வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, July 6, 2010

ஓரின சேர்க்கை - சாதகமான வாதங்கள்

ஜூ 27,2010.

சென்னை கடற்கரையில் ஓரின சேர்கையாளர்கள், திருநங்கைகள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தினர். பலர் தன் உரிமைக்காக கோஷங்கள் எழுப்பினர். வானவில் கொடிகளை கையிலேந்தி நடந்தனர். அந்த பேரணியில் வயதானவர்களை பார்த்ததும் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி. பரப்பரப்பான தகவல்களை சேகரிக்க அவர்களிடம் நெருங்கிய போது தான் தெரிந்தது அவர்கள் ஓரின சேர்க்கையாளரின் பெற்றோர்கள் என்று !

அந்த போராடத்தில் பங்கு பெற்ற ஒரு அம்மா, " என் பையன் 'கே'னு போன மாசம் தான் தெரியும். எனக்கும், என் கணவனுக்கும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. கொஞ்ச நாள்ல எங்கள நாங்களே சமாதானம் பண்ணிகிட்டோம். அவன் 'கே' நால என் மகன் இல்லனு சொல்ல முடியுமா !" என்றார். மேலும், " என் மகன் சமூக விரோதியில்ல. சமூக பார்வையில வித்தியாசமான பாலுணர்வு உள்ளவன். அவன் உணர்வ நாங்க புரிஞ்சிகிட்ட மாதிரி அவன் மாதிரி இருக்குறவங்களோட பெற்றோரும் புரிஞ்சிக்கனும். என் பையன போல இருக்குறவங்களுக்கு ஆதரவுக்காக எங்க பங்க்கு போராடுறோம்" என்று பெருமையாக கூறினார்.
ஒரு லெஸ்பியன் பெண், " நான் பாலுணர்வால் வித்தியாசமானவள். ஒருவனுடைய திருமதியானவள் என்பதை விட நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு பெண்கள் மீது வரும் ஈர்ப்பு கூட ஆண்கள் மீது வரவில்லை" என்றாள். " பதினெட்டு வயதானவர்கள் தங்கள் துணையை அவர்களே தேர்ந்தெடுக்கலாம் என்று சட்டமே சொல்லும் போது, அவர் ஆணாக இருந்தால் என்ன ? பெண்ணாக இருந்தால் என்ன ?. எதிர்பாலினரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி இந்த சமூதாயம் கட்டுப்படுத்தலாம் ?" என்று குரல் உயர்த்தியே பேசி இருக்கிறார்.

ஓரின சேர்க்கையை ஆதரிக்க தொடங்கிவிட்டால் பல குடும்பங்களின் அடுத்த தலைமுறை இல்லாமல் போகும் என்று கேட்டதற்கு, ஒரு லெஸ்பியன் பெண் " உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாங்கள் இந்தியாவை முதல் இடத்தை அடைய உதவுவதற்கு விருப்பமில்லை. மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஓரின சேர்கை உதவி தான் செய்கிறது." இந்த பெண் ஒரு ஆஸ்ரமத்தில் இருந்து குழந்தையை தத்தெடுத்து வளர்கிறார். தன் வாரிசாக அந்த குழந்தையின் மீது பாசம் காட்டுகிறார். 'அனாதை' என்ற வார்த்தை ஓரினசேர்க்கையாளர், திருநங்கையர் போன்றவர்களால் குறைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவர் பேச்சில் இருந்தது.

**


காதலை கொண்டாடும் படங்களில் இந்த வசனம் இல்லாமல் இருப்பதில்லை.

" லவ் அது ஒரு பிலிங்"
" உலகத்துல காதலிக்காதவங்க யாருமில்ல "
" காதல மறந்திட்டு யாரும் நிம்மதியா வாழ முடியாது"
“ஒருவர் மீது அன்பு, அறவனிப்பு, காதல், பாசம் காட்ட மனசு இருந்தால் போதும். பண காசு தேவையில்லை”

ஆக, காதலிக்க இரண்டு மனது, இரண்டு உயிர் தேவைப்படுகிறது. காதலிக்கும் இரண்டு மனது ஆணும், பெணும் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த இரண்டு மனதும் ஆண்களுடையதாகவோ, பெண்களுடையதாகவோ இருப்பதால் தான் பிரச்சனையே !

இன்று ‘Living together’ கலாச்சாரம் அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. திருமணமாகல் ஒரே வீட்டில் ஆண், பெண் தங்குகிறார்கள். எந்த நிபந்தனையில்லாமல் ஒன்றாக வாழ்வதால் இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. நாளைக்கே பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டால், பிரிவதற்கு குழந்தை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதில் ‘Living together’ ஜோடிகள் நினைக்கிறார்கள். ‘Living together’ பற்றி விமர்சிக்காதவர்கள், ஏன் ஓரின சேர்கை திருமணத்தை எதிர்க்க வேண்டும் ? என்று நினைக்க தான் தோன்றுகிறது.

நிலா ரசிகனின் 'யாரோ ஒருத்தியின் டைரி குறிப்பு' புத்தகத்தில் 'லெஸ்பியன்' பற்றி எழுதிய சிறுகதைக்கு ஒரு வாசகி மின்னஞ்சல் எழுதியதை தனது தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வாசகி, சிறு வயதில் ஒரு ஆண்ணால் பாலியல் தொல்லை அனுபவித்திருக்கிறாள். வளர்ந்த பிறகு அவளுக்கு ஆண்கள் மீதே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தன் தோழியுடன் தான் வாழ்ந்துவருதையும் குறிப்பிடிருந்தார். இந்த வாசகி போல் பல சிறுதிமகள் பாலியல் தொல்லைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆண்களை வெறுக்க காரணமானவனை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லாத போது அந்த பெண்ணின் உணர்வுக்களுக்கு பூட்டு போடுவது எந்த வகையில் நியாயம்.

பலர் ஓரின சேர்க்கையாளர்களை மனநோயாளிகள் என்று கூறுகிறார்கள். இதுவரை ஓரின சேர்க்கை பற்றி படித்த புத்தகங்கள், நண்பர்கள் மூலம் சேகரித்த தகவலில் நான் புரிந்து கொண்டது அவர்கள் மன நோயாளிகள் அல்ல. மனநோயாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று ஒன்று சேர வெருக்கும் போது அவர்கள் மனம் பாதிக்கப்படுகிறது. ஒரு சில பெற்றோர்கள் அடித்து, மிரட்டி திருமணம் செய்து வைக்கிறார்கள். சுற்றத்தின் உதாசின பார்வையும், மிரட்டலும் தங்கள் உணர்வை மறைக்க முடியாமல் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் உணர்வுகளை கொன்று வாழ்கிறார்கள். தன்னம்பிக்கை, தைரியம் உள்ளவர்கள் தங்கள் பாலுணர்வை வெளிப்படுத்தி துணிச்சலாக வாழ்க்கிறார்கள்.

ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் யாரும் பணமோ பொருளோ எதிர்பார்க்கவில்லை. 'இவர்களும் மனிதர்கள் தான்' என்ற அங்கிகாரத்தை தான் எதிர்பார்க்கிறார்கள்.

திருமணமான ஆண் - பெண் இருவரையும் குடும்பமாக பார்க்கும் சமூகம், ஆண் - ஆண் , பெண் - பெண் என்று ஒன்றாக வாழ்பவர்கள் குடும்பமாக பார்க்க வேண்டும் என்பது தான் இவர்களின் போராட்டம்.

****

அடுத்த பதிவில் ஓரின சேர்க்கை பற்றி எதிரான வாதங்ககளை பார்ப்போம்.

8 comments:

vinodh said...

