வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, January 6, 2009

புத்தாண்டை கொண்டாடிய குரு - மதன்

(தண்ணி அடித்து போலீஸிடம் மாட்டிய வாலிபர்களுக்கு இந்த நகைச்சுவை சமர்ப்பணம்.)

தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது. அதே போல் புத்தாண்டு என்றால் 'அந்த தண்ணீர்' இல்லாமல் புது ஆண்டை வரவேற்பது போல் இருக்காது. 'அந்த தண்ணீருக்கு அப்படி ஒரு மகிமை. புத்தாண்டை கொண்டாடுவதற்கு குருவும், மதனும் மிக தயாராக அலுவலகத்தில் இருந்து சிக்கிரமாக கிளம்பினர். இருவரும் சரக்கை டாஸ்மார்க் கடையில் வாங்கி அங்கேயே அருந்தினர்.

குரு : வேண்டாம் மண்டு...ரொம்ப ஜாஸ்தியா குடிக்குற..
மதன் : போட்டா குண்டு... புது வருஷம் கொண்டாடும் போது எந்த காரியத்த முதல்ல செய்யிரோம்மோ.. அதையே தான் வருஷ முழுக்க இருப்போம் தெரியுமா..

போதை தலைக்கேறியதில் மதன் தலை, கால் தெரியாமல் உலரினான்.

குரு : அப்போ.. இந்த வருஷம் முழுக்க தண்ணீ அடிக்க போறீயா...?
மதன் : அப்படி இல்ல குரு.... இன்னைக்கு சந்தோஷமா இருந்தா... வருஷம் முழுக்க சந்தோஷமா இருக்கலாம்னு சொல்ல வந்தேன்.

குரு : சந்தோஷமா இருக்குறதுக்கும் தண்ணீ அடிப்பதக்கும் என்னடா சம்மந்தம்.?
மதன் : தண்ணீ அடிச்சா நா சந்தோஷமா இருப்பேன். அப்போ நா சந்தோஷமா இருக்கனும்னா தண்ணீ அடிக்கனும்ல...

குரு : குடிக்கிறதுக்கு ஒரு சாக்கு வேணும்.... சரி குடிச்சு தொல...
மதன் : நீ குடி குரு..

குரு : வேண்டாம்ப்பா.. யாராவச்சி ஒருத்தன் ஒரளவுக்கு தெளிவா இருந்தா தான். இரண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு போக முடியும். நா அளவோட நிருத்திக்கிறேன்.
மதன் : என்னைக்கோ ஒரு நாள் தானே குரு...

குரு : எனக்கு இது போதும்... நீ குடி..
மதன் : ரொம்ப நன்றி குரு...

என்ற படி அதிகமாக மது அருந்தினான். குரு அளவோடு அருந்திவிட்டு மதன் பாட்டிலை சப்பி குடித்து முடிக்கும் வரை அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். மதன் மது அருந்திய பிறகு சர்வருக்கு பணம் கொடுத்திட்டு வெளியே வந்தனர்.
மதன் : வண்டி சாவிய கொடு... நான் ஓட்டுறேன்..
போதை கலந்த குரலில் பேசினான் மதன்.
குரு : வேண்டாம்டா அதிகமா குடிச்சிருக்க.... நா ஓட்டுறேன்...

மதன் : என்ன குரு... என்ன ரொம்ப இன்சல்ட் பண்ணுற. எவ்வளவு தண்ணி அடிச்சாலும் நான் ரொம்ப ஸ்டெடியா இருக்கே பாரு....
என்று சொல்லி வண்டி மீது விழுந்தான் மதன்.

மதனிடம் வண்டி சாவியை கொடுத்தால் சொர்க்கத்திற்கு தான் செல்வோம் என்று குருவுக்கு நன்றாக தெரியும். போதையில் இருந்த மதனுக்கு புரிய வைக்க முடியவில்லை. புத்தாண்டு கொண்டாட நேரம் குறைந்துக் கொண்டே இருந்தது. வேறு வழியில்லாமல் வண்டி சாவியை மதனிடம் கொடுத்து அவன் பின்னால் அமர்ந்தான். மதன் போதையில் வளைத்து வளைத்து வண்டி ஓட்டுவதை பார்த்த குரு சொர்க்கத்துக்கு 'பாய்ட் டூ பாய்ட்' பஸ்ஸில் செல்வது போல் இருந்தது.

குரு : டேய் மதன் போலீஸ்... வண்டி முன்னாடி இருக்கு திருப்பி போடா....
மதன் : சரி குரு...
என்று கூறி வண்டியை நேராக ஓட்டினான்.

