
எழுத்தாளனுக்கு இருக்கும்
வறுமை சாபத்தை போக்கிய
முதல் கவிஞன் !
தன் பழக்கத்தால்
வறுமை கோட்டை தொட்ட
சராசரி மனிதன் !
படித்த படிப்பு
இவர் கவிதைக்கு தடைப்போடவில்லை
படிக்கும் கவிஞர்களுக்கு
புத்தகமாக இருந்தவர் !
நாத்திகனாய் தொடங்கி
ஆத்திகனாய் வாழ்ந்தவர் !
காதலை அனுபவித்து
அதை தூற்றவும் செய்தவர் !
பாட தெரியாதவர்களையும் பாட வைத்தவர் !
பாட்டாலே தனக்கு மரணமில்லை
என்று கர்வமாக கூறியவர் !
தன் ஒவ்வொரு பாடலிலும்
உயிருடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர் !
எல்லா தரப்பு மனிதனாக வாழ்ந்து காட்டியவர் !
தான் வாழ்ந்த மனநிலையை
தன் எழுத்துக்களால் உணர்வை பதிவு செய்தவர் !
இவர் போல் வாழ்க்கையை ரசித்தவர் யாருமில்லை
இவர் போல் வாழ்க்கையில் இழந்தவரும் யாருமில்லை !
2 comments:
எப்படி வேண்டுமானாலும் அர்த்தப் படுத்திக் கொள்கிற மாதிரி இருக்கிறது இந்தப் பதிவு.
கவிஞர் மாதிரி இழந்தவர் எவருமில்லை என்பது ஒரு விதத்தில் உண்மைதான், அதனால் தான் எல்லாவற்றையும் பெறுகிற பெரும்பேறு வேறெவர்க்கும் கிடைக்காதது அவருக்குக் கிடைத்தது.
உறவுகளின் உண்மையான முகத்தைக் கண்டுகொண்டதும், கண்டதைச் சொன்னதும் கவிஞரைத் தவிர இங்கே வேறு யார் இருக்கிறார்கள்?
போதாது.
Post a Comment