும் ஒரு பையனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். இதில் 'வரதட்சனை' நான்கு ஆண் வாழ்க்கையில் ஒளி ஏற்றுகிறது.

3. என் எழுத்துலக நண்பர் ஒருவர். 33 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. உடலில் எந்த குறையும் இல்லை. ரொம்ப நல்லவர். மாதம் 15000 ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். பல பெண் வீட்டார்கள் அவர் ஜாதகத்தை பார்க்காமலே நிராகரித்துவிட்டனர். காரணம், அவர் ஒரு 'வழக்கறிஞர்'.
என் ஒன்று விட்ட அண்ணன் மார்க்கெட்டிங் வேலையில் இருக்கும் போது ஒவ்வொரு காரணத்தை சொல்லி பெண் வீட்டினர் தட்டி கலித்தனர். 32 வயதான பிறகு 'மேனேஜர்' தகுதி கிடைத்த பிறகே திருமணம் நடந்தது.
டாக்டர், இன்ஜினியர் போன்றவர்கள் திருமணத்துக்கு 'வரதட்சனை' வாங்குவதால் தான் பிரஸ் பிரிட்டிங், சேல்ஸ், ஷாப் கிப்பர்ஸ் போன்ற ஆண்களுக்கு திருமணம் நடக்கிறது. டாக்டர், இன்ஜினியர்கள் வரதட்சனை வாங்க நிருத்திவிட்டால் எல்லா பெண்களும், பெண் வீட்டினரும் டாக்டர், இன்ஜினியர் மாப்பிளை தேடுவார்கள். அப்போது மற்ற வேலை செய்பவர்கள் நிலைமை யோசித்து பாருங்கள்.

மேட்டிரிமோனி இணையத்தளத்தில் ஒரு பெண் தன் பயோடேட்டாவும் தனக்கு வரபோகும் கணவனுக்கான தகுதியையும் குறிப்பிட்டிருந்தாள். அதில் Software Engineers’ தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று சொல்லியிருந்தாள். தனக்கு வர போகும் கணவனின் தகுதி பற்றி சொல்ல ஒரு பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், 'Software Engineer ' வேண்டாம் என்று பகிரங்கமாக சொல்வதின் மூலம் அந்த வேலை செய்துக் கொண்டு இருப்பவர்கள் மணம் புண்படுகிறது. கஸ்தூரி பாய், சுதா நாராயண மூர்த்தி போன்ற பெண்கள் மனைவியாக கிடைக்கும் என்றால் காலில் கூட விழலாம். மற்றவர்கள் மனம் புண் படுத்தும் இந்த பெண்ணிடம் ஒரு ஆண் வரதட்சனை கேட்டால் தவறில்லை. கடைசியில் வரதட்சனை கொடுக்க முடியாமல் அந்த பெண் ஒரு 'Software Engineer ' ஆண்ணையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் அமையலாம்.

ஒரு காலத்தில் 'Software Engineer ' மாப்பிளை வேண்டும் என்று தவம் கிடந்த பெண் வீட்டினர் எத்தனை பேர். இன்றைய பொருளாதார வீழ்ச்சியில் ஒரு பெண் 'Software Engineer ' வேண்டாம் என்கிறாள். ஒரு வேலை திருமணத்துக்கு பிறகு பொருளாதார வீழ்ச்சியடைந்தால் அந்த பெண் கணவனை விட்டு சென்று விடுவாளோ என்னவோ.!!

மதிப்புக்குறிய பெண்களே ! ஒரு ஆண் 'நர்ஸ் பெண் வேண்டாம்' என்று பகிரங்கமாக சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா....!

“ஆண் வீட்டினர் வாழ வரும் பெண் முக்கியம் என்று நினைக்க வேண்டும்” என்று வாதாடும் பெண்கள். இருபது, முப்பது வயது ஆ ணிடம் அ ம்பானி அளவில் சொத்தை எதிர்பார்க்கும் பெண்களை பற்றி பேசுவதே இல்லை.

என் அலுவக நண்பர் திருமணத்துக்கு நல்ல பெண்ணா என்று பார்த்தால் போதும். வரதட்சனை என்ற பெயரில் வியாபாரம் செய்ய வேண்டாம் என்று சொன்னார். பல மேடை பேச்சை கேட்டு அப்படியே ஒப்பித்துவிட்டார்.

அவரிடம் நான் கேட்டது.. " ஒரு நல்ல பெண் தான் முக்கியம் என்றால் வேலைக்காரி, பிச்சைக்காரியை கூட திருமணம் செய்துக் கொள்ளலாமா ??" என்றேன்.

பிச்சைக்காரியும் பெண்தானே ! அவள் நல்லவள் என்றால் திருமணம் செய்துக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது என்றார்.

இந்த பதிலை தான் அவரிடம் இருந்து எதிர்பார்த்தேன். அப்படி என்றால், வரதட்சனை கொடுக்க முடியாதவர்கள் பிச்சைக்காரனுக்கு திருமணம் செய்துக் கொடுக்க வேண்டாம். பியூன், வார்ட் பாய், சேல்ஸ் மேன் பொன்றவர்களுக்கு கொடுக்கலாமே ! அவர்களில் நல்ல ஆண்கள் இருக்கிறார்களே ! இதை எத்தனை பெண் வீட்டினர் செய்வார்கள். இந்த வேலை செய்பவர்கள் பெண் கிடைக்காமல் எதோ ஒரு ஊரின் ஒதுக்கு புறத்தில் இருக்கும் கிராமத்தில் பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ( இதில் கூட அந்த கிராமத்தில் இருக்கும் ஆண் ஒதுக்கப்படுகிறான்)

வரதட்சனையால் எத்தனை திருமணம் நடக்காமல் இருக்கிறது ? எத்தனை பெண்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சின்ன குழந்தை போல என் அலுவலக நண்பர் கேட்டார்.

