சீமான்களை எதிர்த்து நிலப்போரட்டத்தில் குதித்த ராமுல்லையாவை, நில முதலாளியான நாராயண ரெட்டி கொலை செய்கிறான். தன் தந்தை மரணத்திற்கு காரணமாக இருந்த நாராயண ரெட்டி, நர்சன்னா ரெட்டி என்று ஒரு குடும்பத்தையே போட்டு தள்ளுகிறான் பரிடலா ரவிந்திரா சௌத்ரி. தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள மாமா வீட்டுக்கும் வரும் ரவி, அவர் மகள் சுனிதாவை திருமணம் செய்துக் கொள்கிறான். தன் தோழர்களின் உதவியோடு அவன் இருக்கும் பகுதியில் கிரானைட் இருப்பதை கண்டு பிடிக்கிறான். அது தான் அவன் வாழ்க்கை திருப்புமுனையாக இருக்கிறது.
தெலுங்கு தேச கட்சியில் இணைந்து எம்.எல்.ஏவாகிறான். அதன் பின் அனந்தபுர மாவட்டத்தை தன் கையில் வைத்துக் கொள்கிறான். அவனால் பாதிக்கப்பட்ட கங்குல சூர்யநாராயண ரெட்டி என்கிற சூரி (நாராயண ரெட்டி யின் மகன்) ரவியை பழிவாங்க நினைக்கிறான்.
ரவியை கொல்ல ரிமோட் கன்ட்ரோல் கார் பாப் வைத்து கொலை செய்ய நினைக்கிறான் சூரி. ஆனால், ரவி அந்த தாக்குதலில் இருந்து தப்பித்து விடுகிறான். ஆனால், துரதிஷ்டவசமாக 26 பேர்கள் அதில் இறக்கிறார்கள். நாற்பதுக்கு மேல் படுகாயம் ஏற்ப்படுகிறது. இதனால், சூரிக்கு கோர்ட் ஆயுள் தண்டை வழங்குகிறது.
மாநில ஆட்சி தெலுங்கு தேச கட்சியிடம் இருப்பதால் ரவிக்கு பாதுகாப்பு பலமாகிறது. அவனை கொலை செய்யாமல் விட போவதில்லை என்ற வேட்கையில் சூரி இருக்கிறான். காரணம், 1983ல் நாராயண ரெட்டியை கொன்ற ரவி, 1993 சூரியின் குடும்பத்தின் உள்ள ஆறு பேரைக் கொன்று இருக்கிறான். அதன் கோபம் அவனை கொலை செய்ய எட்டு வருடங்களாக போராடுகிறான்.
2004 தேர்தலில், ரவி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. ரவி கொடுக்கப்பட்ட பாதுகாப்பு நான்கு பேராக குறைகிறது. அவனுக்கு ஆதரவாக இருந்தவர்கள் சூரியால் கொல்லப்படுகின்றனர். அரசாங்கத்திடம் முறையிட்டும் ரவி சரியான பாதுகாப்பு கிடைக்கவில்லை.
24-1-2005 கட்சி மீட்டிங் முடிந்து திரும்பும் போது சூரியின் தோழர்களால் ரவி சுட்டுக் கொள்ளப்படுகிறான்.
இது ராம்கோபால் வர்மாவிடன் 'ரத்த சரித்திரம்' படத்தின் கதை மட்டுமல்ல.... ராயல் சீமா பகுதியில் நடந்த உண்மையான கதையும் இதுவே !!
அந்திராவில் இருக்கும் ராயல் சீமா பகுதி பாக்ஷனிசம் (factionism) பெயர் போன ஒன்று. கடப்பா, அனத்தப்பூர், குர்நூல் போன்ற மாவட்டங்களில் வெட்டு, குத்து, கொலை சர்வ சாதரனம். சாயல்சீமா பகுதியை வைத்து எத்தனையோ தெலுங்கு படங்கள் பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். வெற்றிப் பெற்றுயிருக்கிறது. தமிழில் இறக்குமதியும் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு உண்மையான சம்பவத்தை வைத்து எந்த மசாலாவும் இல்லாமல் ராயல்சீமா பகுதியின் அரசியலை படமாக வருகிறது 'இரத்த சரித்திரா'.
