வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, July 28, 2009

குழந்தை சொன்ன நகைச்சுவை கதைஎதிர் நாட்டு படையெடுப்பில் மன்னர் செய்வதறியாமல் இருந்தார். எதிரியின் படைகள் 2000 பேர்கள். தன்னிடம் இருப்பதும் வேறும் 500 மட்டும் தான். எதிரி முற்றுகையிட்டால் எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் குழம்பி போய் இருந்தார். அப்போது அவர் குழப்பத்தை தீர்க்க ஒரு முனிவர் வந்தார்.

மன்னர் தன் நிலைமையை முனிவரிடம் சொன்னர். அதற்கு, முனிவர் " படை வீரர்களுக்கு விளக்கெண்ணெய் கொடுங்கள்" என்கிறார். மன்னர் வியப்பாக முனிவரை பார்த்தார். போர் வர போகிறது. யுத்த திட்டங்கள் வகுத்தாக வேண்டும். இவர் என்னவென்றால் தன் படை வீரர்களுக்கு "விளக்கெண்ணெய் கொடுக்க சொல்கிறாரே !" என்று குழம்பினார்.

எப்படியும் 2000 பேர் கொண்ட படை வீரர்களை சமாளிப்பது கடினம். முனிவர் சொல்லுவதை செய்து பார்ப்போம் என்று தன் படை வீரர்களுக்கு விளக்கெண்ணெய் கொடுக்கிறார். கொஞ்ச நேரத்தில் விளக்கெண்ணெய் குடித்த படை வீரர்கள் பத்து பத்து பேராக கழிவறை சென்று வந்தனர். இதை பார்த்த மன்னருக்கு பயம் மேலும் அதிகரித்தது.

எதிரி படை வந்து விட்டதாக மன்னருக்கு செய்தி வருகிறது. எதிரி நாட்டு மன்னரிடம் ஒரு தூதுவன் சமாதானம் பேச அனுப்பியிருந்தான். மன்னருக்கு ஒரு ஆச்சரியம். சண்டைக்கு என்று வந்தவன் எப்படி சமாதானம் பேச ஆள் அனுப்புகிறான் புரியாமல் குழம்பி நின்றான். அப்போது தூதுவன் " ஒற்றன் மூலம் உங்கள் படை பலத்தை பார்த்தோம். பத்து பத்து பேராக உள்ளேவும் வெளியே வருவதை நோட்டம் விட்டோம். உங்கள் படைபலம் 5000 பேர் என்று தெரிந்த பிறகு தான் சமாதானம் பேச வந்திருக்கிறோம்" என்றான்.

மன்னை புக்கையுடன் சமாதானம் பேசினார்.

"அன்றிலிருந்து விளக்கெண்ணெய் குடித்தால் எல்லா பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை வந்தது." - இப்படி ஒரு கதை சொன்னது பகுத்தறிவாளரோ அல்லது எழுத்தாளரோ இல்லை. ஐந்தாவது படிக்கும் சிறுவன்.

குழந்தை எழுத்தாளர் பற்றி நடந்த பயிற்சி பட்டறை முனைவர். நடராஜன் அவர்கள் சொன்ன தகவல். குழந்தைகளுக்கு பெரியவர்களை விட நகைச்சுவை திறன் அதிகம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சொன்ன கதை இது.

4 comments:

Jawarlal said...

சிறுநீர் கழிப்பது ஒரு தோற்று நோய். ரோட்டில் போகும் போது ஒருத்தர் வழித்துக் கொண்டு உட்கார்ந்தாள் ஏறக்குறைய கூட வருகிறவர்கள் எல்லாரும் உட்காருவார்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்து ரொம்ப தமாஷாக ஒரு பள்ளிச் சிறுவன் சொன்ன கதை :

வட்ட மேசை மாநாட்டுக்கு இடையே 'எக்ஸ்க்யூஸ் மீ' என்று சொல்லி விட்டு காந்தி சிறுநீர் கழிக்க வெளியே போய் உட்கார கூடவே நேரு,படேல்,ஜின்னா,தாதாபாய் நௌரோஜி என்று ஒரு பெருந் கூட்டம் உட்கார்ந்ததாம்.

சிறுநீர் கழிப்பதிலேயே இத்தனை ஒற்றுமையா என்று மலைத்துப் போன வெள்ளையர்கள் உடனே சுதந்திரத்துக்கு ஒப்புக் கொண்டார்களாம்.

http://kgjawarlal.wordpress.com

Tally said...

nalla irukkunga,

Tally said...

mm

Suriyaa Screens said...

super

LinkWithin

Related Posts with Thumbnails