Tuesday, January 19, 2010

உலக சினிமா : Lemon Tree



அரபி மற்றும் ஹிப்ரூ மொழியில் வெளிவந்த படம்.

தீவிரவாதம் என்ற பெயரை பயன்படுத்தி எந்த அளவுக்கு ஒர் நாடு சர்வதிகாரம் செய்கிறது என்பதை இந்த படம் காட்டியுள்ளது. துப்பாக்கி, குண்டு வெடிப்பு, வன்முறை என்று எதுவுமில்லை. 'தீவிரவாத பயம்' என்ற காரணத்தை வைத்து ஒரு பெண்ணின் நிலத்தை ஆக்கிரப்பது தான் கதை களம்.

சல்மா என்ற பாலஸ்தின் விதவை பெண் தன் தோட்டத்தில் எலுமிச்சை பழங்களை வளர்க்கிறாள். ஒவ்வொரு மரங்களையும் தன் குழந்தை போல் கவணித்துக் கொள்கிறாள். பாலஸ்தின் - இஸ்ரேல் எல்லையின் வாழும் அவள் வீட்டு அருகே தங்குவதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி நோவா தன் மனைவியுடன் வருகிறார். மந்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகில் இருக்கும் எலுமிச்சை பழ தோட்டத்தால் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த கூடும் என்று சந்தேகப்படுகின்றனர். சல்மாவிடம் எலுமிச்சை மரத்தை வெட்டவும் சொல்கின்றனர். ஆனால் அவள் மறுக்கிறாள்.

பாதுகாப்பு மந்திரி நோவானின் மனைவி மிர நோவான் சல்மா மீது இரக்கப்படுகிறாள். சல்மாவுக்காக தன் கணவனிடம் பேசிகிறாள். ஆனால், எதுவும் சல்மாவுக்கு சாதகமாக அமையவில்லை.

சல்மாவிடம் கிராமத்தில் இருப்பவர்கள் அரசாங்கத்திடம் நிலத்தை கொடுக்க சொல்லியும், அவள் கேட்பதாக இல்லை. சியட் டவுட் என்ற வழக்கறிஞர் மூலம் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்கிறாள். பாதுகாப்பு அமைச்சருக்கும், சல்மாவுக்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வென்றார்கள் என்பது தான் மீதி கதை.

சல்மாவாக ஹியம் அப்பாஸ். அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு போடும் துணிச்சலான கதாபாத்திரம். தன் எலுமிசை மரத்தின் மீது வைத்திருக்கும் பாசம், கல்யாண வயதில் மகன், மகள் இருந்தும் காதலிப்பது, இராணுவத்தை எதிர்த்து பேசுவது என்று பல கோணங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான இஸ்ரேல் ப்லிம் அக்கெடமி விருது பெற்றுள்ளார்.

பாதுகாப்பு மந்திரி, அவர் மனைவி, வழக்கறிஞர் போன்ற கதாபாத்திரத்திற்கு வருபவர்கள் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர்.

தொடக்கத்தில் வரும் எலுமிசை தொட்டம் இறுதியில் பாதியில் காலி நிலமாக காட்டும் போது வரும் போது மனதை வருடிய இசைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹன்னா.

எலுமிச்சை பழத்தில் க்லோஸ் அப் அங்கில் ஹார்ட் மிகவும் அருமை. இவ்வளவு பெரிய எலுமிச்சை பழ இருக்குமா என்ற சந்தேகம் கூட வருகிறது.

படத்தை எழுதி இயக்கியிருப்பவர் இரான் ரிக்லிஸ். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. சல்மாவுக்கும், பாதுகாப்பு மந்திரியின் மனைவி மிர நோவானுக்கும் நடக்கும் அமைதியான பார்வையில் வசனம் எழுதியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மிரா நோவான் சல்மாவுக்கு உதவ முடியாமல் போகும் பொது கணவனை விட்டு பிரிகிறாள். அந்த இடத்தில் வசனமே இல்லாமல் கணவன், மனைவிக்குள் இருக்கும் மௌன யுத்தத்தை பார்ப்பவர்களுக்கு புரியவைத்திருக்கிறார் இயக்குநர்.

தீவிரவாதத்தில் இறக்கும் மண்ணில் 'தீவிரவாதம்' என்ற பெயரை பயன்படுத்தி நடக்கும் மனித உணர்வுகளின் படுகொலை அதிகம். அதை இந்த படம் உணர்வு புர்வமாக காட்டியுள்ளது.

2 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான படம்

நல்லாருக்கு உங்க விமர்சனம் ...

asker said...

நான் சென்னையில் உலக சினிமா dvd கடை வைத்துள்ளேன்.
என்னிடம் உள்ள திரைப்படங்களின் தொகுப்பு .
dvdworld65.blogspot.com

LinkWithin

Related Posts with Thumbnails