//ஒரு லெஸ்பியன் பெண், " நான் பாலுணர்வால் வித்தியாசமானவள். ஒருவனுடைய திருமதியானவள் என்பதை விட நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு பெண்கள் மீது வரும் ஈர்ப்பு கூட ஆண்கள் மீது வரவில்லை" என்றாள். " பதினெட்டு வயதானவர்கள் தங்கள் துணையை அவர்களே தேர்ந்தெடுக்கலாம் என்று சட்டமே சொல்லும் போது, அவர் ஆணாக இருந்தால் என்ன ? பெண்ணாக இருந்தால் என்ன ?. எதிர்பாலினரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி இந்த சமூதாயம் கட்டுப்படுத்தலாம் ?" என்று குரல் உயர்த்தியே பேசி இருக்கிறார்.//

எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. சரியா தவறா என்று தெரியவில்லை.

ஒரு ஆணுக்கு/பெண்ணுக்கு இன்னொரு ஆணின்/பெண்ணின் மீது ஈர்ப்பு வருகிறது என்பதற்கு உயிரியல் காரணங்கள் உள்ளன.

1.
ஆனால், அந்த பெண்/ஆண் தன்னை பெண்ணாகவே/ஆணாகவே கருதிக் கொண்டே பெண்ணின்/ஆணின் மீது ஈர்ப்பு கொள்கிறார்கள் என்பதற்கும்.

2.
ஒரு ஆண் அல்லது பெண் தன்னை எதிர்பாலின்மாகவே உணர்ந்து கொண்டு அதன் ஊடாக தனது பாலினத்தைச் சேர்ந்தவர் மீது ஈர்ப்பு கொள்கிறார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

இதில் பாயிண்ட் 1. அறிவியல் பூர்வமாக உண்மையா? பொய்யா?

ஆண்டாள்மகன் said...

இதைப்பற்றி இன்னும் நிறைய இந்த போலி சமூகத்திற்கு எடுத்துரைக்க வேண்டுகிறேன்

Bibleunmaikal said...

what bible says:

BIBLE லேவியராகமம் 20 அதிகாரம்

13. ஒருவன் பெண்ணோடே சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் (ஓரிணப்புணர்ச்சி) பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக் கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.Lev 20:13
If a man lies with a male as with a woman, both of them have committed an abomination; they shall be put to death; their blood is upon them.

click to read
பைபிளில் உள்ளவை

Bibleunmaikal said...

what bible says:


Lev 20:13
If a man lies with a male as with a woman, both of them have committed an abomination; they shall be put to death; their blood is upon them.

லேவியராகமம் 20 அதிகாரம்

13. ஒருவன் பெண்ணோடே சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் (ஓரிணப்புணர்ச்சி) பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக் கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

click and read
பைபிளில் உள்ளவை.

ராம்ஜி_யாஹூ said...

உங்கள் தலைப்பை பார்த்து நானும் நிறைய சாதகங்கள் பற்றி எழுத போகிறீர்கள் என்று படிக்க வந்தேன். பார்த்தால் இரண்டே சாதகங்கள் எழுதி உள்ளீர்கள்.

மக்கள் தொகையை/குழந்தை பெறுவதை கட்டு படுத்துவது.

அனாதை குழந்தைகளை வளர்ப்பது.

இவை இரண்டையும், ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கூட கடை பிடிக்க முடிமே. உண்மையிலேயே கணவன் மனைவி இருவரும் அந்த அளவு நாட்டுப் பற்று கொண்டவர்கள், மக்கள் தொகையை கட்டு படுத்த வேண்டும் என்று நினைத்தால், திருமணம் ஆகியும் குழந்தை உருவாக்காமல் இருக்கலாம். ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டே அனாதை குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாம்.

உண்மையிலேயே ஓரின உருவால் ஏற்படும் ஒரே சாதகம் பொருளாதார நன்மையே . காம சுகத்திற்காக பணம் , நேரம் அதிகம் செலவு செய்ய வேண்டாம் ஓரின சேர்க்கையில்.

Robin said...

அடுத்து பிக் பாகெட் திருடர்களின் போராட்டமா?

rk guru said...

///" உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாங்கள் இந்தியாவை முதல் இடத்தை அடைய உதவுவதற்கு விருப்பமில்லை. மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஓரின சேர்கை உதவி தான் செய்கிறது." இந்த பெண் ஒரு ஆஸ்ரமத்தில் இருந்து குழந்தையை தத்தெடுத்து வளர்கிறார். தன் வாரிசாக அந்த குழந்தையின் மீது பாசம் காட்டுகிறார்.////

இது ஏற்றுக்கொள்ளகுடிய வாதம். வாழ்க இம்மக்கள் ஆனால் எனக்கு இன்னும் நெருடலாதான் இருக்கிறது முரண்பட்ட உறவு அதில் ஒரு சந்தோசம் காண்கிறார்கள். இதன் விளைவு காலத்தால் நிர்ணயக்கபடும்.

tkumar said...

நான் இங்குள்ள ஓரினச்சேர்க்கைக்கு சாதகமான மற்றும் எதிர் வாதங்களைப் படித்தேன். இந்த சர்ச்சைக்கு முடிவே கிடையாது என்பது தான் உண்மை. இதில் சிலர் ஏதோ இந்த ஓரினச்சேர்க்கை என்பது வெலிநாட்டில் மிகவும் சாதரணமாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று என்று நினைப்பதாகத் தெரிகிறது. அது முற்றிலும் தவறு; நான் அமெரிக்காவில் 30 ஆண்டுகளாக வசிப்பவன் என்ற முறையில் சொல்லுகிறேன். நம் நாட்டைவிட இங்கு ஓரினச்சேர்க்கை என்பது பரவலாக இருந்தாலும், அதை எதிர்க்கும்
"ஸ்டிக்மா" இருக்கவே செய்கிறது; பல தென் மானிலங்களில் ஆண் ஓரினச்சேக்கை குறித்து பல வன்முறைகள் , கொலைகள் நடந்துள்ளன. லெஸ்பியன்கள் பலர் இருந்தாலும், சில காரணங்களால், அவர்களுக்கு எதிரான வன்முறை அதிகம் இல்லை; அப்படி இருந்தாலும் வெளியே தெரிவது இல்லை. பெரிய வித்தியாசம் என்னவென்றால், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களுக்கு சாதகமாக பல விதிகள், சட்டங்கள் இங்கு இருப்பதே. அமெரிக்காவைவிட ஐரோப்பாவில் சாதரணமாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று. ஆனால்எந்த சமூகமும் அவர்களை 100 % ஏற்றுக் கொள்ளவில்லை..

ஓரினச்சேர்க்கைக்கு சாதகமாக பலர் பேசுவதாலோ சட்டங்கள் இருப்பதாலோ அதில் ஈடுபடுபவர்கள் அதிகரிப்பார்கள் என்று நான் நினைகக்வில்லை. பல தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, ஓரினச் சேர்க்கை ஈடுபாடு என்பது சில மரபு அணுக்களால் இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளார்கள். முழு விபரத்துக்கு இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்.

http://www.scienceagogo.com/news/20050028000623data_trunc_sys.shtml

ஆக, மனித உருவத்தில், பழக்கவழக்கங்களில் இருக்கும் வேறுபாடுகள் போல இதுவும் ஒரு வேறுபாடு என்று இருக்கையில், அவர்களை மிருகங்கள் என்று குறை கூறுபவர்கள்தான் ஆறாவது அறிவு இல்லாதவர்கள் என்று கூறலாம்!. ஓரினச்சேர்க்கையை ஆதரிக்காவிட்டாலும், அவர்களையும் நம்மைப் போன்ற, ஆனால் வேறுபட்ட உணர்வுகள் உடையவர்கள் என்று மடித்து, அவ்ர்கள் மற்றவர்களுகு எந்தவித இடையூறும் தராத போதாவது அவர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதே மனிதாபிமானம் மிக்க செயல்.!

LinkWithin

Related Posts with Thumbnails