வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, July 15, 2010

தெலுங்கு திரை உலகனின் 'உலக சினிமா'

100% கமர்ஷியல் திரை உலகம் என்ற முத்திரை குத்தப்பட்ட தெலுங்கு படங்களில் சமீபத்திய படமான 'வேதம்' படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. 'ஆரியா' படத்தில் காதலில் ஈர்த்த அல்லு அர்ஜூன், நம்ப அனுஷ்கா மற்று 'கேபிள்' சங்கர் பதிவு போன்ற காரணங்களால் இந்த படத்தை பார்த்து விட வேண்டும் என்று தோன்றியது.

ஐந்து பேர் கதை தொடங்கியதுமே 'மல்டி செக்மன்ட் ஸ்டோரி டெல்லிங்' பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் புரிந்துக் கொள்ள முடிந்தது.

இசை உலகில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்று அம்மா சொன்ன இராணுவ வேலையை நிராகரித்து தன் காதலி, நண்பர்களுடன் ஹைதிரபாத் வருகிறான் மனோஷ் மன்சு. சுயநலவாதியான அவன் ஒரு சர்தாஜி உதவி செய்ததும் பொது நலவாதியாக மாறுகிறான். விபத்தில் மாட்டி தவிக்கும் ஒரு கர்ப்பி பெண்ணுக்கு உதவ தன் வண்டியில் அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்.

கந்து வட்டிக்கு பணம் வாங்கி அசலை கொடுத்த பிறகும், வட்டி கட்டிக் கொண்டு இருக்கும் நாகைய்யாவின் பேரனை கந்து வட்டிக்காரன் தூக்கிச்சென்று விடுகிறார்கள். அவர்களிடம் இருந்த தன் பேரனை மீட்க தன் மருமகளின் கிட்னி விற்க ஹைதிராபாத் வருகிறான். கிட்னி கொடுத்த மருமகள் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.

இந்துக்களால் கருவிலே தன் குழந்தை இழந்து இந்தியாவை விட்டு ஷார்ஜாவுக்கு செல்ல திட்டமிடுகிறான் ரஹிம். முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதி என்று கருதும் போலீஸ்க்காரன், அவன் உறவினர்களின் தீவிரவாதி ஒருவனை கைது செய்யும் போது ரஹிம்மை சேர்த்து செய்கிறான். போலீஸிடம் இருந்து தப்பிக்கும் காலில் குண்டடி பட்டு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறான்.
விபச்சாரம் செய்யும் சரோஜா, தன் திருநங்கை தோழியுடன் விபச்சார விடுதியில் இருந்து தப்பித்து ஹைதிராபாத்துக்கு வருகிறாள். ஆனால், அவளை வைத்து தொழில் செய்த பெண்ணின் ஆட்கள் சரோஜாவை விடாமல் துரத்துகிறார்கள். அவர்களிடம் தப்பிக்கும் போது தன் திருநங்கை தொழிக்கு கத்தி குத்து பட, அவளை அழைத்து கொண்டு அரசாங்க மருத்துவமனைக்கு வருகிறாள் சரோஜா.

யாரை பற்றி கவலைப்படாமல் தன் காதலி தான் உலகம் என்று வாழுகிறாள் கேபிள் ராஜூ. அவளிடம் பணக்காரனாக நடித்து, இரவு விருந்துக்கு பெரிய ஹோட்டலில் இரண்டு பாஸ் வாங்கி வருவதாக சொல்கிறான். ஒரு பாஸ் 20,000 ரூபாய் என்று இருக்க, 40,000 ரூபாய்யை மருமகள் கிட்னியை விற்ற நாகைய்யாவிடம் பணத்தை திருடுகிறான். இறுதியில் மனம் மாறி, அரசாங்க மருத்துவமனையில் நாகைய்யாவிடம் பணத்தை கொடுக்க வருகிறான்.

ஐந்து கதாப்பாத்திரங்கள் எவ்வேறு இடத்தில் தொடங்கி ஒரு இடத்தில் சந்திக்கும் மருத்துவமனையில் தீவிரவாதிகள் நான்கு பேர் முற்றுகை ஈடுகிறார்கள். அவர்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.

