மனுஷன் கட்டுரையில் கொள்ளுரார்னா சிறுகதையிலும் மனதை கசிய வைக்கிறார். சமிபத்தில் அவருடைய இரண்டு சிறுகதை நூலை படிக்கும் நேரம் கிடைத்தது.
பால்ய நதி
முதல் கதை " கானகப்புலியின் மனைவி". கதையை படித்து முடித்த பிறகு மாயாஜால கதைகள் அடங்கிய தொகுப்பாக இருக்குமோ என்று நினைத்தேன். அடுத்த கதையான " ஒளியை வாசிக்கின்றவன்" கதையில் பழைய டாக்கிஸ்ல் வேலை செய்த 'டாக்கி' வேலையை நினைவு படுத்தும் கதையாக எழுதியிருக்கிறார்.
"மினர்வா சலூன்" - ரங்கூன் புலம் பெயர்ந்த தமிழனின் கதை என்று நினைத்தால், கிரைம் கதையாக முடிகிறது.
'இரு குரல்' - எதோ தற்கால கதை நிகழு என்று வாசித்தால், கடைசியில் கண்ணகி கதை என்று முடித்திருக்கிறார். ஒவ்வொரு கதையின் முடிவை யூகிக்க முடியாமல் இருந்தால் பரவாயில்லை. இவர் காலத்தையே யூகிக்க முடிக்காமல் இறுதியில் அந்த முடிச்சை அவிழ்ப்பது மிகவும் அருமை.
எஸ்.ராமகிருஷ்ணின் ஐந்தாவது சிறுகதை தொகுப்பு இது !
விலை.60. பக்கங்கள் : 120, உயிர்மை பதிப்பகம்.
நடந்து செல்லும் நீருற்று
‘பிழை திருத்துபவடின் மனைவி’ நிலைமை சொல்லி முதல் கதையிலே நம்மை நெகிழவைக்கிறார். பிழை திருத்துபவரின் மனைவி நிலைமையே இப்படி என்றால் எழுத்தாளரின் மனைவி நிலைமை பற்றி யோசிக்க கூட முடியவில்லை. 'சேர்ந்திசைப்பவர்கள்' கதையில் சத்பாலை இசை குழு பெயரில் மௌனத்தை இசையாக உணர வைத்திருக்கிறார்.
'பனாரஸ்' திகிலான கதை.
'பதினைந்து வயதில் ஒருவன்' கதையில் ஆத்தியப்பன் கதாபாத்திரம் மூலம் நம் பாலியத்தை கொஞ்சம் எட்டிபார்க்க வைத்திருக்கிறார்.
'ஒரு நகரம், சில பகல்கனவுகள்' கதை ஆங்கிலத்தில் வந்த vantage point படத்தை ஞாபகம் படுத்துகிறது. ஏற தாழ நம் 'ஆயுத எழுத்து' படம் போல தான். இருந்தாலும் 'பயோனியர் லாட்ஜ்' வரலாற்று சுருக்கம் மிகவும் அருமை.
அதிக வர்ணனைகளும், சம்பாஷைகளும் கதையை ஒரே இடத்தில் இருப்பது போல பிம்பத்தை தோற்றுவிக்கிறது.
எஸ்.ராமகிருஷ்ணின் ஆறாவது சிறுகதை தொகுப்பு இது !
விலை.70. பக்.120, உயிர்மை பதிப்பகம்.
சிறுகதை பெயரில் ஏன் கதையை இவ்வளவு பெரிதாக எழுதுகிறார் என்ற சந்தேகம் மட்டும் இருந்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு வேளை இதை தான் பின் நவீனத்துவம் சொல்லுறாங்களோ...!
1 comment:
எஸ்.ராமகிருஷ்ணனின் நடந்து செல்லும் நீருற்று சிறுகதைத்தொகுப்பு வாசித்திருக்கிறேன். எனக்கு பிடித்த தொகுப்பு. அதில் 'ஒரு நகரம் சில பகல் கனவுகள்' கதை எங்கள் மதுரையைக் குறித்தது என்பதால் எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை. பகிர்விற்கு நன்றி.
Post a Comment