இனியவன் G. ஸ்ரீதர்
இது வரை நான் படித்த புத்தகங்கள், விமர்சனங்கள், ரசித்த வரிகள் என்று தனி தளத்தில் எழுதி வந்தேன். இனி 'குகனின் கட்டுரை' தளத்தில் ‘நான் விரும்பி படித்த புத்தகங்கள்’ பற்றி எழுத முடிவு எடுத்துள்ளேன். ( அந்த தளத்தில் எழுதப்படும் அத்தனை கருத்துகளும் இங்கு எழுதப்படும். வேறு எதற்கு... எல்லாம் 'ஹிட்' அதிகமாக தான்.)
சரி ! புத்தகத்திற்கு வருவோம். ஒரு இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில் நண்பர் 'ஸ்ரீதர்' அவர்களின் அறிமுகம் கிடைத்தது. பார்த்த சில நிமிடங்களிலே அவர் எழுதிய 'தமிழ்க்கு இல்லை தேய்மானம்' கவிதை தொகுப்பை என்னிடம் கொடுத்தார். ( கவிதை நூல்களுக்கு அரசு ஆணை கிடைக்காததால் இப்படி ‘Visiting Card’ போல் கொடுக்க வேண்டி இருக்கிறது.)
பா.விஜய் அணிந்துரையோடு கவிதை நூல் தொடங்குகிறது.
"வெற்றிலைச் சாறில் வெள்ளம் எடுப்பேன்
வெற்றியும் தோல்வியும் சமமாய்
சுமப்பேன்"
என்ற முதல் கவிதையான 'உறுதிமொழி' கவிதையில் என்னை கவர்ந்துவிட்டார். அடுத்து, 'அம்மா' பற்றி சொல்லும் போது 'ஆண்டவன் எழுதிய அணிந்துரை' என்று எழுதியிருப்பது மிகவும் அருமை.
கடிகாரத்தை பற்றி சொல்லும் போது…
"நேரத்தைக் காட்டுவது உன் வேலை
நேரத்தை கடத்துவதே எங்கள் வேலை"
இளைஞனின் கவிதை நூல் வெளியிட்டால் கண்டிப்பாக 'காதல்' கவிதை இருக்கும். 'காதல்' கவிதை இருந்தால் கவிதை நூலுக்கே தனி சிறப்பு வருகிறது.
நீயும் நானும் தலைப்பில்
'சட்டையடி நீ எனக்கு
சட்டைப் பை நான் உனக்கு !
சட்ட சபை நீ எனக்கு
சபா நாயகன் நான் உனக்கு !'
‘கரியானாலும் காதலே’ தலைப்பில்
நிலக்கரிக் கூட
நான் நேசிக்கிறேன்
காரணம்
அவளுக்கு சொந்த ஊர்
நெய்வேலி !
நான் படிக்கும் இன்னொரு கவிதை நூல் என்ற மனதோடு தான் படித்துக் கொண்டு வந்தேன். 80வது பக்கத்தில் 'சுரணை' கவிதை படித்தவுடன் இந்த நூலை பற்றி தளத்தில் சொல்லியாக வேண்டும் என்ற முடிவே செய்துவிட்டேன்.
‘சுரணை’ தலைப்பில்..
கடவுள்களை அடித்தால்
பக்தர்களுக்கு வலிக்கிறது !
தலைவர்களை அடித்தால்
தொண்டர்களுக்கு வலிக்கிறது !
நடிகர்களை அடித்தால்
ரசிகர்களுக்கு வலிக்கிறது !
மிருகங்களை அடித்தால் கூட
ஜீவ காருண்யர்க்கு வலிக்கிறது !
இலங்கையில் தமிழர்களை
படுகொலை செய்கிறார்கள்
இங்கே பலருக்கு
சுரணையே இல்லை.
இலங்கை பிரச்சனை அரசியலாக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த கவிதை சுரணை கொடுக்காது. ஆனால், தமிழர்களுக்கு கண்டிப்பாக 'சுரணை' கொடுக்கும் என்பது நிச்சயம்.
பாரதி புத்தகலாயம் இந்த கவிதை நூலை வெளியிட்டுள்ளது. திரைப்படத்துறையில் நுழைவதற்கு முக லட்சனங்களும், கவி திறனும் ஸ்ரீதருக்கு உண்டு. இன்னும் பல படைப்புகள் படைப்புகள் படைக்க அவரை நம் பதிவர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
விலை. 35
பாரதி புத்தகலாயம்
421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,+
சென்னை – 108
தொலைப்பேசி : 2433 2424 , 2433 2924
2 comments:
அருமையான கவிதைகள்
குறிப்பாக இந்தக் கவிதை
/
கடவுள்களை அடித்தால்
பக்தர்களுக்கு வலிக்கிறது !
தலைவர்களை அடித்தால்
தொண்டர்களுக்கு வலிக்கிறது !
நடிகர்களை அடித்தால்
ரசிகர்களுக்கு வலிக்கிறது !
மிருகங்களை அடித்தால் கூட
ஜீவ காருண்யர்க்கு வலிக்கிறது !
இலங்கையில் தமிழர்களை
படுகொலை செய்கிறார்கள்
இங்கே பலருக்கு
சுரணையே இல்லை.
/
நன்றி திகழ்மிளிர் :)
Post a Comment