வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, July 16, 2010

ஜனவரி முதல் ஜூன் வரை

ஒவ்வொரு ஆறு மாத முடிவில் என் வாசிப்பு சுய மதிப்பீடு (கிட்ட தட்ட Self-Review) செய்து பார்ப்பேன். எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறேன், வாசிப்பு அனுபவம் உயர்ந்திருக்கிறதா, நல்ல புத்தகங்கள், மொக்கை புத்தகங்கள், படிக்க நினைத்த புத்தகங்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று பட்டியல் போடுவேன்.

அந்த வகையில் கடந்த ஆறு மாதம் படித்த புத்தகங்கள் ( ஜனவரி - ஜூன்,2010)

கிழக்கு

1.ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்த சாரதி
2.மாவோயிஸ்ட் - பா.ராகவன்
3.தி.மு.க உருவானது ஏன் ? - மலர்கண்ணன்
4.ஒஷோ : ஒரு வாழ்க்கை - பாலு சத்யா
5.சீனா விலகும் திரை - பல்லவி அய்யர்
6.ராஜிவ் காந்தி கொலை வழக்கு : டி.ஆர். கார்த்திகேயன்

7. சுட்டாச்சு சுட்டாச்சு - சுதாங்கன்
8.பிராடிஜியின் 24 புத்தகங்கள்

உயிர்மை

9.நகுலம் வீட்டில் யாருமில்லை - எஸ்.ராமகிருஷ்ணன்
10.எக்ஸிஸ்டென்ஷியலிசமும், ஃபேன்ஸிபனியனும் - சாரு நிவேதிதா

11.சில்வியா - சுஜாதா

விகடன் பிரசுரம்

12.ஒரு நிமிட கதைகள் - விகடன் பிரசுரம்
13.உலக சினிமா - பாகம் I & II - செழியன்
14.தலாய் லாமா - பா.முருகானந்தம்


15. எட்டாயிரம் தலைமுறை – தலைமகன்
16. முள் - முத்துமீனாள்

17. பேசுகிறார் பிரபாகரன் (வீரம் விளைந்த ஈழம் – 2) - ஜெகத் கஸ்பர்
18. ஆதவன் சிறுகதைகள் - தொகுப்பு ; திலகவதி
19. வண்ணநிலவன் சிறுகதைகள் - தொகுப்பு ; திலகவதி
20. தேவராகம் ( ஃப்ரெஞ்ச் நாவல் ) - ஆன்ட்ரே ஜித்
21. குஜராத்தி ஓரங்க நாடங்கள் - தொகுப்பு : ஏ.எம்.ராவல்
22. பலிபீடம் நோக்கி - கலைஞர் மு.கருணாநிதி
23. ஆயிஷா - இரா.நடராசன்
24. இரும்பு குதிரைகள் - பாலகுமாரன்
25. 100 ஜென் கதைகள் - கண்ணதாசன் பதிப்பகம்
26. ஜாக் வெல்ச் நொ.1 தொழில் மேதை - ரவீந்தர்

27. ஒரு பட்டாம்பூச்சியின் கனவு (கவிதை) - நிலாரசிகன்
28. ஒடிஸி (தமிழில் : சிவன் ) - ஹோமர்
29. நிஜம் நீதி - சுஜாதா
30. மில் - ம.காமுத்திரை
31. அய்யனார் கம்மா – நர்சிம்
32. மீண்டும் ஒரு காதல் கதை (புத்தகம் வெளிவரவில்லை) - சங்கர் நாராயணன்
33. லால்கர் : ஒரு மூன்றாவது பார்வை - அ.மார்க்ஸ், சந்தோஷ் ராணா, குமார் ராணா
34. திரைக்கலை பிறந்த கதை
35. அந்த கணத்தில் ... (கவிதை) – Dr.மோகன் பாலகிருஷ்ணன்
36. லெமன் டீரியும் இரண்டு ஷாட் டக்கீலாவும் - சங்கர் நாராயணன்
37. டைரி குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா

38. Career in Book publishing - Samuel Israel
39. Inscrutable Americans - Anurag Mathur
40. Story of INA – S.A.Ayer



(Bold - காசு கொடுத்து வாங்கிய புத்தகங்கள்)

ஆங்கில புத்தகங்கள் அதிகமாக வாசிக்க வேண்டும். ‘Non Fiction’ல் இருந்து அதிகம் 'சிறுகதை', 'நாவல்' புத்தகங்களில் கவனம் சென்றிருப்பது என்னால் உணர முடிகிறது. புத்தகம் வெளியீடுவது, மார்க்கெட்டிங் மட்டுமில்லாமல் 'பிரோமோஷ்னல் வேலையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ( கேபிள், பரிசல் புத்தகம் தினமலரில் விமர்சனம் வந்ததோடு சரி)

பார்ட் டைம் பதிப்பாளராக இருப்பதால் அதிரடியாக இயங்கமுடியவில்லை. இன்னும் ஆறு மாதத்திற்குள் ஒரு மாற்று ஏற்பாடு செய்தாக வேண்டும். அடுத்த மாதம் இரண்டு நூல் வெளியீட திட்டமிட்டுயிருக்கிறேன். அதன் அடுத்த புத்தகங்களை பற்றி யோஸிக்க வேண்டும்.

இப்போதைக்கு அவ்வளவு தான். இதில் ஒன்றாவது ஒழுங்காக நிறைவேற்றுகிறனே என்பதை டிசம்பரில் பார்ப்போம்.

1 comment:

Cable சங்கர் said...

என்னுடய சினிமா வியாபாரம் படிக்காததை பற்றி கடுமையான கண்டனங்களை முன் வைக்கிறேன்..:) ( அப்பாடி இங்கேயும் நம்ம புக்கை பத்தி சொல்லியாச்சு..)

LinkWithin

Related Posts with Thumbnails