
பழைய இசைக்கருவிகளை விற்கும் கடையில் தன் ட்ரம்ப்பெட்டை விற்க வருகிறான் கான்மெக்ஸ். விற்ற பிறகு, மனம் கேட்காமல் கடைசியாக அந்த ட்ரம்பெட்டில் தனக்கு பிடித்த இசையை வாசிக்கிறான். அந்த கடைக்காரர், ட்ரம்பெட்டில் வாசித்த அதே இசையை பியனோவில் வாசித்த இசை தகுடை போட்டு காட்டுகிறார். கான்மெக்ஸ் தன் நண்பனின் கதையை சொல்கிறான்.
டானி என்பவன் கப்பல் பியனோ மீது ஒரு குழந்தையை பார்க்கிறான். அந்த குழந்தைக்கு '1900' வருடம் தன் கையில் கிடைத்ததால் அதே பெயரை வைக்கிறான். 1900வுக்கு எட்டு வயது இருக்கும் போது ஒரு விபத்தில் டானி இறக்கிறான். அன்று முதல் அவன் அந்த கப்பலில் ஆனாதையாக வளர்கிறான். அவனுக்கு ஆர்தலாக இருப்பது பியனோ மட்டுமே. கப்பலில் பயணம் செய்யும் அனைவரையும் தன் பியனோ இசையால் சந்தோஷப்படுத்துகிறான். பலரை சந்தோஷப்படுத்திய '1900' மனதில் காதல் பூக்கிறது. தான் காதலித்த பெண்ணை பார்க்க கூட அவன் கப்பலை விட்டு போக மனம் வரவில்லை. காலம் செல்ல செல்ல.... அந்த கப்பல் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அழிக்கும் நிலைமை வரும் போது கான்மெக்ஸ் சொல்லியும் நிலத்தில் கால் வைக்க மறுக்கிறான். அவன் நிலத்தில் கால் வைக்காத விரும்பவில்லை. இறுதியில் அந்த கப்பலோடு அவனும் அழிகிறான்.
'1900' ரின் கதை கேட்ட கடைக்காரர் கான்மெக்ஸ் விற்ற ட்ரம்பெட்டை திருப்பி கொடுக்கிறார்.
1900 ஆக நடித்தவர் டிம் ரோத். நகைச்சுவை, காதல், கப்பால் மீது பாசம், ஏக்கம் என்று பல உணர்வுகளை முகத்தில் கொண்டு வருகிறார். எப்போ தரையில் கால் வைக்க போகிறார் என்று ஒவ்வொரு காட்சியிலும் எதிர் பார்க்கவைக்கிறார். ஜெல்லி என்பவர் இவரை பியனோ போட்டி அழைக்கும் போது அதன் தீவிரம் புரியாமல் வேடிக்கையாக வாசிப்பதும், ஜெல்லி அவனை தூண்டி விட்ட பிறகு சிகரெட்டை பியனோ வைத்து அது அதிராமல் வாசிப்பது அருமை. பியனோ வாசிக்கும் போது உதடு, விரல்கள், உடல் அசைவு மட்டுமல்ல அவர் சிந்தும் வியர்வை துளிக் கூட நடித்திருக்கிறது.
மெக்ஸாக நடித்தவர் டெய்லர் வினிஸ். பல படங்களில் நகைச்சுவை நடிகனாக நடித்தவர் இதில் நம்மை கொஞ்சம் உருக வைக்கிறார்.
1900விடம் கான்மெக்ஸ், ' பியனோ இசையை எங்கிருந்து கற்றாய் என்று கேட்டதற்கு, 'ஒவ்வொரு மனிதன் அசைவில் இசை இருப்பதை' சொல்லும் காட்சியில் இருக்கும் நகைச்சுவை ரசிக்க வைக்கிறது.
இந்த படத்தில் பியனோ, ட்ரம்பெட் முக்கிய கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறது. படத்தின் பெண் கதாபாத்திரங்களே இல்லையா என்று நினைக்கும் போது ஒரு பெண் '1900' காதலிக்க வைக்கிறாள். அடுத்த காட்சியில் அவள் பிரியும் போது அவளுக்காக அவன் உருவாக்கிய இசை தகுடை உடைத்து போடுகிறான். இறுதியாக, '1900' கப்பலை விட்டு வர விரும்பாததற்கு சொல்லும் காரணம் மனதை நெகிழ வைக்கிறது.
படத்தின் இயக்குநர் Giuseppe Tornatore. இத்தாலிய மொழி படங்களை இயக்குபவருக்கு இது தான் முதல் ஹாலிவுட் படம்.( இந்த படம் இத்தாலி மொழியில் என்ற ‘La leggenda del pianista sull'oceano ‘ பெயரில் வெளிவந்தது). கதாநாயகனுடன் நம்மையும் கப்பலில் வாழ வைக்கிறார்.
படத்தின் கெமராமென் Lajos Koltai. மனிதர்களின் பரிமானத்தை கொண்டு வருபவர்களின் மத்தியில் கப்பலின் பரிமானத்தை அழகான காட்டியிருக்கிறார்.
படத்திற்கு இசை Ennio Morricone. படத்தில் முகம் தான் காட்டவில்லை. ஆரம்ப முதல் காட்சி இறுதி வரை அவருடையை இசையில் நாமும் பயணம் செய்கிறோம்.
இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை என்றார்கள். விருது என்பது விருந்தோம்பல் மட்டுமே. ஒரு நல்ல படத்திற்கு விருது ரசிகர்களின் பாராட்டு தான். அப்படி பார்த்தால் இந்த படம் பல கோடி ரசிகர்களிடம் இருந்து விருது வாங்கிவிட்டது.
3 comments:
கண்டிப்பா பார்த்துடுவோம் தல... ஆமா, நல்ல படம் சொல்றதாலையோ என்னவோ நான் படத்தை பத்தி கேள்விபடலையோ?
நன்றி நிச்சயம் பார்க்க வேண்டும்
Hi..
Gugan!...wishes for ur step...i am also tamil language lover...and also good poem writter....i want 2 send poem to you..but date is expeired...will i send now?....plse send ur home address..i send through courier only
Post a Comment