எதோ பெரிதாக செய்ய போவது போல் பரப்பரப்பாக குருவின் அறைக்கு வந்தான் மதன். இங்கும், அங்கும் எதையோ தொலைத்து விட்டு தேடுவது போல் நின்றான். அறையில் இருக்கும் ஒவ்வொரு துணியும் ( குருவின் ஜட்டி உட்பட ) எடுத்து போட்டுவிட்டு மதன் திவிரமாக தேடினான்.
குரு : என்ன மதன்.... எத தேடுற...??
மதன் : ஒண்ணு எழுதனும்... பேனா இருக்கா..
குரு : அடபாவி பேனாவுக்கு தான் இவ்வளவு பெரிய பரபரப்பா..
மதன் : சிக்கிரம் கொடு...கவிதை எழுதனும்.. அதுக்குள்ள மறந்திட போறேன்.
குரு : அடபாவி... நல்ல தானே இருந்த...யாராவது லவ் பண்ணுறியா
மதன் : இல்ல குரு.. தலைவர் 'பழம்' புலி இருக்கார்ல... அவரு இடை தேர்தல்ல நிக்கிறாரு...
குரு : அவரு தேர்தல்ல நிக்கிறதுக்கு... நீ கவிதை எழுதுறதுக்கும் என்ன சம்பந்தம்.
மதன் : 'பழம்' புலி கூட்டனி ஆதரவு பத்திரிக்கை...அவருக்கு ஆதரவா கவிதைய பிரசுரம் பண்ணுறாங்க... 'பழம்' புலி எனக்கு போன் போட்டு அவர பத்தி எழுதி தர சொன்னாரு.
குரு : அவர பத்தி எழுதனும்னு... அவரே சொன்னாரா...
மதன் : ஆமா குரு..
குரு : என்ன தலைவருடா அவரு.?? என்ன எழுதனும்னு அவரே கேக்குறாரே.. அசிங்கமா இல்ல...
மதன் : இப்ப இது தான் ‘அரசியல்’ குரு...
குரு : என்ன கருமம்மோ விடு... இந்த பேனாவ எடுத்து தொல
மதன் பேனாவை வாங்கி தலையை தட்டி தட்டி பார்த்தான். கவிதை வர வில்லை. தலையில் இருந்து முடி தான் உதிர்ந்தது. பிறகு பேனாவை வாயில் வைத்து யோசித்தான். பாவம் ! அப்போது கூட மதனுக்கு கவிதை வரவில்லை.
மதன் வாயில் பேனா வைப்பாதை பார்த்து குரு "வ்வே...வ்வே.." என்று குரு வாந்தி எடுப்பது போல் செய்தான்
மதன் : என்ன குரு.. ஏதாவது கண்ணடத சாப்பிட்டியா...
குரு : பேனாவ ஏன்டா வாய்ல வச்ச..??
மதன் : ஸாரி குரு... ஐடியா வரனும் பேனாவ வாயில வச்சேன்.
குரு : அந்த பேனாவ நிறைய வாட்டி காது நோண்டுருக்கேன்.
மதன் : பேனாவால காது நோண்டுனியா... வ்வே...வ்வே..
குரு : வாந்தி எடுத்தது போதும்... சிக்கிரம் எழுதிட்டு பேனாவ கொடு...
மதன் : குரு... நீயே ஒரு நல்ல கவிதை சொல்லேன்.
குரு : அடபாவி... தமிழுக்கு இது வரைக்கும் நான் மட்டும் தான் கொடும பண்ணாம இருந்தேன். என்னையும் சேர்த்துக்க பார்க்குறீயா...
மதன் : என்ன குரு... நீ, நானும் அப்படியா பழகினோம்... எனக்காக ஒரு சின்ன உதவி தானே...
குரு : சரி...சரி... ரொம்ப குழையாத.. நா சொல்லுறத அப்படியே எழுது...
மக்களை காக்க
மண்ணை காக்க
வானத்தை காக்க
மதன் : குரு.. ஒரு சின்ன சந்தேகம்
குரு : என்ன சொல்லு..?
மதன் : மக்கள், மண்ணு காக்குறது ஓ.கே... ஆன வானத்த எப்படி காப்பாங்க...?
குரு : கவிதைனா உணரனும்... ஆராய்ச்சி பண்ண கூடாது.. ரொம்ப கேள்வி கேட்டா எனக்கு கவிதை வராது.
“போஸ்ட்டர், ஃபேனர்ல படிச்ச சொன்ன.. இப்படி கேள்வி கேக்குறானே” என்று குரு மனதில் நினைத்துக் கொண்டான்.
குரு : மாறுபடியும் முதல்ல இருந்து சொல்லுறேன்....
மக்களை காக்க
மண்ணை காக்க
வானத்தை காக்க
'பழம்' புலிக்கு ஆதரவு தந்து
வெற்றி பெற செய்வீர் !
எப்படி இருக்கு...?
மதன் : நா எதிர்பார்த்த அளவுக்கு இல்ல... பரவாயில்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.