பொதுவாக ராம்கோபால் வர்மாவின் படங்களில் வன்முறை அதிகமாக இருக்கும். ஹீரோசியம் இல்லாமல் ரியலிசமாக இருக்க வேண்டும் எடுக்கும் காட்சிகளில் மெனக்கெட்டு படமாக்குபவர் தான். ஆனால், வன்முறை தூண்டும் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப யோசிக்கும் போது அவர் மட்டும் ஏன் வன்முறையை நம்பி படம் எடுக்கிறார் என்று தெரியவில்லை. நான் வன்முறை படங்களை பெரிதாக பார்ப்பதில்லை. இருந்தும், இந்த படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்.
ஒரு ட்ரெய்லரை திரும்ப திரும்ப பார்த்தேன் என்றால் அது 'இரத்த சரித்திரம்' தான். காரணம், இந்த படத்தின் கதை பின்னனி. இன்னொன்று சூரியாவின் குரல்.
இதன் கதை பின்னனியை ஆராய்ந்தால் ஆந்திராவின் ராயல்சீமாவின் அரசியல் முகம் வெளுத்துவிடும்.
நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்தவன், தெலுங்கு தேச பார்டியின் முக்கியமான பொருப்பில் இருப்பவன், ஆந்திராவின் மந்திரியாக இருந்தவன். இது தான் பரிடலா ரவிந்திரா பற்றி பத்திரிக்கை சொல்லும் செய்திகள். ஆனால், தன் தந்தை ராமுல்லையா வழியை தன் வாழ்க்கையையும் ஒரு நக்ஸ்லைட்டாக தொடங்கியிருக்கிறான். தன் பாதுகாப்பாக்காக அரசியலில் சேர்ந்தவன். ரெட்டி குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சியினர் என்று பலரை கொலை செய்திருக்கிறான்.
சூரியநாராயண ரெட்டி... அவன் மீது பல கற்பழிப்பு வழக்கு இருக்கிறது. இருப்பத்தியாரு பேரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக இருந்து ஜனவரி, 2010 ஜெயிலில் இருந்து வெளியே வந்திருக்கிறான். சௌத்ரிகளுக்கும், ரெட்டிகளுக்கும் இடையே நடக்கும் போட்டியை ஆராய்ந்தால் ஆந்திராவில் இருந்து பல கதைகள் எடுக்கலாம்.
ரத்த சரித்திரம் படத்தில் ரவி பாத்திரத்தை விவேக் ஓப்ராய்யும், சூரி பாத்திரத்தை சூர்யாவும் நடிக்கிறார்கள். இரண்டு கதாநாயகர்கள் நடிப்பதால் சினிமா தர்மப்படி இரண்டு கொலையாளியின் வாழ்க்கை வடிவத்தை நியாயப்படுத்துவது போல் திரையில் காட்டலாம். ஆனால், இருவரும் பக்கா ரௌடிகள் என்பது உண்மை. அதற்கான தகவல்கள் இன்னும் கீழ் இருக்கும் தளத்தில் பார்க்கலாம்.
http://en.wikipedia.org/wiki/Paritala_Ravindra
http://royalchowdarys.wetpaint.com/page/Paritala+Ravindra+chowdary
http://www.rediff.com/news/2005/jan/28syed.htm
http://www.indianexpress.com/old/ie/daily/19971124/32850643.html
http://cbi.nic.in/pressreleases/PRelease2005/p27apr5.htm
நேதாஜி, பகத் சிங் போன்றவர்களை பற்றி படம் எடுக்க வேண்டாம். சுந்திரப்போராட்டம், சரித்திரப்படங்களும் எடுக்க வேண்டாம். ஆனால், குறைந்த பட்சம் ரௌடிகளை நாயகர்களாக சித்தரித்து அவர்கள் கொலை வாக்காளத்து வாங்கும் படங்களை என்னவென்று சொல்லுவது. இதை பதிவாக போட்ட என்னை என்ன சொல்லுவது :)
3 comments:
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
http://denimmohan.blogspot.com/
good post guhan,wishes,any way RGV my favorite film maker....
நீங்கள் விழிபுனர்வு ஏற்படுத்துவதாக கொள்ளலாமா?
Post a Comment