ம.காமுத்திரை
விலை.150. பக்.272
2010க்கான சுஜாதா நினைவு போட்டியில் சிறந்த நாவலாக பரிசு பெற்றது.
அதிகார வர்கத்தால் ஒடுக்கப்படும் தொழிலாளிகளில் கதை. நாலாப்புறம் சிதறி கிடக்கும் மில் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்கான சங்கம் தொடங்க முடிவு எடுக்க, முதலாளி வர்கத்தினர் முறியடிக்கிறார்கள். ஒவ்வொரு சமயமும் சங்கம் தொடங்க நினைக்கும் போதும் தொழிலாளிகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறது.
இரண்டு மணி நேரம் வேலை செய்த பிறகு மேஸ்திரி, மாஸ்டர், சுப்பர்வைசர் என்று ஒவ்வொருத்தரிடம் பேசி லிவ் கேட்டு ஒரு தொழிலாளி வெளியே வரும் போது வாட்ச்மென் தடுகிறான். லிப் போட்டதிற்கு மேஸ்திரியிடம் பேப்பரில் கையெழுத்து வாங்கி வர அனுப்புகிற இடம் நம்மை நெகிழ வைக்கிறது. 'சாமி வரம் கொடுத்தாலும் புசாரி வரம் தருனுமே !' என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது.
தன் ஊர் மில் தொழிலாளிகளுக்காக நியாயம் கேட்க நாட்டாமையும், பட்டாளத்தாரும் மில் நிர்வாகத்திடம் கேட்கும் இடம் அந்த கதாபாத்திரத்தின் அப்பாவி தனத்தை காட்டுகிறது. எப்படி அரசாங்கத்தால் முதலாளிகளை எதிர்த்து தொழிலாளிகளுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறார்களோ, அதே போல் நாட்டாமையும், பட்டாளத்தாரும் எதுவும் செய்ய முடியாமல் திரும்புகின்றனர். இவர்களின் கதாபாத்திர வடிவில் இன்றைய சமூக போராளிகளை நினைவுப்படுகிறார்.
ட்ரெயினிங் என்ற பெயரில் புது ஆட்களிடம் இலவசமாக வேலை வாங்குவது மில்லில் மட்டுமல்ல இன்று பல தனியார் நிறுவங்களில் நடந்து கொண்டு தான் வருகிறது. மேலான்மை என்று சொல்லி தொழிலாளிகளின் உழைப்பு நாலாப்பக்கமாக சுரண்டப்படுகிறது என்பதை நாசுக்காக சொல்லியிருக்கிறார்.
வட்டார சொல்களில் பயன்படுத்தி முதலாளிகளின் ஆளும் மனப்பான்மையை தொழிலாளிகளின் வசனத்தில் தெரிகிறது. மில் ஊருக்கு வந்தால் பலருக்கு வேலை கிடைக்கும் எதிர்பார்த்த மக்களின் உழைப்பு சுரண்டப்பட்ட பிறகு வெளியூர்க்காரர்கள் வேலை செய்யும் கட்டத்தை படிக்கும் போது, இன்றைய ஐ.டி நிறுவனங்களை மறைமுகமாக காட்டுகிறது.
தொழிலாளிகள் சேராமல் இருப்பது தான் முதலாளிகளின் பலம் என்பதை இந்த நாவல் உணர்த்திகிறது.
கதை களம் வேறாக இருந்தாலும், நடக்கும் கூத்து ஒன்று தான். ஐ.டி என்ற பன்நாட்டு நிறுவனமாகட்டும், நம் உள்ளூர் மில்லாகட்டும் !
***
புத்தகம் வாங்க விரும்பும் நண்பர்கள் கீழ் காணும் முறையில் வாங்கலாம்.
1. பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai
வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in / nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Subject யில் 'Book Order' போட்டு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பினால், அடுத்த இரண்டு நாளில் புத்தகங்கள் வந்து சேரும்.
2. M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,
Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.
10% கழிவு வேண்டும் என்று விரும்புபவர்கள், நாகரத்னா புத்தகத்தை ஏதாவது ஒன்றை சேர்த்து ஆர்டர் செய்யவும்.
உதாரணத்திற்கு , மில் (விலை.150) + லெமன் ட்ரீ / டைரி குறிப்பு(விலை.50) = 200 * 10% = 180.
தபால் செலவு கிடையாது. புத்தகத்தின் விலை அனுப்பினால் போதும் !!
3. இணையத்தில் வாங்க....
1 comment:
நல்ல விமர்சனம், டிஸ்கவரியில் வாங்கிக் கொள்கிறேன்..
Post a Comment