வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, July 20, 2010

ஐயப்பன் திருமணமாகாததற்கு இது தான் காரணமா ?

நமது புராண கதையில் எடுத்துக் கொண்டால், சிவன் அப்பாவி தனமாக வேண்டிய வரத்தை அரக்கர்களுக்கு கொடுத்துவிடுவார். விஷ்ணு தன் தந்திரத்தை பயன்படுத்தி அரக்கர்களை ஒழிப்பார். தேவர்களுக்கு பிரச்சனை வரும் என்று தெரியாமல் சிவன் தன் இஷ்டத்துக்கு வரம் கொடுத்துக் கொண்டு தான் இருந்தார். அப்படி, ஒரு அரக்கனிடம் அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை வெடித்து இறந்து விடுவதாக வரம் கொடுத்து விடுகிறார். கொடுத்த வரத்தை சோதித்து பார்க்க சிவன் தலையில் கை வைக்க அரக்கன் வருகிறான். விஷ்ணு விஜய் போல் எண்ட்ரி கொடுத்து பெண் வேடத்தில் அரக்கனை கொல்கிறார். விஷ்ணுவின் பெண் உருவத்தை பார்த்து சிவன் மயங்க, இருவருக்கும் 'ஐயப்பன்' என்ற ஆண் குழந்தை பிறக்கிறது. முதல் ஆண் – ஆண் உறவால் பிறந்த குழந்தை 'ஐயப்பன்' என்று புராண கதைகள் சொல்லுகிறது.புராணத்தின் பல கதைகள் நம்பும் படியானது இல்லை. நல்லது மட்டும் எடுத்துக் கொண்டு கற்பனைகளை ஒதுக்கி வைக்க வேண்டிய கதைகள் பல உள்ளது. இதில் 'கே' உறவில் பிறந்த ஐயப்பன் என்பதை விட, இரண்டு ஆண்ணின் மகன் என்று கொஞ்சம் கௌரவமாக சொல்லுவோம். என்ன தான் அரசக் குடும்பத்தில் வளர்ந்தாலும், இரண்டு ஆண்களுக்கு பிறந்ததால் பெண்கள் மீது ஈர்ப்பு வராமல் திருமணம் செய்யாமல் இருந்தாரா என்ற சந்தேகம் வரலாம்.

விஞ்ஞான ரீதியாக இரண்டு ஆண்ணுக்கும், இரண்டு பெண்ணுக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஆனால், லெஸ்பியன், கே தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு இவர்கள் பாதிப்பு இருக்குமா என்ற சந்தேகம் நிலவிவருகிறது. பலர் கே, லெஸ்பியன் போன்றவர்களை மன நோயாளியாக பார்ப்பதால் சட்டப்படி இவர்கள் குழந்தை தத்தெடுப்பதில் சிக்கல் உள்ளது.

இந்தியாவில், ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டியது இருந்தால் திருமணமான ஆண்,பெண் சேர்ந்து தத்தெடுக்கலாம் அல்லது திருமணமாகாத / தனிமையில் வாழும் பெண்கள் தத்தெடுக்கலாம். அதனால், கே, லெஸ்பியன் ஜோடிகள் சட்டப்படி குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. இவர்கள் தத்தெடுக்க மூன்று விதமான பிரச்சனைகளை நேரில் சந்திக்கிறார்கள்.

1. கே, லெஸ்பியன் பராமரிப்பில் வளர்ந்தால் அந்த குழந்தைக்கு தன் பால் உணர்வு குறித்து சந்தேகம் வரலாம். தன்னையும் அவர்கள் வளர்ப்பு பெற்றோர்களை போலவே எண்ணிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
2. குழந்தை கே, லெஸ்பியனுடன் வளர்ந்தால் சுற்றி இருக்கும் சமூகம் இவர்களை மனநோயாளிகளாக பார்ப்பது போல் அந்த குழந்தையை பார்க்கும். அதன் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்.
3. கே, லெஸ்பியன் குழந்தைகள் பள்ளியிலோ அல்லது விளையாட்டிலோ அவர்களது நட்பு வட்டத்தில் கேலியாக பேசலாம். உதாசினம் செய்யலாம். இதனால், அந்த குழந்தைக்கு தன் மீது தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்புள்ளது.

கே, லெஸ்பியன் போன்றவர்கள் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு தனிமையாக்கப்பட்ட போதும், அவர்களுக்கு என்று குடும்பம் அமைத்து கொள்ள இது போன்ற நடைமுறை சிக்கல் உள்ளது.

