Wednesday, March 4, 2009

உலக சினிமா : Spring, Summer, Fall, Winter... and Spring

நீண்ட நாட்களாக ‘கேபிள்’ சங்கர் அண்ணனிடம் "உலக சினிமாவை பற்றி எழுதுங்கள், மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள்" என்று சொல்லியிருக்கிறேன். இப்போது தனது "STAR MAKER", "No Country For Old Men" பதிவு மூலம் நமக்கு உலக சினிமாவை அறிமுக செய்துள்ளார். அவரை சொல்லி விட்டு நான் சும்மா இருந்தால் எப்படி....? இதோ நான் பார்த்த உலக சினிமா... "Spring, Summer, Fall, Winter... and Spring" (2003.

நல்ல திரைப்படங்களுக்கு மொழி முக்கியமில்லை என்று எனக்கு உணர்த்திய கொரியன் மொழி படம்.

பொழுது போகவில்லை என்று நண்பன் வீட்டுக்கு சென்ற போது அவன் கம்ப்யூட்டரில் ஆர்வமாக இந்த படத்தை பார்த்துக் கொண்டு இருந்தான். மொழி தெரியாத படத்தை பார்த்ததை கேலி செய்துக் கொண்டு இருந்தேன். ஆனால், படத்தை பார்க்க பார்க்க என்னையே தொலைப்பது போல் உணர்வு ஏற்ப்படுத்தியது. படத்தில் வசனம் என்று பார்த்தால் இரண்டு பக்கம் தான் இருக்கும். மற்றப்படி காட்சி கதாப்பாத்திரத்தின் உணரவுகளை அழகாக புரிய வைத்திருக்கிறார்.

ஒரு புத்த பிச்சு வாழ்க்கையில் சிறு வயதில் இருந்து பெரியவனாகும் வரை காட்டுவது இந்த படத்தின் கதை. ஐந்து பிரிவுகளாக பிரிந்து கதை நகர்கிறது.



Spring

கொரியாவில் இருக்கும் ஒரு காட்டில் தனது குருவுடன் எட்டு வயது சிறுவனாக (கதாநாயன்) வளர்கிறான். குளத்தின் நடுவில் வீடு, படகு, மலை என்று தங்களுக்கு கிடைத்தில் நிம்மதியாக குரு வாழ்க்கிறார். தனக்கு தெரிந்ததை சிஷ்யனான சிறுவனுக்கு சொல்லிக் கொடுக்கிறார். ஒரு நாள் மலை அருகில் இருக்கும் அருவிக்கு செல்லும் சிறுவன் அதில் நிந்தும் மீனை ஒரு கல்லில் கட்டுகிறான். அதே போல், தவளை காலிலும், பாம்பில் கலுத்திலும் ஒரு கல்லை கட்டுகிறான். இதை அவன் குரு அமைதியாக கவனிக்கிறார். அந்த சிறுவன் தூங்கும் போது அவன் இடுப்பில் ஒரு கல்லை குரு கட்டுகிறார்.

காலையில் கண் விழித்த சிறுவன், தன் இடுப்பில் கல் கட்டியிருப்பதை கவனிக்கிறான். அவன் துன்புருத்திய ஜீவன்களை காப்பாற்றாமல் அந்த கல்லை எடுக்க கூடாது என்று கட்டளை இடுகிறார். கல்லை சுமந்த சிறுவன் அருவில் மீன் நிந்த முடியாமல் இறப்பதை பார்க்கிறான். தவளை உயிருடன் இருந்தாலும் அதை எங்கு விட்டான் என்பதை அவனால் அறிந்துக் கொள்ள முடியவில்லை. பாம்பு வேறு மிருகத்தால் இறந்து விடுகிறது. இதை பார்த்த அந்த சிறுவன் அழுகிறான்.

Summer (கோடைக் காலம்)

சில வருடங்கள் கலிந்தன. இப்போது அந்த சிறுவன் வாலிப பருவத்தில் இருக்கிறான். ஒரு நாள் அந்த மடத்திற்கு வயதான பெண்ணும், வாலிப வயத்தில் இன்னொரு பெண்ணும் வருகிறார்கள். தன் மகளை வயதான புத்து பிச்சு பாதுகாப்பில் விட்டு விட்டு அந்த பெண்மணி செல்கிறாள். அந்த பெண்ணை பார்த்ததும் இளம் புத்து பிச்சு காதல் கொள்கிறான். இருவரும் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். தன் சிஷ்யனை ஒரு பெண்ணுடன் பார்த்த குரு அவனிடம் " ஆசை பற்றை ஏற்ப்படுத்தும். பற்று கொலையை கூட செய்ய வைக்கும்" என்று சொல்கிறார். அன்று இரவு, அந்த ஆஸ்ரமத்தில் இருக்கும் புத்த சிலை எடுத்துக் கொண்டு தன் காதலியுடன் காட்டை விட்டு செல்கிறான்.

