இரண்டு, மூன்று நாட்களாக முழு பக்க கட்டுரையாக வந்த 'சத்யம்' ராமலிங்க ராஜூ விவகாரம், ஒரு வழியாக கைது செய்யப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது. எந்த நிறுவனமும் சத்யம் நிறுவனத்தை வாங்க முன் வராததால், மத்திய அரசு கட்டுப்பாட்டு கீழ் வந்துள்ளன. . பத்து போர்ட் மெம்பர்ஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி எப்படியும் நாளைய நாளிதழில், வாரயிதழில் வரும் (நாளடைவில் இது பெட்டி செய்தியாக மாறும்.) இன்று Times of India படித்த இரண்டு விஷயங்களை பற்றி சொல்லியாக வேண்டும். முதல் விஷயம் என் மனதை நெருடியது. அடுத்த விஷயம் அதிர்ச்சி உள்ளாக்கியது.
ஐ.டி துறையில் யூனியன் இருந்தால் இந்த பிரச்சனை வராமல் இருந்திருக்கும் என்று பலர் பேட்டி அளித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு வேளை யூனியன் இருந்திருந்தால், நிறுவனம் நஷ்டப்பட்டாலும் தங்களுக்கு மாத சம்பளம் வேண்டும் என்று எல்லா ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கி இருப்பார்கள். ஆனால், சத்யம் விஷயத்தில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அப்படி எதுவும் நடந்துக் கொள்ளவில்லை.
நேற்று, ஹைதிராபாத்தில் சத்யம் ஊழியர்கள் நிறுவனத்தின் முன்பு ‘Spirit of Satyam’ என்று வண்ண நிறங்களாலும், பேனாவாலும் கையெழுத்து போட்டனர். ஒரு நிறுவனம் வீழ்ச்சி காணும் நிலையில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மேலும் தொந்தரவு கொடுக்காமல் ‘துணையாக இருப்போம்’ என்று கூறுவதை பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. (15,000 பேர் வெளியில் வேலை தேடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். தேடினாலும் வேலை கிடைக்க வேண்டுமே...!)
இது வரை வந்த செய்தி, ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது போல் எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. இரண்டு மாதம் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் நிறுவனம் இருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பது தெரியவில்லை. மீண்டும் 'சத்யம்' துடித்து எழுந்தால், 'இந்த கஷ்டத்தில் ஆதரவாய் இருந்த ஊழியர்களுக்கு நிச்சயமாக அதிக பங்கு இருக்கும்.
‘Spirit of Satyam’ மனதை நெருடிய செய்தியை படிக்கும் போது இன்னொரு செய்தியையும் படித்தேன். செப்டம்பர் 30,2008 முடிவில் சத்யமின் மொத்தம் ஊழியர்கள் 52,865. ஆனால், நேற்று வரை(ஜனவரி,2009) சத்யம் ஊழியர்கள் எண்ணிக்கை 47,570 பேர்கள். அதுவும் வெளியே துரத்தப்பட்ட ஊழியர்கள், தானாக வேலையை விட்டு சென்ற ஊழியர்கள் தகவல்கள் சரியாக டேடா பேஸ்யில் இல்லை என்பது தான். வங்கி கணக்குகள் ஊழியர்கள் பெயரில் இருக்கிறது. ஆனால், அந்த ஊழியர் அந்த நிறுவனத்தை விட்டு சென்று விட்டார் என்கிறார்கள். பெரும்பாலான ஊழியர்கள் கொத்தாக சென்றதால், அவர்களில் தகவல்கள் சரியான முறையில் அப்டேட் (update) செய்ய முடியவில்லை.
மேடாஸ் விவகாரத்தில் 30% வீழ்ச்சி, முக்கிய வாடிக்கையாளர் உலக வங்கி கொடுத்த புகார், ராமலிங்க ராஜூவின் வாக்குமுலத்தின் 78% வீழ்ச்சி என்று தினமும் எதாவது ஒரு அதிர்ச்சியான தகவல் சத்யம் நிறுவனத்திற்கும், ஊழியர்களுக்கும் வருகிறது. ஜனவரி 7 அன்று புதன்கிழமை நிஃப்டி 700 புள்ளிகள் வீழ்ச்சிக்கு சத்யம் பங்குகள் இருந்ததால், ஜனவரி 12 முதல் சத்யம் நிறுவனம் நிஃப்டியில் இருந்து விலக்கப்படுகிறது. சத்யம் பங்குகளை வாங்கியவர்கள் இது வரை 13,000 கோடி இழந்துள்ளார்கள்.
கை மாறிய சத்யம், ஊழியர்களுக்கு மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ‘துணையாக இருப்போம்’ என்று கூறிய ஊழியர்களுக்கு மத்திய அரசும் துணையாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பமாக இருக்கும்.
3 comments:
உண்மை...அருமையான பதிவு...
சத்யம் ஊழியர்களின் வங்கி கடன் அட்டை:
அடுத்து சத்யம் ஊழியர்களின் வங்கி கணக்குகள் மூலம் பெறப்பட்ட கடன் அட்டைகளின் மதிப்பை குறைத்தும்,Available Cash Limit:Rs.0 ஆகவும் செய்து தன் பங்கு "கடனை" ஆற்றி உள்ளது அந்த வங்கி.
தகவலுக்கு நன்றி ரமேஷ்.
கடன் அட்டை கொடுக்கும் வங்கிகள் "கடனை" கொடுத்து விட்டு... வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்து வாடிக்கையாளர்களை தற்கொலைக்கு தூண்டுவதை விட இது எவ்வளவோ பராவில்லை என்று தோன்றுகிறது.
Post a Comment