‘குண்டக்க – மண்டக்க’ நகைச்சுவை தொடரை படித்த பலர் என்னை இருந்தார்கள். அதில் கூறிப்பாக ‘ராஜ்’ அவர்களை சொல்ல வேண்டும். தனித்துவமான நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் வைத்து எழுதுங்கள் என்று கூறினார். அவரை போல் இன்னும் ஒரு சிலர் இதே அறிவுரை கூறினார்கள். சமிபத்தில் பதிவர் சந்திப்பில் கூட ‘கேபிள் சங்கர்’ அவர்கள் என் நகைச்சுவை தொடரை பாராட்டி, தனித்துவமான நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் பற்றி கூறியிருந்தார். அதனால், ‘குண்டக்க மண்டக்க’ தொடரை இன்னும் ஒரு கதையோடு முடித்துக் கொண்டு, புதிய நகைச்சுவை தொடராக 'குண்டு' குரு - 'மண்டு' மதன் தொடரை எழுதலாம் என்று இருக்கிறேன். (குண்டக்க மண்டக்க போல் கோர்வையாக இருப்பதால் குண்டு - மண்டு என்று தேர்ந்தெடுத்தேன்)
'குண்டு' குரு - 'மண்டு' மதன் இதற்கு முன் யாரவாது பயன் படுத்திருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. இருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
'லாரன் - ஹார்டி' கதாப்பாத்திரங்கள் போல் இந்த இரண்டு பாத்திரம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் ( பேராசையில்) 'குண்டு - மண்டு' என்று வைத்தேன். எழுத தொடங்கும் போதே பெரிய அளவில் யோசிக்கிறேன். தவறில்லை. அப்போது தான் ஒரளவாவது வெற்றி கிடைக்கும்.
இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம். என்னென்றால், அது எனக்கே தெரியாது. 'குரு' குண்டாய் இருப்பான். கொஞ்சம் புத்திசாலி. 'மதன்' ஒல்லியாக இருப்பான். சரியான மடையன். அவ்வளவு தான் இப்போதைக்கு. கார்டூன் மதன், மதி, மருது போன்றவர்கள் இந்த பாத்திரங்களை வரைந்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். (ஓவர பேசுர ... இங்கையே நிறுத்திக்கோ... குகன்)
கதைக்கு ஏற்றவாரு... இவர்கள் பாத்திரப்படைப்புகள் எப்படி மாற்ற போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ‘நாலு பேரு சிரிக்க வைக்க எதுவுமே தப்பிலே’ என்ற தைரியத்தில் தொடங்குகிறேன்.
'குண்டு' குரு - 'மண்டு' மதன் சிரிக்க வைக்க வருகிறார்கள்.
தாயாகுங்கள்… மன்னிக்கவும் தயாராகுங்கள்.
3 comments:
வாழ்த்துகள் குகன்.. காத்திருக்கிறேன்.
'குண்டு' குரு - 'மண்டு' மதன்’ - பேர்ல ஒன்னும் இல்ல குகன், எல்லாமே உங்கள் எண்ணத்தில் உள்ளது.... குண்டுவோ இல்லை மண்டுவோ நீங்க எழுதினா நாங்க தேடி வருவோம் பாஸ்.
//அதனால், ‘குண்டக்க மண்டக்க’ தொடரை இன்னும் ஒரு கதையோடு முடித்துக் கொண்டு, புதிய நகைச்சுவை தொடராக 'குண்டு' குரு - 'மண்டு' மதன் தொடரை எழுதலாம் என்று இருக்கிறேன்.//
குண்டக்க மண்டக்க வை ஏன் நிறுத்தனும்...அது பாட்டுக்கு அது...இது பாட்டுக்கு இது...creativity அப்படியே continue பண்ணுங்க.
Post a Comment