குரு : எல்லா என் நேரம்..
குரு சொல்லியதை அப்படியே எழுதி மதன் 'பழம்' புலி ஆதரவு பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்தான். அந்த ஆதரவு பத்திரிக்கையும் அப்படியே தங்கள் பத்திரிக்கையில் மதன் கவிதையை போட்டது. மதனின் போறாத நேரம்... அந்த கவிதை படித்த இன்ஸ்பெக்டர் கண்ணாயிரம் மதனை தேடி அவர் அறைக்கு வருகிறான்.
குருவை பார்த்து... "நீ தான் புலிக்கு ஆதரவா பத்திரிக்கையில எழுதினியா.." என்று கண்ணாயிரம் கேட்டான்.
“இல்ல ஸார்... இவன் தான்" என்று மதனை காட்டினான் குரு.
கண்ணாயிரம் : புலிக்கு ஆதரவா பேசினா சட்டப்படி நடவடிக்கை எடுப்பாங்க தெரிஞ்சும்.. நீ ஆதரவா பத்திரிக்கையில எழுதுறியா..
மதன் : நா 'பழம்' புலிக்கு ஆதரவா தானே எழுதுன...
கண்ணாயிரம் : என்னடா... பழம், மாபழம் விளையாட்டு காட்டுற... இது நீ எழுதுனது தானே...
மதன் : உரக்க குரலில்...
மக்களை காக்க
மண்ணை காக்க
வானத்தை காக்க
'ஈழம்' புலிக்கு ஆதரவு தந்து
வெற்றி பெற செய்வீர் !
மதன் : ஐயோ...! சின்ன எழுத்து பிழ...நான் எழுதுனது ‘பழம்’ புலி பத்தினது.... எப்படி 'ஈழம்' புலி வந்தது தெரியில்ல...
கண்ணாயிரம் : இப்படி சொல்லுவனு தெரிஞ்சு தான்... நீ பத்திரிக்கை எழுதி அனுப்புச்ச பேப்பரையும் எடுத்து வந்திருக்கேன்.
குரு அந்த பத்திரிக்கையை வாங்கி பார்க்க... 'பழத்திற்கு' பதில் 'ஈழம்' என்று அச்சாகியிருந்தது.
குரு : டேய்.... அறிவிருக்காடா... 'ப' எங்க இருக்கு...' ஈ' எங்க இருக்கு.. எப்படிடா மாத்தி எழுதுவ...
.
மதன் : என்ன குரு... என்ன மட்டும் தப்பு சொல்லுற... நீ சொல்ல சொல்ல தானே நான் எழுதுன.. ஸ்பெல்லிங் மிஸ்டெக் பார்த்து கொடுத்திருக்கலாம்ல..
குரு : நானே சொந்தமா எழுதின மாதிரி சொல்லுற...
கண்ணாயிரம் : ஓ..ஓ.. உனக்கும் இதுல சம்மந்தம் இருக்கா... அப்போ இரண்டு பேரும் போலீஸ் ஸ்டேயனுக்கு நடங்க...
குரு : அடபாவி... வாய வச்சி கிட்டு சும்மா இருக்க மாட்டியா... என்ன சேர்த்து ஜெயிலுக்கு கூப்பிட்டு போறாங்க...
மதன் : நல்ல வேளை.... என்ன மட்டும் அரஸ்ட பண்ணுறாங்களே கவலைப்பட்டேன். எனக்கு துணையாக உன்னையும் அரஸ்ட் பண்ணிட்டாங்க...
குரு : உன்ன என்ன பண்ணுறேன் பாரு...
குரு மதன் முதுகில் நாலு அடி கொடுத்தான். உடனே கண்ணாயிரம்...
கண்ணாயிரம் : என்டா.. அப்ருவரா மாறுனவன அடிச்சு கொலை பண்ணவா பார்க்குற...
"ஐயோ... கொலை கேஸ் வேறையா..." என்று பயந்த படி போலீஸ் ஜிப்பில் குரு ஏறினான். குரு, மதன் இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.
4 comments:
//புலிக்கு ஆதரவா பேசினா சட்டப்படி நடவடிக்கை எடுப்பாங்க தெரிஞ்சும்.. நீ ஆதரவா பத்திரிக்கையில எழுதுறியா..//
நகைச்சுவை நன்றாக இருக்கிறது.ஆனால், புலிகளின் உணர்வுகளை கேலியாக்குவது தவறு.
ஒரு எழுத்து பிழை எப்படி அர்தம் மாறி விடுகிறது என்பதை நகைச்சுவையாக எழுதினேன். மற்றப்படி எந்த உள்ளூணர்வும் இல்லை.
உங்களால இன்னும் பெட்டரா எழுத முடியும்னு நினைக்கிறேன்
குண்டக்க மண்டக்க வில இருந்த அந்த sharpness இதுல கொஞ்சம் குறையுது......அடுத்தடுத்த பாகங்கள்ல பெட்டரா இருக்கும்னு எதிர் பார்க்குறேன்
Post a Comment