இந்தியாவில் கே, லெஸ்பியன் பற்றின வெளிப்படையாக பேசாமல் இருப்பதால் அவர்களை பற்றி ஆராய்ச்சியோ, சர்வேவோ பெரிய அளவில் எடுக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவில் வெளிப்படையாக பேசப்படுவதால் அவர்கள் தத்தெடுத்து குழந்தைகளை பற்றின சர்வே ஒன்று வெளியீட்டு இருக்கிறார்கள்.

அதில், கே உறவில் ஈடுபடுபவர்கள் பெண் குழந்தையை தத்தெடுப்பதிலும், லெஸ்பியன் உறவில் ஈடுபடுபவர்கள் ஆண் குழந்தையை தத்தெடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்கள் பால் இனத்தில் இருக்கும் குழந்தையை தத்தெடுத்தால் அம்மா, மகள் உறவை / தந்தை, மகன் உறவை கொச்சை படுத்துவார்கள் என்ற அச்சமே காரணமாம்.

இவர்கள் தத்தெடுக்கும் குழந்தைகள் யுவன்/யுவதியாக வளர்ந்த பிறகு செக்ஸ்யில் சாமான்ய யுவன்/யுவதி காட்டிலும் ஆர்வம் குறைவாக இருப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் தத்து குழந்தைகளிடம் செக்ஸ் பற்றி கே, லெஸ்பியன் பெற்றோர்கள் பேச தயங்குவதே காரணம் என்று கூறுகின்றனர். அதே சமயம், மற்ற யுவன் / யுவதிகளை விட சமூக காரியங்கள், உதவிகள் செய்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.

கே தம்பதியர்கள் குழந்தை வளர்ப்பதில் தெளிவு இல்லாதவர்கள். லெஸ்பியன் தம்பதியர்கள் குழந்தை வளர்ப்பதில் திறமையானவர்கள் என்ற இன்னொரு கருத்தும் உண்டு.

இப்படி, பல கருத்துகள் வெளியிட்டாலும் கே, லெஸ்பியன் ஜோடிகள் குழந்தைகள் தத்தெடுக்கும் உரிமையை சட்ட ரீதியான உரிமை வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

'செக்ஸ்' என்பது தனிப்பட்ட உரிமை. எந்த பெற்றோர்கள் வளர்த்த யுவன் / யுவதியாக இருந்தாலும் சரி, பெற்றோர்களின் வளர்ப்பு முறைக்கும், செக்ஸ்க்கும் சம்பந்தமில்லை. சுற்றமும், நண்பர்கள் சேர்கை தான் 'செக்ஸ்' பற்றிய விழிப்புணர்வும், மோகமும், புரிதலும் ஏற்ப்படுத்துகிறது என்பதை தான் நடைமுறையில் சந்திக்கிறோம். ‘செக்ஸ் பிடிக்கவில்லை’ என்றால் மருத்துவ ரீதியாக அனுக வேண்டிய ஒன்று தான். ஆனால், யார் மீது ‘செக்ஸ் ஈர்ப்பு’ வருகிறது என்பது மனது சம்பந்தப்பட்டது. இதற்கும், வளர்ப்பு முறைக்கும் சம்மந்தமே இல்லை என்பது தான் அமெரிக்க சர்வே வெளியீட்டுள்ளது.

விநாயகர் கூட தான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவரை சந்தேகப்படாமல் இருப்பவர்கள் ஐயப்பன் திருமணம் ஆகாமல் இருப்பதையும் சந்தேகப்பட கூடாது. அதே போல், அனிதாவுக்கும், கார்த்திக்கும் பிறக்கும் குழந்தையும், ஜானகி, மாலதி இருவரும் தத்தெடுக்கும் குழந்தையும், கௌஷிக், கருணாகரன் தத்தெடுக்கும் குழந்தையும் ஒன்று தான்.

**

ஐயப்பன், விநாயகர் என்று குறிப்பிட்டது புரிதலுக்காக மட்டுமே.... இந்து துரோகம் செய்துவிட்டேன் என்று பின்னூட்டம் போட்டு கட்டுரையை திசை திருப்ப வேண்டாம் என்று பணிவுடம் கேட்டு கொள்கிறேன்.

1 comment:

கெட்டவன் said...

மிக அருமையான பதிவு...ஆரியனின் கட்டுகதைகளுக்கு நல்ல செருப்படி...

LinkWithin

Related Posts with Thumbnails