குரு : டாய் வெண்ண... நேரா போறடா.. போலீஸ் வண்டி இருக்கு... திருப்புடா
மதன் : திருப்பி தான் போறேன் குரு..
என்று சொல்லி மதன் வண்டியை நேராக போலீஸ் வண்டி மீது மோதினான். போலீஸ் வண்டியில் இருந்து முறுக்கி மீசை வைத்த ஒருவன் இறங்குகிறார்.

போலீஸ் : ஏன்டா ! எவ்வளவு தைரியம் இருந்தா போலீஸ் வண்டி மேல வந்து இடிப்ப...
மதன் : நீங்க ஏன் வண்டிய நாங்க போற வழியில ஓட்டுறீங்க...??

போலீஸ் : நின்னுட்டு இருந்த வண்டி மேல இடிச்சிட்டு... வண்டி போய்ட்டு இருக்கா சொல்லுற.. தண்ணியடிச்சிருக்கியா..
குரு : இல்ல சார்
மதன் :அவன் கம்மியா அடிச்சான். நான் ஜாஸ்தியா அடிச்சேன்

குரு : (மெதுவாக மதனிடம்) டாய் இப்போ தான் உனக்கு உண்ம பேச தொணும்மா... வாய முடுடா
போலீஸ்: எவ்வளவு அடிச்சிங்க...
குரு : கொஞ்சம் தான் ஸார்..

போலீஸ் : அதான் எவ்வளவு கேக்குறேன்...
குரு : க்வாட்டர் இருக்கும் ஸார்..
மதன் : டேய்.. நான் க்வாட்டரா அடிச்சேன்... போய் சொல்லுறான் ஸார்... இரண்டு ஃபுல் அடிச்சோம்.
குரு : (மெதுவாக )வாய் வச்சிக்கிட்டு கம்முனு இருடா

போலீஸ் : இராத்திரி நேரத்துல Drunk & Drive பண்ணிருக்கீங்க.. ஃபைன் இங்க கட்டுறீங்களா... கோர்ட்ல கட்டுறீங்களா...
குரு : என் கிட்ட அம்பது ரூபா தான் இருக்கு...
மதன் : கவலப்படாத குரு... என் கிட்ட க்வாட்டர் பாட்டில் இருக்கு.. போலீஸ்க்கு லஞ்சமா கொடுத்திடலாம்.

போலீஸ் : ஏன்டா...என்ன பார்த்தா தண்ணியடிக்கிறவன் மாதிரி தெரியுதா...
என்று கோபமாக கூறி இருவரையும் அடித்து வெறு ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து செல்கிறார் போலீஸ்காரன். போதையில் இருந்த மதன், குருவை போலீஸ் கண்முன் தெரியாமல் அடிக்கிறது. காலையில் போதை தெளிந்த மதன்…

மதன் : என்ன குரு... சட்டையில்லாம..ஜட்டியோட உக்காந்திருக்க...
குரு : நான் மட்டுமாடா அப்படி இருக்கேன்... உன்னையும் கொஞ்சம் பாருடா.

மதன் : என்ன குரு ! நானும் சட்டையில்லாம இருக்கேன். புது வருஷம் கொண்டாட அந்த மாதிரி இடத்துக்கு கூட்டிட்டு வந்தியா... இராத்திரி போதையில என்ன பண்ணேனு ஞாபகமில்ல... இன்னொரு நாளு போதையில்லாம இந்த இடத்துக்கு வரனும்..

குரு : அட பாவி... உடம்பு டெரஸ் இல்லனா ‘அந்த மாதிரி’ இடத்துல இருக்கேன் நினைக்கிறியா... நாம போலீஸ் லாக்கப்புல இருக்கோம்...

மதன் : எதுக்கு நம்பல்ல போலீஸ் அரஸ்ட் பண்ணிச்சு...
என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

குரு : இராத்திரி ரவுட்ஸ் வந்த போலீஸ் கிட்ட க்வாட்டர் நீட்டுனா.. அடிச்சு ஸ்டேஷன்ல்ல போடாம்ம என்ன பண்ணுவாங்க....
மதன் : ஏன் க்வாட்டர் அவருக்கு பத்தலையா...

குரு : டாய்... இப்படி பேசி பேசியே என்ன ஜெயில்ல போட வச்சிட்ட.. வருஷத்துக்கு முதல் நாளே போலீஸ் லாக்கப் இருக்கோம். இந்த வருஷம் முழுக்க ஜெயில் தான் இருக்க போறோம்.

பாவம் ! இருவரும் கண்ணீருடன் புத்தாண்டை போலீஸ் லாக்கப்பில் கழித்தினர்.

3 comments:

யாத்ரீகன் said...

:-)))))

பலசரக்கு said...

தாங்க முடியல

குகன் said...

// யாத்ரீகன் said...
:-))))) //

// பலசரக்கு said...
தாங்க முடியல //

நன்றி... நன்றி...

LinkWithin

Related Posts with Thumbnails