வீடு நெடுந்தூரம் - Short film
Book, Movies Offers
To Buy my books in flipkart
Thursday, July 30, 2009
LIC பாலிஸி போட்டுவது... சமூக சேவை !
என் வலது பக்கம் இருக்கும் 'LIC' விளம்பரத்தை பார்த்து "எந்த ஆஸ்ரமத்துக்கு பணம் தருவீங்க" என்று ஒரு நண்பர் கேட்டார். கண்டிப்பாக ஆன்மீக ஆஸ்ரமத்திற்கு கிடையாது என்றேன். யாருக்கு உண்மையாக பணத்தேவை இருக்கிறதோ அவர்களுக்கு உதவ வேண்டும். அவ்வளவு தான். அதற்கு நன்கொடையாக வாங்கமால் 'LIC' பாலிஸி பிடித்து அதன் மூலம் வரும் வருமானத்தை மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும்.
தனி 'Widget' போடும் போதே இதற்கு தனியாக பதிவு போட வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு இப்போது தான் நேரம் கிடைத்தது.
'LIC' பாலிஸி கமிஷனை நம்பி என் குடும்பம் இல்லை. என் குடும்பத்திற்கு என் ஒருவன் சம்பளம் மட்டும் போதும் என்ற 'Disclaimer' போட்டு தொடங்குகிறேன்.
எஸ்.ராமகிருஷணன் எழுதிய 'துணையெழுத்து' படித்தவர்கள் மனதில், அதில் வரும் வாட்ச்மென் என்றைக்கும் வாழ்வான். தன் சம்பளத்தை ஒரு பகுதியை மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவனின் நல்ல எண்ணத்தை காட்டும். எவ்வளவு சம்பளம் வாங்கியும் என் தேவை பூர்த்தி செய்யமுடியவில்லை என்று நினைத்தவர்களை அந்த வாட்ச்மென் வெட்கப்பட வைத்திருப்பார். அந்த எண்ணம் எனக்கு ஏன் இல்லை என்று என்னையே பல முறை கேட்டுக் கொண்டேன்.
என் குடும்ப சூழ்நிலை என் வருமானத்தை ஒரு பகுதியை ஒதுக்க முடியாது. ஆனால், கூடுதல் வருமானம் சம்பாதிக்க முடியும். அதில் வரும் வருமானத்தில் நாலும் பேருக்கு உதவ முடியும். நாலு பேருக்கு உதவுவதற்கு பணம் கேட்பதற்கு பதிலாக, பாலிஸி கேட்பது கொஞ்சம் வித்தியாசமான முயற்சியாக தெரிந்தது. அது மட்டுமில்லாமல் இரு தரப்பினருக்கும் பயன் பெறுவர். பாலிஸி எடுத்தவருக்கு அயூல் காப்பீடும், அதில் வந்த வருமானம் மற்றவருக்கு உதவியும் செய்ய முடிகிறது.
LIC முகவராக LICக்கு விளம்பரம் தேடி தரவில்லை. அரசாங்க அயூள் காப்பீடு என்பதால் பணம் போட்டவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கும். எந்த வித சிக்கலும் இருக்காது.
எந்த ஆஸ்ரமத்துக்கு நன்கொடை கொடுத்திருக்கிறோம் என்ற விபரத்தை பாலிஸி போட்ட ஒரு மாதத்தில் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.
உதவ முடிந்தவர்கள் உதவுங்கள். நீங்கள் நாலு பேருக்கு உதவ நினைத்தால் இதை யோசனையாக எடுத்துக் கொண்டு செயல் படுத்துங்கள்.
ஏதாவது செய்யனும் பாஸ்...!!!
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//LIC முகவராக LICக்கு விளம்பரம் தேடி தரவில்லை. அரசாங்க அயூள் காப்பீடு என்பதால் பணம் போட்டவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கும். எந்த வித சிக்கலும் இருக்காது//
இது உண்மைதான்!
ஒரே ஒரு Add-தமிழ்பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி :-)
Post a Comment