இன்று ( 5.7.10) பெட்ரோல் உயர்வை நாடு தழுவிய பந்த் நடப்பதாக எதிர்கட்சியினர் அறிவித்திருந்தனர். ஆனால், சென்னையில் வழக்கம் போல் எல்லா வண்டிகள் செயல்ப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. எப்போதும் போல் கேட்கும் (அ)நியாய விலைக்கு மேலும் 20 ரூபாய் கேட்கிறார்கள். ஸ்ட்ரைக் சமயத்தில் ஆட்டோ ஓட்டுறது எவ்வளவு பெரிய ரிஸ்க். அதுக்கு தான் ரூ.20 யாம் !!!
**
மனம் கொத்தி பறவை
இலக்கிய எழுத்தாளர்களுக்கு ஜனரக பத்திரிகைகள் வாய்ப்பு தருவதில்லை என்று புலம்பிய சாரு நிவேதிதா, இப்போது ஆனந்த விகடனில் 'மனம் கொத்தி பறவை' என்ற தலைப்பில் புதிய தொடர் எழுதுகிறார். நீத்து சந்திரா, அமீர் போன்ற நடிகர்களுடன் 40 நோடிகள் நடனமாடிய அனுபவத்தை எழுதியிருக்கிறார். நடிகனான எழுத வாய்ப்பு கிடைக்குமோ ?
**
நிஜம் நீதி
சுஜாதா
மிருகங்களை வைத்து நீதி கதைகளை 'நக்கீரனில்' சுஜாதா தொடராக எழுதினார். பின்பு, மேலும் பல கதைகள் சேர்த்து ' நீதி கதைகள்' என்ற பெயரில் புத்தகமாக உயிர்மை வெளியீட்டுள்ளது. 1998 ஆண்டிலேயே 'நிஜம் நீதி' என்ற தலைப்பில் பாரதி பதிப்பகம் சுஜாதாவின் நீதிகளை வெளிவந்துள்ளன. மேற் சொன்ன இரண்டு புத்தகங்களை படித்தால், இந்த நூலை படிக்கும் போது உயிர்மை வெளியிட்ட தொகுப்பில் இடம் பெற்ற கதைகள் தெரிந்தது. இருந்தாலும், மறுமுறை வாசிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. முழுமையாக வாசித்த பிறகே புத்தகத்தை முடினேன். எழுதியவர் சுஜாதாவாயிற்றே !
**
நாகரத்னா பதிப்பக சார்பில் வெளியீட இருக்கும் 'கவிதை உலகம்' தொகுப்புக்கு எதிர்பார்த்ததை விட கவிதை வந்து கூவிந்துள்ளன. ஒரு வாரத்தில் பதிவர்களிடம் மட்டும் 50 கவிதைகள் வந்துள்ளது. தலைப்பு எதுவும் கொடுக்காததால் பெரும்பாலான கவிதைகள் 'காதல்' சம்மந்தமான கவிதைகள் அனுப்பியிருந்தார்கள்.
இலக்கிய வட்டத்தில் இருந்து மேலும் 50 கவிதைகள் வந்துள்ளது. ஒவ்வொரு கவிதைகளை தேர்வு செய்தவற்கே ஒரு வாரம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். தேர்ந்தெடுத்த கவிதைகள் அடுத்த வாரம் பதிவில் அறிவிக்கப்படும்.
கவிதை அனுப்பியவர்களுக்கு நன்றிகள் பல..!!
No comments:
Post a Comment