வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, July 10, 2009

மனித வெடிக்குண்டு

ஆத்ம விஸ்வாசம் இல்லாத துறவிகளே !
பல ஆத்மாக்களைக் கொள்ள துணிந்த பாவிகளே !

பிணத்தைக் கண்டு
வாழ்க்கையை புரிந்துக் கொண்ட
புத்தரை ஏட்டில் படித்தேன் !
பல பேரை பிணங்களாக மாற்றும் உன்னை
நாள் இதழ்களின் தினமும் படிக்கிறேன் !

உலக வர்த்தத்தை
இடித்து தள்ளியதில்
என்ன லாபம் உனக்கு ?
பல உயிர்க் கொன்ற
உன் வெற்றியை
நீ பரிசாய் அளித்தது யாருக்கு ?நீயும் இறக்கிறாய்
மற்றவரையும் சாகடிக்கிறாய்
இதனால் உலகில்
என்ன மாற்றம் வந்தது ?

ஒரே நாளில் தொடர் குண்டுகள்!
பீதியில் மக்கள் !
புதையலை தேடுவது போல்
குண்டுகளை தேடும் காவதுறையினர் !
எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு
தள்ளிய சந்தோஷத்தில் நீங்கள் !

உனக்கு நீயே எதிரியானாய்
மற்றவரையும் எதிரியாய்
நினைத்து கொன்று திர்த்தாய் !

நீ நாட்டுக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டாம்
உனக்கு நீ விஸ்வாசமாக இரு…
மற்றவர் இறக்காமல் இருப்பதற்கு…

******

கவிதைக்கான புகைப்படத்தை தேடும் போது கிடைத்த GIF படம். பார்த்து ரசியுங்கள்.

2 comments:

Vidhoosh said...

gif இரசிக்கும் படி இல்லை குகன். வருந்தும் படியே இருந்தது.

:( ரொம்ப யோசிக்க வைக்கிறது.

குகன் said...

// Vidhoosh said...
gif இரசிக்கும் படி இல்லை குகன். வருந்தும் படியே இருந்தது.

:( ரொம்ப யோசிக்க வைக்கிறது.
//

உங்கள் வருத்தம் சரி தான். ஆனால், நிதர்சன உண்மையை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails