உலக வங்கி நிறுவனம் எட்டு வருடங்களுக்கு சத்யம் சேவையை தூண்டிப்பதாக அறிவித்திருந்தன. இதை அடுத்து, மேடாஸ் நிறுவனம் விவகாரம், கணக்கு மோசடி, ராமலிங்க ராஜூ வாக்குமூலம் என்று சத்யம் நிறுவனத்திற்கு எதிராக பல செய்திகள் நாளேடு வணிக பக்கங்களை நிரப்பிக் கொண்டு இருக்கிறது. இதை அடுத்து இன்று, உலக வங்கி நிறுவனம் ‘விப்ரோ’ நிறுவனத்தின் சேவை நான்கு வருடம் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்த செய்தி ஐ.டி நிறுவனங்களுக்கு மேலும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
உலக வங்கியிடம் வணிகம் செய்யும் எந்த நிறுவனமும் அதன் வங்கி ஊழியர்களுக்கு தனிபட்ட முறையில் பரிசு, அன்பளிப்பு, பணம் என்று எதுவும் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் அந்த வங்கி நீதிப்படி ‘லஞ்சம் கொடுப்பது போல்’ ஆகும். விப்ரோ நிறுவனம் தங்கள் பங்குகளை குறைந்த விலையில் உலக வங்கி ஊழியர்களுக்கு விற்றுள்ளது. இதனால் உலக வங்கி விப்ரோ நிறுவனத்தின் சேவை உறவை தூண்டித்துள்ளது. இதே போல் மேகா ஸ்பாட் என்று இன்னொரு நிறுவனத்தின் உறவையும் நான்கு ஆண்டு தூண்டித்துள்ளது.
மேகா ஸ்பாட் நிறுவனம் உலக வங்கி வணிகம் செய்யும் அதே துறையில் கால் பதிக்க உள்ளதால், மேகா ஸ்டாப் நிறுவனத்தை போட்டி நிறுவனமாக கருதி உறவை முடித்துள்ளனர். உலக வங்கியின் இந்த அதிரடி முடிவால் விப்ரோவின் பங்குகள் 10 சதவீதமும், மேகா ஸாப்ட் பங்குகள் 8 சதவீதம் இறங்கியுள்ளது.
சத்யம் விவகாரம் முதலில் தொடங்கி வைத்தவர் 'உலக வங்கி' என்பது குறிப்பிடதக்கது. உலக வங்கி முடிவுக்கு பிறகு தான் சத்யம் நிறுவனத்துக்கு அடி மேல் அடி விழுந்தது. இப்போது உலக வங்கி இதே முடிவை விப்ரோ நிறுவனத்துக்கு எதிராக எடுத்திருப்பதால் ஐ.டி. துறையில் மேலும் தள்ளாட்டம் ஏற்ப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல், உலக வங்கி உறவு முடித்துள்ள இந்த மூன்று நிறுவனங்களுமே இந்திய நிறுவனங்கள் என்பதால் இந்திய நிறுவனங்களுக்கு இன்னொரு கருப்பு புள்ளியாக இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இன்னும் என்ன நடக்க போகிறதோ என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
5 comments:
அன்பரே,
ஒன்றன் பின் ஒன்றாக தான் வரும். பங்கு சந்தை ஒரு மாய விளையாட்டு அதில் இந்த பூதங்கள் மெதுவாக தான் வரும்.... இன்னும் காட்சிகள் நிறைய உண்டு
பொறுத்தருள்க
நன்றி
தமிழ் உதயன்
oh my God !!!
கிராமத்தில ஒரு பழமொழி சொல்வாங்களே "நெல் விதைத்தா நெல் முளைக்கும்" என்று ... அதான் ஞாபகத்திற்கு வருகிறது.
இங்கே "பொய்யை" அல்லவா விதைத்திருக்கின்றனர் !!!!!
//
தமிழ் உதயன் said...
இன்னும் காட்சிகள் நிறைய உண்டு //
அந்த காட்சிகளை நினைத்தாலே பயமாக இருக்கிறது. நடந்தால் அவ்வளவு தான்... வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாகிவிடும்.
// இங்கே "பொய்யை" அல்லவா விதைத்திருக்கின்றனர் !!!!! //
அந்த பொய் தான் இந்தியா மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதித்திருக்கிறது.
Post a Comment