வணக்கம்.
என் 65வது வயது (8.6.11) அன்று உரத்தசிந்தனையாளர்கள் ‘கவிதை உலகம்’ எனும் நூல் பரிசளித்து அகமகிழ்ந்தனர். நூலை ஆழ்ந்து படித்துப் பார்த்தேன். சிறந்த தலைப்பு, தலைப்புக்கேற்ற முகப்போவியம், நூல் நேர்த்தி ஆகியன சிறப்புடையன.
சில இலக்கணப்பிழைகள் தவிர, இலக்கிய நோக்கில் படைப்பு மிக அருமை.
குறிப்பாக ”மணம் வீசும் மலர்கள்” கவிதை நல்கிய செல்வன். து.செ. கவியரசின் படைப்பு என்னை மிகவும் ஈர்த்தது. அந்த மலர் “பாரதி கோட்டுக்கு ரோஜா ! மேலும் மேலும் ஊக்குவிக்கப்பட்டு, பெருவெளிச்சம் காட்டப்பட வேண்டிய விளக்கு... “கனவு பலிக்குமா !” (அமுதா பாலகிருஷ்ணன்), தமிழன் கவிதைகள், வெகு நேர்த்தி !
”தாய்மை காப்போம்” (அ.காசி) , “காகித ஆசை” (பி.காமகோடி), “என தருமை யாருக்கும் தெரியவில்லை” (புதுயுகன்), இம் மூன்றில் முன்னது பண்பட்ட கவிதை. மற்றிரெண்டில் புதிய கோணங்கள். மூன்றும் முழுமையான படைப்புகள். முதலைந்து ஹைக்கூக்கள், திரு. பிரதீப் பாண்டியனது நேர்த்திக் கோர்வைகள்.
பல படைப்புகளில் தனித்துவம் இருக்கின்றன. ஒரே சாயலில், இரு கவிதைகள் இல்லவே இல்லை.
மேன்மேலும் கவிதை உலகுக்கு காரியம் ஆற்றுங்கள், கருமமே கண் என; யுக கவிஞன் பாரதி, ஆசி தருவான் வாரிவாரி !!
இத்தயாரிப்பில் சம்பந்தப்பட்ட அனைத்து கவிஞர்களுக்கும், ஏனைய பிற பங்கேற்பாளர்களுக்கும், நலம் நாளும் தர வேண்டி அரங்கன் அரண்மையில் என் அன்புத் தொழுகைகள்.
வாழிய நலம்.
பேரன்புடன்,
வை.முத்துகிருஷ்ணன்.
எழுத்தாளர் & பாடலாசிரியர்
திருச்சி – 620 006.
**
நூல் வாங்க.... இங்கே.
No comments:
Post a Comment