வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, February 22, 2009

நவீன இராமாயணமும், அரசியலும்

காட்சி - 1

இராமர் : அனுமான் ! இலங்கைக்கு சென்று இராவணனை எச்சரித்து விட்டு. என் சீதைக்கு ஆருதல் சொல்லிவிட்டு வா....

அனுமான் : எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். பேசாமல் சீதையை நானே அழைத்து வந்து விடுகிறேன்.

இராமர் : அது என் வீரத்திற்கு இழுக்கு... என் சீதையை நான் தான் மீட்பேன்

அனுமான் : சிறு பிள்ளை போல் அடம் பிடிக்காதே இராமா... நான் சீதையை மீட்டு வந்தால் பிரச்சனை இத்தோடு முடிந்து விடும்.

இராமர் : என் சொல் படி கேட்பது தான் உன் வேலை.

அனுமான் : (மனதுக்குள்) மேல் அதிகாரிகள் எப்போது தான் தனக்கு கீழ் இருப்பவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க போகிறாரோ...

அனுமான் தன் வாலை கலட்டி வைத்தார்.

இராமர் : ஏன் வாலை கலட்டி விட்டாய்..?
அனுமன் : நேற்று சுட்டி டி.வியில் 'இராமாயணம்' படம் பார்த்தேன். என்னை போன்ற உருவம் உள்ள ஒருவனின் வாலை எரித்தார்கள். எதற்கு வம்பு என்று கலட்டி விட்டேன்.

இராமர் : சபாஷ் சரியான சிந்தனை

அனுமான் : நேற்று நீங்கள் பி.எஸ்.வீரப்பா படம் பார்த்தீர்களா..???

இராமர்: ம்.. வெட்டி பேச்சு பேசாமல். இதோ என் மோதிரத்தை சீதைக்கு காட்டு. அப்போது தான் அவள் உன்னை என்னை சேர்ந்தவன் என்று நம்புவாள்...

அனுமான் : பெண்களின் சந்தேகம் பற்றி எனக்கு தெரியாதா...!!

இராமர் : ம்ம்ம்.. சீக்கிரம் செல்...

அனுமான் : சரி... இராமா...

காட்சி – 2

இராவணன் அரசபை

இராவணன் : யார் நீ...?
அனுமான் : நான் அனுமான். இராமனின் தூதுவன்.

இராவணன் : எதற்காக இங்கே வந்தாய் ?
அனுமான் : முதலில் தூதுவனுக்கான மரியாதை கொடுத்து நாற்காலி போடுங்கள்.

இராவணன் : எனக்கு சமமாக உனக்கு நாற்காலியோ... ஆ..ஆ (சிரிப்போலி அரங்கமே அதிர்கிறது...)

அனுமான் : ( மனதுக்குள் ) அவசரப்பட்டு வாலை இந்தியாவில் வைத்து விட்டேனே. இப்போது நாற்காலிக்கு எங்கு போவது…?

அப்போது ஒருவன் வந்து அனுமானுக்கு நாற்காலி போடுகிறார்.

இராவணன் : யார் நீ...??

அவன் : நான் ABT Parcel service ஆளு... இவர் எங்க Brand Ambassador. இவருக்கு என்ன என்ன தேவையோ நாங்க தான் ஸ்பான்சர் பண்ணுறோம்.

இராவணன் : ஓ.. ஸ்பான்சரை கையோடு அழைத்து வந்துவிட்டாயா... நீ வந்த நோக்கம் என்ன...??

அனுமான் : சீதையை இராமனிடம் ஒப்படைத்து விட்டு. அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

இராவணன் : மறுத்தால்.....

அனுமான் : என் இராமரை போரில் நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்.

இராவணன் : போருக்கு தயார் என்று உன் இராமனிடம் போய் சொல்....

அனுமான் : என் இராமனை எதிர்க்கும் அளவிற்கு வீரம் நிறைந்த படை உன்னிடம் உண்டா....?

இராவணன் : இல்லை தான். ஆனால், இந்தியாவில் இருந்து போர் உத்தரவு வராது என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படியே போர் பற்றி யோசித்தாலும் அடுத்த ஆட்சி வந்துவிடும். நடந்ததை மறந்துவிடுவார்கள்.

அனுமான் : (மனதுக்குள்) (நம் பலவீனத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான்) சரி.. நாம் யுத்தகளத்தில் சந்திப்போம்.

காட்சி - 3

அனுமான் வீர ஆவேசமாக பேசிவிட்டு சீதையை பார்க்க ஆசோகவனத்திற்கு சென்றார்.
அனுமான் : வணக்கம் தாயே... நான் அனுமான். இராமனின் விசுவாசி.
சீதை : உன்னை எப்படி நம்புவது

அனுமான்: இதோ இராமரின் கொடுத்த மோதிரம்.
சீதை : இதே மாடல் மோதிரம் தான் அவர் வைத்திருக்கிறார். ஆனால், இது போலி போல் தெரிகிறதே. அவரது மோதிரம் சொக்க தங்கம் ஆயிற்றே...

