1931ல் ஆஸ்திரேலியாவில், கறுப்பு - வெள்ளை இன கலப்பு திருமணத்தை அரசாங்கம் அங்கிகரிப்பதில்லை. அங்கிகாரம் பெற அரசாங்க அனுமதி பெற வேண்டும். கலப்பு திருமணத்தில் பிறந்த குழந்தைகளை கட்டாயப்படுத்தி கிறிஸ்துவ மதம் மாற்றப்பட்டனர். அதாவது, கறுப்பு, வெள்ளை என்று இரண்டு இனத்தை தவிர மூன்றாவது ஒரு இனம் உருவாக கூடாது என்பதில் அன்றைய ஆஸ்திரேலிய அரசு கவனமாக இருந்தது. இந்த சட்டத்தை மையமாக வைத்து நடந்த உண்மை சம்பவ படம் தான் ‘Rabbit roof fence’.

பெற்ற தாயிடம் இருந்து மோலி, டைஸி, கிரேஸி என்ற மூன்று சிறுமிகளை காவல்துறைனர் அரசாங்க அனுமதியுடன் இழுத்து செல்கிறார்கள். கலப்பு இன குழந்தைகளுக்காகவே நடத்தப்படும் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களை தங்கள் தாய் மொழியில் பேச கூடாது என்றும், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கட்டளையிடுகின்றனர். கிறிஸ்துவ வழிப்பாட்டுகளை வழிப்பட வைக்கின்றனர். இப்படிப்பட்ட காப்பகத்தில் இருந்து இந்த மூன்று சிறுமிகள் தப்பித்து 1500 மைல்கள் நடந்து, எப்படி தங்கள் அம்மாவிடம் செல்கிறார்கள் என்பது தான் கதை.
மோலியாக நடித்த சிறுமி வாழ்ந்து காட்டியிருக்கிறார். கிரேஸியாக வரும் சிறுமி காவலாளியிடம் மாட்டிக் கொள்ளும் போது சிறுமிகளுடைய வலியை உணர்த்துகிறார். கிரேஸி வண்டி கண்ணாடி வழியாக மோலி, டைஸியை பார்த்த செல்லும் காட்சி மெல்லிய பின்னனி இசை அர்ப்புதமாக எடுத்திருக்கிறார்.
சிறுமிகளை பிடிக்க வரும் காவலாளி ஒரு சாயலில் மீசை இல்லாத 'பாரதிராஜா' போல் தெரிகிறார். "அந்த பொண்ணு ரொம்ப புத்திசாலி" என்ற ஒன்றை வரி வசனம் தவிர கண்கள், மூக்காலே நடித்துக்காட்டியிருக்கிறார். இந்த படத்தில் வசனத்திற்கு வேலையே இல்லை. எல்லோரும் கண்களாலே பேசி நடித்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.
குழந்தைகள் தப்பித்ததும் படம் வேகமாக நகர்கிறது. ஒவ்வொரு இடத்தில் தங்குவதும், யாரிடமாவது அடைக்கலம் புகுந்து உணவு கேட்பதும் என்று ஒவ்வொரு காட்சிகளை செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.
மோலியின் மகள் Doris Pilkington Garimara எழுதிய "Follow the Rabbit-Proof Fence" நாவலை அடித்தளமாக வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். இறுதியில் வயதான (உண்மை)மோலியும், டைசியும் காட்டு போது அவர்கள் அனுபவத்த வலியையும், வேதனையும் நமக்கு கொடுக்கிறார்கள்.
மூன்றாவது இனம் உருவாகாமல் இருக்கு அரங்சாங்க சட்டம் போட்ட தடுத்ததை படம் எடுத்திருக்கிறார்கள். படம் முடிந்ததும் நண்பர் பைத்தியக்காரன் இந்த கதையை ஈழத்தோடு ஒப்பிட்டு பாருங்கள் என்றார். இரண்டு இடத்திலும் ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசாங்கம் மேற்கொள்கிறது. அவர்கள் கையாளும் உத்திகள் மட்டுமே வேறு மாதிரியாக இருக்கிறது.
மொழி, மதம் இந்த இரண்டை அழித்துவிட்டால் ஒரு இனம் அழிந்துவிடும் என்ற மன போக்கை காட்டுகிறது இந்த படம்.
‘Rabbit Proof fence’ படம் சொல்லிட்டு கடைசி வரைக்கும் ‘Rabbit’ கண்ணுல காட்டவே இல்ல...!
3 comments:
பகிர்விற்கு நன்றி நண்பரே...
நன்றி வண்ணத்துபூச்சியார் :)
நான் மிஸ் பண்ணிட்டேன் பகிர்விற்க்கு நன்றி
Post a Comment