டி.வி சேனல் எல்லாம் சன் டி.வி படம் வருவது போல் பார்க்கும் ப்ளாக் எல்லாம் கேபிள், பரிசல், நாகரத்னா நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி பற்றி தான்.
பதிப்பாளராக சந்தோஷமாக இருந்தாலும் ஒரு பதிவராக இவர்கள் இருவரை பார்த்து பொறாமை படமால் இருக்க முடியவில்லை. குறுகிய காலத்தில் எழுத்து மூலம் மட்டுமில்லாமல் நட்பாலும் பலர் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். இவர்களின் முதல் புத்தகம் வெளியீடுவது என்பது மிக பெரிய பொறுப்பு.
இவர்கள் இருவரும் 14.2.10 அன்று எழுத்தாளராக தேர்வு எழுத போகிறார்கள். நான் பதிப்பாளனாக தேர்வு எழுத போகிறேன். நிகழ்ச்சிக்கு வந்து மதிப்பெண் வழங்க போவது நீங்கள் தான்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட புத்தகம் நன்றாக வந்துள்ளது. குறிப்பாக முன்பதிவு திட்டத்தை பற்றி சொல்ல வேண்டும்.
முதலில் கேபிள் இந்த திட்டத்தை பற்றி சொல்லும் போது எனக்கும் இருந்த யோசனையை கூறினேன். தபால் செலவே ரூ.25 - 30 வரும் போது எப்படி என்று தயங்கினேன். எதோ ஒரு புத்தக கடைக்கு பணம் தருவதை விட நம்மிடம் நேராக வாங்கும் வாசகர்களுக்கு கொடுக்கலாம் என்று கேபிள் சொன்னதின் பெயரில் இந்த முன்பதிவு திட்டத்திற்கு சம்மதித்தேன்.
இதுவரை 20 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் மூன்று பேர் நாகரத்னா பதிப்பகத்தின் எல்லா நூல்களையும் வாங்குவதாக கூறியுள்ளார்கள். ( ஏழு நூல் = ரூ.280 + தபால் இலவசம் )
இன்னும் இரண்டு தினம் (12.2.10 கடைசி நாள்) இருப்பதால் நாற்பது முதல் ஐம்பது முன்பதிவு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
**
பதிவுலகுக்கு வந்த பிறகு சிற்றிதழ் மீது எனக்கு இருந்த பார்வை வெகுவாகே குறைந்து விட்டது. 2008 வரை கல்வெட்டு பேசுகிறது, தாய்மண், உரத்தசிந்தனை, செங்கரும்பு என்று பல சிற்றிதழ்களில் எழுதியிருக்கிறேன். மாதம் ஏதாவது ஒரு இதழில் என் படைப்பு வருவது போல் பார்த்துக் கொண்டேன். வலைப்பதிவு தொடங்கிய பிறகு சிற்றிதழில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. உடனுக்கு உடன் விமர்சனம், கருத்து கிடைத்து விடுவதால் சிற்றிதழில் எழுதுவது பெரிதாக எனக்கு தெரியவில்லை.
ஒரு சிற்றிதழ் ஆசிரியர் , " ஏன் படைப்புகள் அனுப்புவதில்லை ?" என்று மிக அக்கரையாக கேட்டார். அத்துடன் இருந்தால் பரவாயில்லை. "உங்கள் படைப்பு எதிலுமே வருவதில்லை.நான் எழுதுவதை நிருத்திவிட்டேனா ? " என்று கேட்டுவிட்டார்.(அந்த அளவுக்கு நான் நல்லவனில்லை). வலைப்பதிவு எந்த அளவுக்கு என்னை சிற்றிதழில் இருந்து தூரமாக்கிவிட்டது என்று பிறகு இப்போது தான் உணர்ந்தேன்.
ஒரு வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சிற்றிதழில் எழுத தொடங்கியிருக்கிறேன்.
1. 'உலக சினிமா’வை பற்றி ஆகஸ்ட்,09 முதல் கல்வெட்டு பேசுகிறது இலக்கிய மாத இதழில் எழுதி வருகிறேன். ( இதுவரை இதழில் வெளியான 'உலக சினிமா' கட்டுரைகள்)
Rabbit Roof fence
Spring, Summer, Fall, Winter... and Spring
Legend of 1900
A Beautiful Mind
2.குறும்படத்தை பற்றி இந்த மாதம் முதல் ‘நம் உரத்தசிந்தனை’ மாத இதழில் எழுத தொடங்கியிருக்கிறேன்.( இந்த மாதம் '....த்தூ' படத்தை பற்றிய கட்டுரை வந்துள்ளது. ) உங்கள் குறும்பட விமர்சனம் இடம் பெற உதயம்ராம் - 94440 11105 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
இன்னும் ஒரு சிற்றிதழில் இணையதளத்தை பற்றி எழுத கேட்டுள்ளார்கள்.
மீண்டும் சிற்றிதழில் எழுத தொடங்கி இருப்பதால் பதிவு, பதிப்பகம் இரண்டும் கேடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.
காதலன் / காதலிகிட்ட காதலை சொல்ல மறந்தால், 14.2.10 அன்று நம்ப நிகழ்ச்சிக்கு வந்திடுங்க...
4 comments:
வாழ்த்துகள் குகன். இந்த நூல் வெளியீட்டிற்கான துவக்கப்புள்ளியில் நானும் பங்குபெற்றதற்காக மகிழ்கிறேன்.
விழாவில் பங்கேற்க ஆசைதான். ஆனால் வர இயலாது :( நேர்முகத்தேர்வு.
வாழ்த்துகள் குகன். இ-புத்தகமாக வெளியிட ஏதேனும் யோசனை இருக்கா?
நிலா, நேர்முகத்தேர்வு? 14-02-இல் ? ஹ்ம்ம்.. யார் தேர்வு செய்றாங்க...ஹீ ஹீ
அனைவருக்கும் வாழ்த்துக்கள் குகன்..
எடுத்து வச்ச நூறு ரூபாய் ஒரு நல்ல செலவுக்காக காத்திருக்கு !
Post a Comment