அனுமான் : என்ன போலி மோதிரமா...??
( தன் மனதுக்குள் இராமனை அழைத்து பேசுகிறார்.)

அனுமான் : இராமா ! ஏன் போலி மோதிரம் கொடுத்தீர்கள் ?
இராமன் : தங்கம் விலை பதினைந்தாயிரம் தாண்டிவிட்டது. உன்னை நம்பி எப்படி கொடுப்பது...

அனுமான் : என் இராமரா என்னை சந்தேகம் படுவது. நான் தீக்குளித்தே ஆக வேண்டும்...!

அந்த சமயத்தில் இராவணன் அங்கு வருகிறார்.

இராவணன் : அனுமான் ! இன்னும் இந்தியாவுக்கு செல்ல வில்லையா...! இலங்கையில் தமிழர்களை தான் கொல்லுவோம். வட இந்தியர்களை கொல்ல மாட்டோம். உயிர் மேல் ஆசை இருந்தால் ஓடிவிடு...

காட்சி - 4

அனுமான் உயிருக்கு பயந்து இந்தியாவுக்கு வருகிறார். இராமனிடம் நடந்தை எல்லாம் சொல்லுகிறார்.

இராமர் : அனுமான் ! யுத்தத்திற்கு நம் படையை தயார் படுத்து. இலங்கைக்கு, இந்தியாவுக்கும் பாலம் அமைத்து அதில் நாம் செல்லுவோம்.

ஒருவன் : நீங்கள் பாலம் கட்ட நாங்க அனுமதிக்க மாட்டோம்.
அப்போது ஒருவன் வந்து எதிர்த்து குரல் எழுப்புகிறார்.

இராமன் : யார் நீ...?
அரசியல்வாதி : நான் அரசியல்வாதி ! பாலத்தை வைத்து தான் நாங்கள் அரசியல் பண்ணுகிறோம். இராமரே வந்து பாலம் அமைக்க நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம். எங்கள் உத்தரவு இல்லாமல் நீங்கள் தனியாக சண்டை போடவோ அல்லது பாலம் கட்டவோ முடியாது.

இராமன் : அனுமான் ! இது என்ன புது பிரச்சனை..?
அனுமான் : அப்போதே..இராவணன் சொன்னான். இந்தியாவில் அவ்வளவு எளிதில் போர் உத்தரவு வராது என்று. ஆரம்பமே பிரச்சனை தொடங்கி விட்டது. இவர்கள் பேசி போர் உத்தரவு போடுவதற்குள் நீங்கள், நான், இராவணன் அனைவரும் கிழவர்களாகி விடுவோம்.

அரசியல்வாதி : சந்தோஷம்.... இராவணன் கிழவனானதும் சீதையை அவனே இந்தியாவில் விட்டு விடுவான். எங்கள் ஆட்சி தான் சீதையை மீட்டது என்று சொல்லி மீண்டும் அடுத்த முறை ஆட்சிக்கு வருவோம்.

அனுமான் : பேசாமல் நாம் இங்கையே இருந்து விடுவோம் இராமா

இராமன் : அதை பற்றி தான் நானும் யோசிக்கிறேன்.

4 comments:

’டொன்’ லீ said...

அருமை....:-)

//இராவணன் : இல்லை தான். ஆனால், இந்தியாவில் இருந்து போர் உத்தரவு வராது என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படியே போர் பற்றி யோசித்தாலும் அடுத்த ஆட்சி வந்துவிடும். நடந்ததை மறந்துவிடுவார்கள்.//

:-)))

//இராவணன் : அனுமான் ! இன்னும் இந்தியாவுக்கு செல்ல வில்லையா...! இலங்கையில் தமிழர்களை தான் கொல்லுவோம். வட இந்தியர்களை கொல்ல மாட்டோம். உயிர் மேல் ஆசை இருந்தால் ஓடிவிடு...
//

:-)))

நிகழ்காலத்தையும் தொட்டு கலக்கலாக எழுதியுள்ளீர்கள்..

என் பாராட்டுகள் :-)

அத்திரி said...

சிரித்துக்கொண்டேயிருக்கிறேன்.......... அதுவும் தங்கம் மேட்டர் நெத்தியடி

குகன் said...

// ’டொன்’ லீ said... நிகழ்காலத்தையும் தொட்டு கலக்கலாக எழுதியுள்ளீர்கள்..

என் பாராட்டுகள் :-) //

நன்றி ’டொன்’ லீ. எதோ நம்மால் முடிந்தது... :)

குகன் said...

//
அத்திரி said...

சிரித்துக்கொண்டேயிருக்கிறேன்..........அதுவும் தங்கம் மேட்டர் நெத்தியடி//

:)

LinkWithin

Related Posts with Thumbnails