இந்த உண்மை நம் நாட்டில் வளர்ச்சி அடையாத கிராமத்தில் வேண்டுமானால் நடக்கலாம். சென்னைக்கு பொருந்தவே பொருந்தாது. ஆண்களுக்கு எதிராக இருக்கும் 'வரதட்சனை வழக்கு' பாதிக்கு மேல் பொய் வழக்குகளே ! நடிகர் பிரஷாந்த், ஸ்ரீ காந்த் விவகாரத்தில் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 'வரதட்சனை சட்டம்' பெண்கள் ஆண்களுக்கு எதிராக தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்று பிரபல நாளிதழ் எழுயிருந்தது.

அம்பானியிடம் சம்மந்தம் பேச நினைத்தால் அவன் வரதட்சனை தான் கேட்பான். உழைத்து அம்பானி போல் ஆக வேண்டும் என்று நினைப்பவனுக்கு பெண் கொடுங்கள். வரதட்சனை ஓழியும். 'வரதட்சனை வளருவதே பெரிய இடத்தில் தன் பெண் வாழ வேண்டும்’ என்ற நினைப்பு தான் காரணம்.

மீண்டும் ஒரு முறை தெளிவாக சொல்கிறேன்.
திருமணத்துக்கு பிறகு வரதட்சனை வாங்குவது தவறு. காதல் திருமணத்தில் வரதட்சனை வாங்குவது பெரும் குற்றம்.

ஆனால், திருமணத்துக்கு முன்பு ஒரு முறை வரதட்சனை கேளுங்கள். தப்பில்லை. திருமணத்துக்கு பிறகு மீண்டும் அவர்களிடம் வாங்கிய வரதட்சனை கொடுக்கலாம். ஆனால், கேட்காமல் இருந்து விடாதீர்கள். அப்போது தான் வசதியில்லாத உழைக்கும் ஆண்களுக்கு திருமணம் நடக்கும்.

திருமணத்துக்கு முன்பு ஒரு முறை வரதட்சனை வாங்வது சட்ட விரோதமல்ல .. சமூக சேவை.

11 comments:

Anonymous said...

கண்டிப்பாக வரதட்சணை இருக்க வேண்டும். அப்பொழுது தான் காசுக்கு ஆசைப் பட்டாவது சில பெண்களுக்கு வாழ்க்கை அமையும். சில ஆண்களுக்கும் சேர்த்து.

கும்மாச்சி said...

சிந்திக்கப்பட வேண்டிய கருத்து.

Rajeswari said...

மீண்டும் ஒரு முறை தெளிவாக சொல்கிறேன்.
திருமணத்துக்கு பிறகு வரதட்சனை வாங்குவது தவறு. காதல் திருமணத்தில் வரதட்சனை வாங்குவது பெரும் குற்றம்.//

என் கருத்தும் இதுவே..

சுரேஷ்குமார் said...

Differant Thinking and I agree with this too.

All the Best,

Suresh Kuwait

andygarcia said...

honest,practical,nice post
great...

வாழவந்தான் said...

வித்யாசமான அணுகுமுறை, சிந்திக்கவேண்டிய விஷயம்..
இன்று நாம் கவினிக்க தவறியவற்றின் கோர்வை.

Anonymous said...

http://certifiedasshole.wordpress.com/2009/02/05/i-will-give-dowry/
Per se Is giving dowry to my daughter BAD? I do not want my daughter
to walk out of my house naked when she gets married. I BELIEVE THAT MY
DAUGHTER HAS EQUAL RIGHTS IN MY PROPERTY AS MY SON HAS. I want to
empower my daughter when she start living with his husband. What is
name of presents and gifts i Give to my daughter at the time of
marriage. I will give dowry to my daughter.

Also visit
http://tamil498a.blogspot.com/

தமிழ். சரவணன் said...

மிக மிக அருமையாண பதிவு - வாழ்க வளமுடன்

//'வரதட்சனை சட்டம்' பெண்கள் ஆண்களுக்கு எதிராக தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்று பிரபல நாளிதழ் எழுயிருந்தது//

இப்போ எல்லாம் சினிமாவுக்க டிக்கட் புக் பண்றமாதிரி dowry case புக் பண்றாங்க... இச்சட்டத்தால் வீடிலந்து, குழந்தையையிலந்து, வேலையிலந்து, குண்டர்கூட்டத்தில் அடிவாங்கி, பெத்தவங்க கூடப்பிறந்தவங்க எல்லாரையும் ஜெயிலூக்கு அனுப்பி நொந்த நூடுல்ஸ் ஆனவனி கதை... ஓய்விருந்தால் படித்துப்பார்ககவும்

http://tamizhsaran-antidowry.blogspot.com

இதுபோல் சம்பவங்கள் ஆயிரம் ஆயிரம் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது

Anandan said...

Good and Different thinking! Vazhthukkal!!

யாழினி said...

சிந்திக்க வேண்டிய விடயம்! நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

சரவணன் said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. சிந்திக்கப்பட வேண்டிய கருத்து.

LinkWithin

Related Posts with Thumbnails