கமலா
சண்முகம் கமலாவின் தோள் மீது ஒரு கையும், இடுப்பில் ஒரு கையும் போட்டுக் கொண்டு பேசிப்படி நடந்து வந்தான்.
"எத்தன வருஷமா இந்த தொழில்ல இருக்க..." என்றான் சண்முகம்.
"இரண்டு வருஷமா ஸார்...!" என்றாள்.
சண்முகத்தின் காம பார்வை கமலாவின் தேகத்தை மொய்த்து கொண்டு இருந்தது. இந்த வேலைக்கு என்று வந்த பிறகு ஆண்ணின் தீண்டல் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்று அமைதியாக நடந்தாள்.
" நீ பேசாம இந்த இடத்த விட்டுட்டு என் கூடவே தங்கிக்கோ.." என்று கூறி அசட்டு தனமாக சிரித்தான். கமலா அவனை தாங்கி நடந்தபை அறையில் விட்டு வெளியே வந்தாள். சேவைக்கும், தொழிலுக்கும் வித்தியாசம் தெரியாதவனிடம் பேச விருப்பமில்லாமல் பொறுமையாக நர்ஸ் கமலா அடுத்த நோயாளியை கவனிக்க சென்றாள்.
நன்றி : அதிகாலை.காம்
*************
புத்தகம்
பரபரப்பாக புத்தகக் கண்காட்சியில் இறுதி நாள் நடந்துக் கொண்டு இருந்தது. புத்தக கடைகளின் பெயரை பார்த்து நடந்ததில் பலர் என்னை இடித்து சென்றாதை கூட தெரியாமல் இருந்தேன். பாரதியார், புதுமைபித்தன், கல்கி என்று பெரிய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கினேன். அப்போது ஒரு புத்தக கடையில் ஆர்வமாக நுழைந்தேன். இந்த கடையில் இருக்கும் புத்தகங்களை பார்ப்பதற்காகவே தினமும் ஐந்து ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு கண்காட்சிக்கு வந்திருக்கிறேன். அந்த கடையின் உரிமையாளர் என்னை பார்த்து சிரித்து விட்டு, அவர் கடையில் இருந்த பத்து பிரதிகள் கொண்ட புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். வாடிய புத்தகத்துடன் அந்த புத்தகங்களை வாங்கினேன்.
உலக புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களோடு விற்க படாத நான் எழுதிய புத்தகளையும் கையில் சுமந்தப்படி புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்தேன்.
*****
ஒரு நிமிட கதைகளுக்கு போட்டியாக அரை நிமிட கதைகள் எழுதியிருக்கிறேன். இது ஒரு சோதனை முயற்சி மட்டுமே... திட்ட நினைப்பவர்கள் தனியாக மின்னஞ்சல் அனுப்புங்கள்.
No comments:
Post a Comment