Fall ( இலையுதிர் காலம்)

பல வருடங்கள் கலித்து அந்த வலிபன் தன் மனைவியை கொன்று, பதுங்க காட்டுக்கு வருகிறான். தன் முகத்தில் இருக்கும் அமைதி மறைந்து குரோதம், வெறியுடன் திரும்புகிறான். தன் கையில் இருக்கும் புத்த சிலையை குருவிடம் கொடுத்து விட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்கிறான். குரு அவனை அடித்து தற்கொலையை தடுகிறார். மனைவியை கொன்றவன் அவ்வளவு எளிதில் இறக்க கூடாது என்று கூறி, அவனிடம் பூனை வாலை வைத்து கறுப்பு சாயத்தில் எழுதிய மந்திரத்தை கத்தியால் எடுக்க சொல்கிறார். அவனும் எடுக்கிறான். அவனை கைது செய்ய இரண்டு காவலர்களும் அவன் முடிக்கும் வைரை காத்திருக்கிறார்கள். அவன் முடித்தவுடன், காவலாளிகள் அந்த வாலிபனை கது செய்து அழைத்து செல்கிறார்கள். தன் சிஷயன் சென்றவுடன் அவனுக்காக தனது ஆடை விட்டு விட்டு, அந்த குரு தற்கொலை செய்துக் கொள்கிறார்.

Winter (பணி காலம்)

பணியால் அருவி, வீடு எல்லாம் உரைந்து போய் இருக்கின்றன. அந்த வாலிபன் இப்போது நடுத்தற வயதில் அங்கு வருகிறான். தன் குருவின் உடையை அணிந்துக் கொண்டு புத்தரை வழிப்படுகிறான். அப்போது ஒரு பெண் அவனிடன் தன் மகனை கொடுத்து விட்டு பணியில் உரைந்து இறந்து விடுகிறாள். இதை பார்த்த அவன், தன் உடம்பில் கல்லை கட்டிக் கொண்டு, கையில் புத்த சிலை ஏந்தி மலையில் உச்சியில் வைக்கிறான்.

Spring

தன்னிடம் வந்து சிறு குழந்தை எட்டு வயது சிறுவனாக வளர்ந்து இருக்கிறான். தனக்கு தெரிந்த கலையை எல்லாம் அவன் அந்த சிறுவனுக்கு கற்றுக் கொடுக்கிறான். அந்த சிறுவன் அருவிக்கு சென்று மீன் வாயில் கல்லை வைக்கிறான். அதே போல், பாம்பு, தவளை, ஆமை என்று ஒவ்வொரு மிருகத்தின் வாயில் கல்லை வைத்து சந்தோஷமாக சிரிக்கிறான். இதை எல்லாம் மலையின் உச்சியில் இருக்கும் புத்த சிலை பார்ப்பது போல் படம் முடிகிறது.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரே இடம் எப்படி மாறுகிறது என்று தத்துருபமாக காட்டியுள்ளனர். இயற்கை அழகான மலையின் நடுவில் செட் போட்டு படம் எடுத்துள்ளனர்.

‘ஜி பர்க்’ என்பவர் பின்னர் இசை அமைத்துள்ளார். இறுதி காட்சியில், நாயகன் கல்லால் கட்டப்பட்டு புத்தரை சுமந்து மலையில் ஏறும் போது வரும் பின்னனி இசை மனதை வருடுகிறது. மொழி தெரியாத பாடல் கூட நம் மனதை எதோ செய்கிறது. கிம் டி டக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

6 comments:

வண்ணத்துபூச்சியார் said...

நல்ல முயற்ச்சி.

வாழ்த்துக்கள்.

கிம் கி டக் பற்றிய குறிப்புகளையும் மற்ற உலக சினிமாக்களையும் வாசிக்க அன்போடு அழைக்கிறேன்.

குகன் said...

// வண்ணத்துபூச்சியார் said...
நல்ல முயற்ச்சி.

வாழ்த்துக்கள்.

கிம் கி டக் பற்றிய குறிப்புகளையும் மற்ற உலக சினிமாக்களையும் வாசிக்க அன்போடு அழைக்கிறேன்.//

நன்றி வண்ணத்துபூச்சியார் :)

Cable Sankar said...

நல்ல முயற்சி குகன்.

குகன் said...

நன்றி Cable Sankar அண்ண :)

வண்ணத்துபூச்சியார் said...

https://www.blogger.com/comment.g?blogID=4460656863147455849&postID=1738442357635984394&page=1

தங்கள் பதிவை குறிப்பிட்டுள்ளேன்.

நன்றி.

Chithan said...

வணக்கம் குகன்
வாசித்தேன். நல்ல பதிவு. அச்சு ஊடகத்திலும் இது போன்ற நல்ல பதிவுகளை பகிர்ந்து கொள்ள விருப்பம் என்றால், யுகமாயினிக்கு அனுப்புங்கள். ஒரே நிபந்தனை. அனுப்பும் முன் வாசித்து அச்சுப்பிழை திருத்தி அனுப்புங்கள் -சித்தன்

LinkWithin

Related Posts with Thumbnails