ஆங்கில படங்களில் Babel, 21 Grams போன்ற வெற்றி படங்கள் இந்த திரைக்கதை யுக்தியை தான் பயண்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் Babel நான்கு நாடுகளில் நடக்கும் கதை இறுதி காட்சி ஒரே புள்ளியில் வந்து முடியும். ஹாலிவுட்டில் பயன்படுத்திய திரைக்கதை யுக்தியை நம் நாட்டுக்கு ஏற்ற வாறு திரைக்கதை அமைத்திருப்பது எவ்வளவு பாராட்டினாலும் தகும்.தமிழ் படத்தில் கூட இரண்டு கதாநாயகர்கள் சேர்ந்து நடிப்பதை பார்த்து விடலாம். தெலுங்கு படங்களில் மிகவும் அபூர்வம். அப்படியே இரண்டு நாயகர்கள் என்றால் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நடிகள் தான் நடிப்பார்கள். அல்லு அர்ஜூன், மனோஜ் மன்சு போன்ற நடிகர்கள் இணைந்து நடிப்பது மிக விஷயம். வில்லனை விரல் நீட்டி மிரட்டுபவர்கள். நூறு பேர் வந்தாலும் அடித்து உதைக்க கூடிய கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்கள். 'கேபிள் ராஜூவாக அல்லு அர்ஜூனும், விவேக் சக்கரவர்த்தியாக மனோஜ் மன்ச்சுவும் வாழ்ந்திருப்பது ‘மாசாலா’ படம் பார்த்தவருக்கு சாபவிமோச்சனம் கிடைத்தது போல் இருந்தது. ஒரு தீவிரவாதியிடம் இருந்து பல ஆயிரம் பேர் காப்பாற்ற இரண்டு நாயகர்கள் போராடுவதும், அதற்கான முடிவை தேர்ந்தெடுப்பதும் தெலுங்கு படங்களில் வராத முடிவு. ( இரண்டு 'மாஸ்' ஹீரோக்கள் சாதன குடிமகனாக நடித்திருப்பது என்னால் இன்னும் நம்பமுயவில்லை. )

கண்ணில் அதிக மைய்யும், லோ ஹிம் புடவையும், பின் முதுகு தெரியும் படியான ஜாக்கெட்டும் என்று அசல் விபச்சாரியாகவே வருகிறார் அனுஷ்கா. தன் திருநங்கைக்காக டாக்டரிடம் கெஞ்சும் போது, " உங்க கூட எத்தன வாட்டி வேணும்னாலும் படுகிறேன். அவள காப்பாத்துங்க !" என்று கெஞ்சும் போது கதாப்பாத்திரம் மீறி அவள் மேல் பரிதாபப்பட வைக்கிறது.

வசனங்கள் ஒவ்வொன்றும் ரொம்ப ஷார்ப். குறிப்பாக ஒரு இடத்தில் கூட பன்ச் டைலாக் இல்லை.

கிட்னி விற்க செல்லும் தன் மருமகளிடம் நாகைய்யா, " ஏழைகளுக்கு இருக்குற பெரிய சொத்தே அவங்க உடம்பு தான்" என்று சொல்லும் இடமாகட்டும்,

போலீஸ் ஸ்டேஷனில் அனுஷ்கா, " நாங்க உடம்பில இருக்குற துணிய அவுத்து போட்டு சம்பாதிக்கிறோம், நீங்கள் துணியப்போட்டு சம்பாதிக்கிறீங்க" என்ற இடமாகட்டும்,

ஷார்ஜா செல்லும் ரஹிம்மிடம் அவர் தந்தை, " நிறைய முஸ்லீம் இருக்குற இடத்துல இந்து பயப்படுறதும், நிறைய இந்துக்கள் இருக்குற இடத்துக முஸ்லீம் பயப்படுறதும் சகரஜம். மாப் சைக்காலஜி" என்று சொல்லும் இடம் மிக அருமை.

அதுவும் இறுதி காட்சியில், அல்லு அர்ஜூன் மனோஜிடம் " உங்க பெயர் என்ன பாஸ் ?" என்று கேட்கும் இடம் கண்ணில் நீர் வராத குறை.

'வேதம்' தமிழில் 'வானம்' என்ற பெயரில் வெளிவரயிருக்கிறது. அல்லு அர்ஜூன் நடித்த ட்ரேக்கில் சிம்பு நடிக்கவிருக்கிறார். 'விண்ணைதாண்டி வருவாயா' படத்திற்கு முன் 'வானம்' பட அறிவிப்பு வந்திருந்தால் நான் அதிர்ந்து போய்யிருப்பேன். முந்த படத்தில் கொடுத்த நம்பிக்கை, சிம்பு சோதப்பாமல் செய்வார் என்று நம்பலாம். மற்ற நான்கு ட்ரேக்குக்கும் டப்பிங் செய்வார்கள் என்றே தோன்றுகிறது.

படத்தின் இசை, கெமிராமென், டைரக்டர்... அதை பற்றி எல்லாம் நமக்கு தெரியாது. நான் என்ன 'கேபிள்' சங்கரா.... படத்தை பார்த்து ரசித்த ஒரு சாதான ரசிகனின் விமர்சனம் இது.

3 comments:

rk guru said...

மஞ்சள், சிவப்பு, ரோசே கலரே போதும் படத்த முடுட்சிட்டலாம்...

cp senthilkumar said...

டைட்டிலா சிம்புவின் அடுத்த படக்கதை என கொடுத்திருந்தால் இன்னும் நல்ல ரீச் இருந்திருக்கும்.anyway good விமர்சனம்.வாழ்த்துக்கள்

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

LinkWithin

Related Posts with Thumbnails