பிப்ரவரி 14 அன்று கேபிள், பரிசல் புத்தக வெளியீட்டு விழா இனிதே நன்றாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சி வந்து எங்களை சிறப்பித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல...!
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்க... இங்கே
இதே போல் கோயம்பத்தூர் பதிவர் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் அறிவிப்பு வரும்.
**
வெளியீட்டு விழா முன்பே 'EZee Book Shop' இணையதளத்தில் பரிசல் புத்தகத்திற்கு ஆர்டர் கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்து வீட்டு வருவதற்குள் கேபிள் புத்தகத்திற்கு ஆர்டர் கிடைத்தது.
நேற்று, இருவரின் புத்தகத்திற்கும் சமமான ( நம்பர் சொல்ல கூடாது, கண்ணு படும் !) ஆர்டர் கிடைத்துள்ளது. யாணை சாப்பிடும் போது எறும்புக்கு உணவு கிடைப்பது போல நடைபாதை, என்னை எழுதிய தேவதைக்கு... புத்தகத்திற்கும் ஆர்டர் கிடைத்துள்ளது.
இப்போது, கேபிள், பரிசல் இருவர் புத்தகத்தில் 'யார் Best Seller' என்பதில் EZee Book Shop தளத்தில் சரியான போட்டி நடக்கிறது. வாசகர்களுக்கு 10 % கழிவும் வழங்கப்படுகிறது.
***
நாகரத்னா பதிப்பகத்தின் 6 புத்தகங்கள் இப்போது ரூ.250 மட்டுமே ! EZee Book Shop தனது இணையத்தில் அதற்கான வசதி வழங்கியுள்ளது.
Book no.1 - என்னை எழுதிய தேவதைக்கு - குகன்
Book no.2 - காந்தி வாழ்ந்த தேசம் - நாகரத்னா வெளியீடு
Book no.3 - நடைபாதை - குகன்
Book no.4 - எனது கீதை - குகன்
Book no.5 - லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் - சங்கர் நாராயண்
Book no.6 - டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா
புத்தகங்களை வாங்க
8 comments:
வாழ்த்துக்கள் குகனே! பரிசல்காரனும் நீரே! கரையில் கட்டியிருக்கும் கேபிளும் நீரே!
கண்ணா!
உங்கள் தம்பிகளுக்கு அண்ணா!
எளிமையாய் இருந்துகொண்டு இமயச்சாதனை செஞ்சிருக்கீங்க!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் குகன்..அனைத்தும் விற்றுத் தீர்ந்து அடுத்த பிரிண்ட் போடுங்கள்.
வாழ்த்துக்கள் குகன்
Please visit
http://tvrk.blogspot.com/2010/02/blog-post_16.html
// சுரேகா.. said...
வாழ்த்துக்கள் குகனே! பரிசல்காரனும் நீரே! கரையில் கட்டியிருக்கும் கேபிளும் நீரே!
கண்ணா!
உங்கள் தம்பிகளுக்கு அண்ணா!
எளிமையாய் இருந்துகொண்டு இமயச்சாதனை செஞ்சிருக்கீங்க!
//
வஞ்ச புகழ்ச்சியோ !!
அருமை குகன்.. வாழ்த்துக்கள்!
என்னப்பா இப்படிச்சொல்லிட்டீங்க!
மனமாறப் பாராட்டினேன்.
பரிசலின் கதைகளைக் கரையேற்றின பரிசல் காரனும் நீரே!
கேபிளின் கதைகளை ஒரே புத்தகத்தில் கட்டிப்போட்ட கேபிளும் நீரே!
உங்கள் இயற்பெயரைச் சொன்னேன்!
எளிமையாய் இருந்துகொண்டு இமயச்சாதனை செஞ்சிருக்கீங்க!
இதைத்தான் சொன்னேன்.
இதில் எங்க வஞ்சப்புகழ்ச்சி!!?
உளமார்ந்த வாழ்த்துக்கள் மட்டுமே! :)
குகன் என்பவன் நட்புக்கு இலக்கணம்!
குகன் ஒரு படகோட்டி!
இதையும் வைத்துத்தான் சொன்னேன்.!
:)
Post a Comment