
பாலாப போல் படம் எடுக்க ஆசைப்பட்டு யாரோ ஒரு இயக்குனர் இயக்கியது போல் உள்ளது. இயற்கை காட்சிகள் நிறம்பிய இடம், அதை ஓட்டிய காட்சிகள், இடையில் கொஞ்சம் நகைச்சுவை, செண்டிமெண்ட், இறுதி காட்சியில் மரணம், சோகம்... எல்லாம் பாலா டெம்ளேட் தான். ஆனால், பாலா டச் இந்த படத்தில் இருப்பதாக தெரியவில்லை.
திருட்டு தொழில் செய்யும் குடும்பத்தில் இரண்டு தாரத்திற்கு பிறந்த இரண்டு மகன் தான் நாயகர்கள். முதல் தாரத்திற்கு பிறந்தவன் ஒண்டரை கண் விஷால். இரண்டாவது தாரத்திற்கு பிறந்தவன் ஆரியா. இவர்கள் குடும்பத்தில் ஒருவனாக பலகிவரும் பணக்கார ஜமீன் பெரியவர் ஐரிஸ். தன் வயதுக்கு மீறி ஆரியா, விஷாலிடம் நண்பனாக பழகுகிறார். ஒரு கட்டத்தில் வில்லன் ஆர்.கேவால் ஐரிஸ் கொலைச் செய்யப்பட, விஷால், ஆரியா என்ன செய்கிறார்கள் என்பது மீதி கதை.

பொதுவாக பாலா படத்தில் நாயகன் இறக்க வேண்டும். அல்லது நாயகி இறக்க வேண்டும். இந்த படத்தில் இரண்டுமில்லாமல் பெரியவர் ஐரிஸ் இறக்கிறார். அவரை நிர்வாணப்படுத்தி கொலைச் செய்யும் காட்சி முகம் சுழிக்க வைக்கிறது தவிர, அந்த பாத்திரத்தின் மீது இயல்பாக வர வேண்டிய பரிதாபம் எதுவும் வரவில்லை.
இடைவேளை வரை படம் எதை நோக்கி செல்கிறது என்று கூட தெரியவில்லை. பாடல்கள் இளையராஜா கைக் கொடுத்த அளவிற்கு கூட யுவன்சங்கர் பாலாவுக்கு கைக் கொடுக்கவில்லை.

நாயகர்களை அதிகம் பெண்டு எடுக்கும் பாலா அதையும் முழுதாக செய்யவில்லை.
ஆரியா விஷாலை கேலி செய்யவும், அம்மாவுடன் ஆட்டம் போடவும், குடிக்கவும் மட்டுமே செய்திருக்கிறார். சூர்யா முன் நடித்துக் காட்டும் போது விஷாலை நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். மற்ற இடங்களில் விஷாலின் ஒண்டரைக் கண் க்ளோசப் மேக்கப் மென்னை தான் பாராட்ட வைக்கிறது. விஷால் ஆரியா மீது பாசமாக இருக்கிறா என்பதற்கான காட்சிகளும் படத்தில் வைக்கவில்லை.
இப்படி பல இல்லைகள் இருப்பதால்... பாலா படம் போல் இல்லை.
பாலா சார்... We want more emotions...!!
அவன் இவன் - எவனா இருந்தா எனக்கென்ன ?
No comments:
Post a Comment