ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனிடம் " நெத்து நா தாஜ் ஹோட்டல்ல நாஸ்தா துண்ணேன்"
"மெய்யாலுமா !" என்று வியந்தான் இரண்டாம் பிச்சைக்காரன்.
"நெத்து ஒரு மவ ராசன் 100 ரூபா பிச்ச போட்டாரு. அந்த தூட்ட வச்சு சோலா ஹோட்டல்ல 1000 ரூபாய்க்கு துண்ணேன். சப்லையரு தூட்ட கேட்க இல்ல சொன்னேன்."
" அடி பின்னியிருப்பாங்களே ! "
" இரண்டு அடி அடிச்சு போலீஸ்கிட்ட விட்டுட்டாங்க "
"அப்புறம் ??"
" என் கிட்ட இருந்த 100 ரூபா கொடுத்தேன். விட்டுட்டான் "
***
கணவன் மனைவி இடையே பெரிய சண்டை.
கோபத்தில் மனைவி தன் அம்மாவிடம் போனில், " எனக்கும் அவருக்கும் மறுபடியும் பெரிய சண்ட. நா உன் கூட வந்திருக்கேன்" என்றாள்
" இல்லம்மா... ! உன் புருஷன் செஞ்ச தப்புக்கு வருத்தப்படனும். நா வந்து உன் கூட தங்குறேன் " என்றாள்.
***
கடவுளை கேட்டால் எதுவும் கிடைக்கும் என்று அம்மா சொல்ல, அப்பாவிடம் கேட்க பயந்து கார்த்திக் என்ற சிறுவன் ஐந்நூறு ரூபாய் கேட்டு கடவுளுக்கு கடிதம் எழுதினான்.
ஆனால், எந்த விலாசத்துக்கு அனுப்ப வேண்டும் என்று ரொம்ப நேரம் யோசித்தான். எந்த அட்ரஸ் போட்டால் சீக்கிரம் போகும் என்று யோசித்து கடைசியில் நிதியமைச்சருக்கு அனுப்புகிறார். அவர் அலுவலகத்தில் கடிதத்தை பார்த்து நிதி அமைச்சருக்கு தெரிவிக்கின்றனர்.
சிறுவன் மனது புண் படக்கூடாது என்பதற்காக கடவுள் பெயரில் இர நூறு ரூபாய் அனுப்பி வைக்கிறார்.
கொஞ்ச நாட்களில் அந்த சிறுவனிடம் இருந்து பதில் வருகிறது. நிதி அமைச்சர் ஆர்வமாக திறந்து படித்தார்.
அன்புள்ள கடவுளுக்கு,
நீங்கள் அனுப்பிய பணம் கிடைத்தது.
எதற்கும் வரி போடும் அரசாங்கம், நீங்கள் அனுப்பிய ஐந்நூறு ரூபாய்க்கு ரூ.300 வரி வாங்கி கொண்டு தான் அனுபியிருக்கிறார்கள்.
அன்புடன்,
கார்த்திக்
4 comments:
சிறுவன் கடவுளுக்கு எழுதிய கடிதம் எனக்கு ரொம்ப பிடித்தது.
சிறுவன் கடவுளுக்கு எழுதிய கடிதம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.சூப்பர்.
கலக்கல் டோய்....
சிறுவன் எழுதிய கடிதம் நயம்
Post a Comment