காந்தி வழி வந்த
எங்கள்
தென்நாட்டு காந்தி !
காந்தி பிறந்த நாளில்
மண்ணை மறந்தார்
கர்மவீரர் காந்தி !
பீஷ்மர் இருந்த இடத்தை
குசேலன் நிறப்பினார் !
பூஜை செய்பவர் மத்தியில்
பகுத்தறிவு ஆதரவு பெற்றார் !
பதவிக்கு படிப்பற்றிவு
தேவையில்லை என்று காட்டிய
முதல் அரசியல்வாதி !
சரஸ்வதி இருக்கும்
இடத்தில் விருந்தோம்பலாம்
பள்ளி குழந்தைகளுக்கு
சத்துணவு திட்டம் !
ஆண்கள் கொண்டாடிய
பிரதமர் பதவியில்
பெண்ணை அரியனை ஏற்றிய
முதல் ஆண் !
இடம் கொடுக்க மறுத்தவர்களின்
இடத்தில் இருந்து கொண்டு
இட ஒதுக்கீடு பற்றி பேசினார் !
பொன்னான் ஆட்சிக்காக
இன்னொரு கர்மவீரருக்காக
காத்திருக்கும் மக்கள் !
8 comments:
//பொன்னான் ஆட்சிக்காக
இன்னொரு கர்மவீரருக்காக
காத்திருக்கும் மக்கள் !//
நம்பமுடியவில்லை. இப்போதும் கூத்தாடிகளைத் தலையில் தூக்கிவைத்து ஆடுபவர்களாகத்தான் மக்கள் இருக்கிறார்கள்.
//பீஷ்மர் இருந்த இடத்தை
குசேலன் நிறப்பினார் !
பூஜை செய்பவர் மத்தியில்
பகுத்தறிவு ஆதரவு பெற்றார் !//
குகன்,
பீஷ்மர் யார்?
"குசேலனாய்" பெருந்தலைவர்
பொருந்தாத உவமை. தனக்கொன வாழப் பொருந்தகை
உதவ மட்டுமே "நீண்டகை". முழங்கால் தாண்டியது
முறைகள் தாண்டியதில்லை.
அன்று அந்த கல்வி அவர் வழங்காது, இன்று போல்
இருந்திருந்தால், தமிழநாடும் இந்தியாவின் பீகாராய்,
பின்னடைவிலிருந்திருக்கும்.ராஜாஜி சொல் கேட்டு,
காமராஜின்/காங்கிரசின் தொண்டர்களை ஒரு "குழு"
எனக் குறிப்பிட்ட காந்தி கடிதத்தையே தவறெனக்கூறி
பதவியைத் துறக்கத்துணிந்த துறவி. அறுபது வயதுக்கு
மேல், அரசபதவி கூடதென 'கே திட்டம்' தீட்டி தானும்
முதல்வர் பதவி விலகி முன்னுதாரணமாய் திகழ்ந்தவர்.
வாசன்,
பீஷ்மர் என்று நான் குறிப்பிட்டது ராஜாஜியை தான். காரணம் படிப்பறிவு, ஆளுமை.
"குசேலன்" என்று காமராசரை சொன்னதற்கு காரணம் அவரின் ஏழ்மை.
மற்றப்படி எந்த உள்நோக்கம் இல்லாமல் இந்த வரிகளை எழுதினேன்.
இன்றைய MLA, MP க்கள் அரசு தரும் சம்பளத்தையும் சலுகைகளையும் வாங்கிக்கொண்டு தொகுதிக்கும் போவதில்லை, சட்டசபைக்கும் போவதில்லை. விஜயகாந்த், ஜெயலலிதா தின்னும் சோறில் ஒரு பருக்கையாவது நம் காசு. இனிமேலாவது நமக்காக குரல் கொடுக்க சட்டசபைக்கு போவார்களா?
நம்மின் உயர்வு, தாழ்வு எழுத்துக்களுக்கு
அப்பாற்பட்டவர் அவர்.
ஆந்திரா வங்கியில் கட்டுக்கட்டாய் பணம்
காமராஜ் கணக்கில் என்று சொன்னவர்களின்
கணக்கை காலம் கணித்துக் கொண்டிருக்கிறது.
உள்ளதைச் சொல்பவன் பதிவில்,
உவமை தவறி விட்டதே என்ற,
உலைச்சலில் தான் பின்னோட்டமிட்டேன்.
வேறு கண்ணோட்டமில்லை, குகன்.
nice kavithai
read my kavithai in my blog too
nalla kavithai sir....
Post a Comment