வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, October 15, 2010

மகாபுல்வெளி : ஆன்டன் செகாவ்

உலக இலக்கிய ஆளுமைகள் உருவாக்கியதில் ரஷ்ய இலக்கியத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, கோகல், புஷ்கின், துர்கனேவ் என்று தொடரும் இந்த பெரிய பட்டியலில் செகாவ் மிகவும் முக்கியமானவர்.

ஜனவரி 29, 1860 அன்று ஆன்டன் செகாவ் பிறந்தார். தன் பெற்றோரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தவர் கிரேக்கம் கற்க கிரேக்க பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், கிரேக்க தேர்வில் இவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. ருஷ்ய மொழியில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். பள்ளிப்படிப்பு முடித்து மருத்துவம் படிக்க மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

குடும்ப சுவை, படிப்புக்கு பண தேவை, பொருளாதார உதவிக்காகவும் பணம் திறட்ட தான் செகாவ் எழுத தொடங்கினார். அவருடைய அரும்பு எழுத்துகளுக்கு ஒரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. Oskolki என்ற முன்னனி பதிப்பகத்தில் எழுத செகாவுக்கு வாய்ப்புகிடைத்தது. அந்த பதிப்பகத்திற்காக பல சிறுகதை எழுதினார்.

அவர் எழுதிய The Huntsman சிறுகதைக்கு அன்றைய காலத்தில் பெரிய எழுத்தாளராக கருதப்படும் க்ரிங்ரோவின்ச் அவரை பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அவரின் பாராட்டு மேலும் பல சிறுகதை எழுத தூண்டியது.

A Dreary Story, The Murder, Peasants போன்ற சிறுகதைகள் எழுதியோடு The Seagull என்ற நாடகத்தை எழுதியிருக்கிறார். ஆனால் அவரை அதிகம் புகழ் உச்சியில் கொண்டு சென்றது என்றால் ‘Steppe’ கதை தான்.

Severny Vestnik (The Northern Herald) என்ற பத்திரிகையில் Steppe’ கதை பிரசுரமானது.

ஒன்பது வயது சிறுவன்யின் பயணம் தான் கதையின் கரு. பெற்றோரை இழந்த ஒன்பது சிறுவன் தன் மாமாவுடன் ரயிலில் பயணம் செய்கிறான். பயணத்தில் அவன் சந்திக்கும் பாதரியார், பெண், இன்னும் சில நண்பர்கள், குதிரை பயணம் என்று ஒரு பயணத்தின் கதையாக செல்கிறது. சிறுவனின் பயணத்தில் உலகம் எவ்வாறு இயங்குகிறது என்று சில இடங்களில் செகாவ் கவிதை நடையில் அழகாக சொல்லியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் நாவல் வடிவத்தில் எழுதப்பட்ட சிறுகதை என்று ‘Steppe’ கருதப்படுகிறது. Steppe’ கதைக்கு கிடைத்த வரவேற்பு, Ivanov என்ற நாடகத்தை செகாவ் எழுத உத்வேகமாக இருந்தது.
இன்று பல இலக்கியவாதிகளின் பார்வையில் ஆன்டன் செகாவ் மாஸ்டர் பீஸ்ஸாக சொல்லுவது என்ற நாவலை தான். இதை ம.ந.ராமசாமி திறம்பட தமிழில் 'மகபுல்வெளி' என்ற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார்.

புத்தகத்தை வாங்க.... இங்கே


செகாவின் ஆளுமையை பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ‘செகாவின்மீது பனிபெய்கிறது' என்ற நூலை எழுதியிருக்கிறார்.

மகாபுல்வெளி :
ஆன்டன் செகாவ்
ரூ.80, பக் : 192
தமிழில் : ம.ந.ராமசாமி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails