பதிவுலகில் முதல் முறையாக படம் வெளிவரும் இரண்டு வார முன்பே வரும் விமர்சனம்.
எப்படியாவது ஒரு பணக்காரனுக்கு காவல்க்காரனாக வேண்டும் என்பது அர்ஜூனின் லட்சியம். அதனால், தன் ஹீரோயிசத்தை பயன்படுத்தி பெரிய தலைகளை கவர நினைக்கிறான். அவன் செய்யும் ஹீரோயிசம் எல்லாம் காமெடி பீஸாய் போகிறது.
பெரிய தாதாவாக இருந்து ரௌடிசத்தை விட்டு தன் குடும்பத்தோடு வாழும் ராஜ்கிரணுக்கு காவலனாக முயற்சிக்கிறான் அர்ஜூன். ராஜ்கிரண் மறுத்தும், பெரிய சிபாரிசுடன் வருகிறான். வேறு வழி இல்லாமல் அர்ஜூனை காவலனாக வேலைக்கொடுக்கிறார் ராஜ்கிரன். ஒரு சந்தர்ப்பத்தில் ராஜ்கிரண் உயிரை காப்பாற்றுகிறான் அர்ஜூன். அதனால், தன் மகள் மீராவின் காவலனாக அர்ஜூனை இருக்க சொல்கிறார்.
மீராவும், அவன் தோழி மித்ராவும் செல்லும் இடமெல்லாம் காவல்காக்கிறேன் என்ற பெயரில் அர்ஜூன் பின் தொடர்கிறான். அவன் தொல்லை தாங்க முடியாத இருவரும் முகம் தெரியாத பெண்ப் போல் அர்ஜூனின் செல்லுக்கு போன் செய்கிறார்கள். அர்ஜூனை காதலிப்பதாக சொல்கிறாள் மீரா. ஆரம்பத்தில் விளையாட்டாக போக ஒரு கட்டத்தில் அர்ஜூன் போன் பேசும் பெண்ணை காதலிக்கிறான். மீராவும் அர்ஜூனை காதலிக்க தொடங்குகிறாள். அர்ஜூன் காதலிப்பது தன்னை தான் என்று மீரா சொல்ல வரும் போது ராஜ்கிரண் அர்ஜூனை தன் மகளை காதலிப்பதை அறிந்து அடிக்கிறான். அர்ஜூனை காப்பாற்ற மீரா ராஜ்கிரணிடம் அர்ஜூன் காதலிப்பது தன் தோழி மித்ரா என்கிறாள். அர்ஜூனும் தன்னிடம் போனில் பேசியது மித்ரா என்று நினைத்துக் கொள்கிறான். மித்ராவும் வேறு வழியில்லாமல் தன் தோழிக்காக அர்ஜூனின் கரத்தை பிடிக்கிறாள்.
சில வருடங்களுக்கு பிறகு.... அர்ஜூனின் மனைவி மித்ரா இறந்துவிடுகிறான். இறப்பதற்கு முன் தன் மீராவைப் பற்றி தன் டைரியில் எழுதி வைத்ததை அர்ஜூனின் மகன் படிக்கிறான். மீராவை பார்க்க வேண்டும் என்று அர்ஜூனிடம் கேட்க, முதலில் மறுக்கும் அர்ஜூன் பிறகு சம்மதிக்கிறான். ( kuch kuch hota hai படம் ஞாபகம் வந்தால் நான் பொருப்பில்லை )
அர்ஜூன் தன் மகனோடு மீராவை பார்க்க வருகிறான். அர்ஜூனும், மீராவை இணைந்தார்களா ? அவர்கள் காதலுக்கு ராஜ்கிரண் சம்மதித்தாரா ? என்பது தான் மீதி கதை.
தீபாவளியில் வெளியாகும் 'காவலன்' படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
அர்ஜூனாக விஜய். தன் முந்தைய படங்களில் ஹீரோயிசம் என்ற பெயரில் காமெடி செய்தவர், இதில் காமெடி என்ற பெயரில் ஹீரோயிசம் செய்திருக்கிறார். செயற்கைத்தனமாக இருக்கிறது. கதையே இல்லாமல் சுறா, வேட்டைக்காரன் நடித்தவர் கொஞ்சம் கதை இருக்கிற படத்தை தேர்வு செய்திருக்கிறார். அதற்காக பாராடியாக வேண்டும்.
மலையாளத்தில் திலீப் இயல்பாக செய்த நகைச்சுவையை விஜய் சில இடங்களில் படு மொக்கையாக்கி விட்டார்.
மீராவாக அசின். பல இடங்களில் முதிர் கன்னியாக தெரிகிறார். அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் தயாராகிவிட்டார் என்று தோன்றுகிறது.
அசினின் தோழியாக 'சூர்யன் சட்டக் கல்லூரி' நாயகி மித்ரா. மலையாளத்தில் செய்த அதே பாத்திரத்தை ஏற்று, கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
வேட்டி, சட்டையில் வந்த ராஜ்கிரணை கோர்ட், சூட் போட்டு அழகு பாத்திருக்கிறார்கள். ஆனால், பேச்சில் அதே கிரமாத்து நடை தான். அசினின் அம்மாவாக ரோஜா. 'நெஞ்சினிலே' படத்தில் விஜய்யுடன் ஆட்டம் போட்டவர், இதில் அவருக்கு அத்தையா...!! நினைக்கவே கொடுமையாக இருக்கிறது.
மலையாளப்படத்தில் ரீமேக் என்பதால் பல இடங்களில் மலையாள வாசம் இருக்க தான் செய்கிறது.
விமரசனத்துக்கு உதவியது :
பாடிகார்ட் ( மலையாளப்படம்)
விஜய் , அசின் முந்தைய படங்கள்
காவலன் படத்தின் வேலை செய்தவர்களின் பேட்டி
படம் பார்க்காமல் விமர்சனம் எழுதியதை கண்டிக்க நினைப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
சொந்த கற்பனையில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என்று வெளி மொழி படங்களை ரீமேக் செய்தால், படம் பார்க்காமல் விமர்சனம் எழுதுபவர்கள் வரத்தான் செய்வார்கள்.
14 comments:
எப்படி எல்லாம் யோசிக்கிறிங்கள்
hello ganasoooni first kaavalan depavali varavillai appuram yan intha pathivu ??? decem 24 than varukirathu . ithu kuda theriyamal pathivu podukireerkal ungalai ninaithal paavamaka irukurathu. ungalukku enna paithiyam muthiducha??? vijay a patri ninaikamal ungalal irukka mudiyatha????
Kavalan Nichayam vetri perum wait & see ok
// vijay said...
hello ganasoooni first kaavalan depavali varavillai appuram yan intha pathi//
நீங்களே சொல்லிடீங்க..
இரண்டு மாதம் முன்பே பதிவு போடீன்களா ?
வேலாயுதம் ஏப்ரல் 14 தான் வரும்...அதுக்கு ஏதாவது உண்டா ?
PRO வேலை பார்த்தா காசாவது கிடைக்கும்....
நேர்மையான விமர்சனம். இதை யாராவது கண்டித்தால் அவர்களுக்கு டாகுடரு விஜய் நடித்த(??!!) சுறா, வில்லு, வேட்டைக்காரன் போன்ற சிறப்பு திரைப்படங்களின் dvd தொகுப்பு அனுப்பப்படும்.
// vijay said...
Kavalan Nichayam vetri perum wait & see ok//
டாகுடரு விஜய் மேல இருக்கிற உங்க நம்பிக்கைய பாராட்டுறேன். படம் வரட்டும் யாருக்கு(?) பைத்தியம்னு(??) தெரிஞ்சிடும்.
"காவலன் – படம் பார்க்காதவனின் விமர்சனம்"
தலைப்பே சூப்பரா இருக்கு. படம் பார்த்ததுக்கு அப்புறம் உயிரோடு இருந்தாதானே விமர்சனம் எழுத முடியும்.
டாக்டர்கள் கைவிட்ட பின்பு விஜய் உதவியால் உயிர் பிழைத்த சிறுவன்; படப்பிடிப்பில் உருக்கமான சந்திப்பு
யஷ்வந்த்துக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டான். மூக்கில் இருந்தும் ரத்தம் வழிந்தது.
ஆந்திராவில் நிறைய ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்த்தும் டாக்டர்கள் காப்பாற்ற முடியாது என கை விரித்தனர். ஆபரேஷன் செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
நடிகர் லாரன்ஸ் சென்னையில் அறக்கட்டளை வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதை கேள்விபட்டு அவரை அணுகினர். லாரன்ஸ் அச்சிறுவனை விஜய்யிடம் அழைத்து சென்றார்.
சிறுவனை பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை காப்பாற்றுங்கள் என்றார்.
மலர் ஆஸ்பத்திரி டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் சிறுவனை பரிசோதித்து இதயத்தில் இருந்து கிட்னிக்கு செல்லும் வால்வில் கோளாறு உள்ளதென்றும் ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறினார்.
விஜய் செலவை ஏற்றதால் சிறுவன் அங்கு அனுமதிக்கப்பட்டான். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் சிறுவன் பிழைத்துக் கொண்டான்.
புஷ்பா கார்டனில் காவலன் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சிறுவன் யஷ்வந்த் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான். அவன் பெற்றோரும் விஜய் கையை பிடித்து நன்றி பெருக்கோடு கண்ணீர் சிந்தினர். உருக்கமான சந்திப்பாக இது இருந்தது.
விஜய் செய்த உதவியை வெளியில் சொன்னது ஏன்?-
நடிகர் விஜய் செய்த உதவியால் உயிர்பிழத்த சிறுவன் யஷ்வந்த் சென்னை புஷ்பா கார்டனில் “காவலன்” பட சூட்டிங்கில் இருந்த விஜய்யைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான். அவன் பெற்றோரும் விஜய்யின் கையை பிடித்துக் கொண்டு அழுதனர். இந்த சந்திப்பு மனதை உறுக்குவதாக இருந்தது. அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கூறி பத்திரமாக அனுப்பி வைத்தனர் விஜய்யும், லாரன்ஸும்.
பிறகு பேட்டியளித்த விஜய் கூறியதாவது :
லாரன்ஸ் மாஸ்டரை தொழிலுக்கு அப்பாற்பட்டும் எனக்கு பிடிக்கும். அவர் நிறைய குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார். நான் என் தங்கை வித்யா பெயரில் அறக்கட்டளை அமைத்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்து வருகிறேன். இந்த சிறுவனின் நிலைபற்றி லாரன்ஸ் மாஸ்டர் என்னிடம் கூறியபோது உடனே உதவ வேண்டும் என்று தோன்றியது.
பணம் உதவிசெய்தது ஒரு பெரிய விஷயமேயில்லை. இப்போது இந்த சிறுவன் உயிர் பிழைத்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். இனி இவன் மற்ற சிறுவர்கள்போல் நன்றாக வாழமுடியும். இந்த உலகில் அவன் நிறைய சாதிக்கக்கூடும் என்றார் விஜய்.
லாரன்ஸ் கூறியதாவது :
இந்த சிறுவனின் பெற்றோர் என்னிடம் உதவிகேட்டு வந்ததும், எனக்கு விஜய் ஞாபகம் வந்தது. விஜய்யிடம் சொன்னால் உதவி செய்வார் என்று உடனே அவரிடம் சென்றேன். இந்த சிறுவனுக்கு உதவி செய்ததை வெளியில் சொல்லவேண்டாம் என்றுதான் விஜய் கூறியிருந்தார். ஆனால் நான்தான் இந்த சம்பவத்தை வெளியில் தெரியப்படுத்தினேன். இது போன்ற உதவிகள் வெளியில் தெரிந்தால்தான் மற்ற நடிகர்களும் வேறு யாருக்காவது உதவ முன்வருவார்கள். இப்போது இந்த சிறுவன் சந்தோஷமாக இருக்கிறான் என்றார் லாரன்ஸ்
Naan intha Kelviyai ketathu Intha pathivu Pottavaridam Mattum than.
Our manithanai manithanaka ( yelaiyo , panakarano, pidithavaro, pidikaathavaro) mathikka theriyatha kanda kanda street dogs(aakaya manithan, nakarajachozhan) ku pathil solla vendiya avasiyam illai.
Neengal kuduthirukkum commentsla irunthe therikirathu neengal evalavu periya local partykal entu . ungaluku ithai vitta veru velaiyum kidaiyathu entum therikirathu . ungalukkum street dogskum entha diff -um illai entu purinthu konden .
oruvarai pidikkavillai ental avanai patti pesa unaku entha arukathaiyum kidaiyathu athu yaaraka irunthaalum sari . unnai intha blog a vitta vera yaarukkum theiryathu . muthalil un thakuthiyai arinthu mattavanai pesu .
oruvanai nee paaratamal irunthal kuda parava illa aanal aduthavanin manam nokum padi oru pothum nadakaathae.
Vetri , Tholvi enpathu Vijay in Sontha vishayam . athanal yerpadum nambaiyo , tholviyo vijay ai mattum than serum . unaku enna kavalai athinal. profit vanthal unaku kondu tharava poran.
thirutu vcd il araikuraiyaka padam paarthu comments kudukkum unna pola oruthanukkum sontha arivu orunaalum vara povathillai .
// vijay said...//
:)
அண்ணே, உங்க விமர்சனம் சூப்பர். இன்னுமா நீங்க விஜயை நம்பிட்டிருக்கீங்க. அவரு டம்மி பீசாகி ரெண்டு வருஷம் ஆகப்போகுதுண்ணே.
அப்புறம், படம் பாக்காம விமர்சனம் எழுதியது நீங்கதான்னு நினைக்காதீங்க. உங்களுக்கு சீனியர் நான் இருக்கேன். சுறா படத்துக்கே முன்கதையோட்டம் எழுதியிருக்கேன். பார்க்க: http://podhujanam.wordpress.com/2010/04/21/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/
ஆனா, வருத்தம் என்னன்னா, நான் எழுதுன விமர்சனத்தை விட உண்மையான படம் படு மொக்கையா இருந்துச்சு. சோ சேட்....
DR.VIJAY
Etana nalaikuthan valikkada madiriye nadikiradu?
thalaiva . kalakiteenga..... padam varathuku munnalaya vimarsanama ... super
Post a Comment