வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, October 3, 2010

எந்திரன் மற்றும் ரஜினி பழைய படங்கள்

முதல் முறையாக சன் டி.வி படத்தை தியேட்டரில் பார்த்தேன்.

படத்தின் கதை.... எல்லோருக்கு தெரிந்திருக்கும். மனிதனின் உணர்ச்சிகள் எந்திரத்திற்கு கொடுக்கும் போது அது எவ்வளவு வன்மமாக நடந்துக் கொள்ளும் என்பதை ஷங்கர் காட்டியிருக்கிறார்.(நல்ல வேளை, மெசேஜ் சொல்ல வேண்டும் என்று கோர்ட் காட்சியை நீண்ட நேரம் இழுக்கவில்லை)கிளைமாக்ஸ், பாடல் காட்சியில் தனது பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் ஷங்கர்.

ரஜினி அறிமுக பாடலில்லை. பன்ச் டையலாக் இல்லை. ஸ்டைல் இல்லை. முழுக்க முழுக்க இயக்குனர் ஷங்கரின் படமாக தான் 'எந்திரன்' இருந்தது.நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி கதையின் நாயகனாக நடித்த படம் என்று சொல்லலாம். 'ஆறில் இருந்து அறுபது வரை', 'முள்ளும் மலரும்' படங்களில் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்தது போல் இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். அதுவும் 'காயத்ரி', 'ஆடு புலியாட்டம்' படத்தில் பார்த்த வில்லன் ரஜினியை 'ரோபோ' கதாபாத்திரத்தில் பார்க்க முடிந்தது.

இதுவரை லாஜிக் இல்லாமல் எத்தனையோ படத்தில் ரஜினி செய்ய ஹீரோயிசத்தை 'ரோபோ' என்ற லாஜிக் பாத்திரத்தில் ஹீரோயிசத்தை காட்டியுள்ளார். குறிப்பாக, எந்திரகளுக்கு நடுவில் விஞ்ஞானி ரஜினியை தேடும் போது ரஜினி நடிப்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

ரஜினியே கதையின் நாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு மற்ற நடிகர்களும் அதைப்போல் செய்ய தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

கணிப்பொறியைக் கூட காதலிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராயை கிழவியான பிறகு அழகாக காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரை விட்டால் இந்த அளவுக்கு கூட அழகான நாயகி இல்லை என்பதால் நமக்கு வேறு வழியில்லை. ( ரஜினிக்கு பொருத்தமாக இருக்க அப்படி செய்தார்களோ என்னவோ !)

பாடல்கள்... இரண்டு பாடல்கள் தான் நன்றாக இருந்தாலும் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது.

ரோபோ பாத்திரம் ஐஸ்வர்யாவிடம் காதலை சொல்லும் போதும், லீவ், வேலை நிறுத்தம் பற்றி விஞ்ஞானி ரஜினியிடம் பேசும் போது, 'காதல் ரத்து' என்ற புதிய வார்த்தையை ஊடலில் பயன்படுத்தும் போதும் என்னையும் அறியாமால் 'சுஜாதா' கண் முன் வந்து நிற்க்கிறார். முழுக்க முழுக்க அவர் வசனம் எழுதியிருந்தால் இந்த படத்தை இன்னும் அதிகமாக ரசித்திருப்போமோ என்று தோன்றியதியது. மனிதனுக்கும், எந்திரத்திற்கும் ஒப்பீட்டு வசனம் இவரை தவிர இவ்வளவு அழகாக யாராலும் எழுத முடியாது. (சுஜாதா ஸார்... வீ மிஸ் யூ !!)

படத்தின் முதல் காட்சி திரையிடும் முன்பே முன் பதிவு, ஆடியோ டி.சி, வெளினாட்டு உரிமை, மற்ற மாநில உரிமை என்று சன் டி.விக்கு 200 கோடி வசூலாகிவிட்டதாக ஒரு நண்பர் சொன்னார். இனிமேல், என்ன தான் நவீனத்துவம், பின் நவீனத்துவ விமர்சணம் எழுதினாலும் படம் சன் டி.விக்கு லாபம் தான். ( லாபத்தில் 'சுறா', 'வேட்டைக்காரன்' போன்ற நல்ல படங்களை தைரியமாக வாங்குவார்கள்).

குடும்பத்தோடு ஜாலியாக பார்க்க வேண்டிய படம். மூன்று மணி நேரம் நன்றாக ரசிக்க முடிந்தது.

சுருக்குனு...

தன் மகள் திருமணத்திற்கு வந்தால் போக்குவரத்து பாதிக்கும் என்று ரசிகர்களை அழைக்காத ரஜினி, விடியற்காலை 3:30 மணிக்கு பட்டாசு கொளுத்தி கொண்டாடியதை ரஜினி எதுவும் சொல்லவில்லையே ! தனது பட வியாபாரத்திற்காக பொது மக்களை மறந்துவிட்டாரோ !

எங்கோ ஒருவர் 'வருங்கால முதல்வர் ரஜினி' என்று கோஷம் போட்டார். இன்னுமா இவர் அரசியலுக்கு வருவாரு நம்புறாங்க..

5 comments:

பாலா said...

// விடியற்காலை 3:30 மணிக்கு பட்டாசு கொளுத்தி கொண்டாடியதை ரஜினி எதுவும் சொல்லவில்லையே ! தனது பட வியாபாரத்திற்காக பொது மக்களை மறந்துவிட்டாரோ !

நீங்களும் இதே மாதிரி புரிந்து கொள்ளாமல் எழுதுகிறீர்களே? ரஜினி மகள் திருமணம் போல ஒரே ஒரு தியேட்டரில் அவர் படம் வெளியாகி இருந்தால் ஒரே நாளில் அனைவரும் வர வேண்டாம் என்றுதான் சொல்லி இருப்பார். மூவாயிரம் தியேட்டர்களில் வெளியாகியே இவ்வளவு கூட்டம் என்றால், அவர் மகள் திருமணத்துக்கு எவ்வளவு கூட்டம் வந்து பிரச்சனை ஆகி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

ஆகாயமனிதன்.. said...

//நீங்களும் இதே மாதிரி புரிந்து கொள்ளாமல் எழுதுகிறீர்களே? ரஜினி மகள் திருமணம் போல ஒரே ஒரு தியேட்டரில் அவர் படம் வெளியாகி இருந்தால் ஒரே நாளில் அனைவரும் வர வேண்டாம் என்றுதான் சொல்லி இருப்பார். மூவாயிரம் தியேட்டர்களில் வெளியாகியே இவ்வளவு கூட்டம் என்றால், அவர் மகள் திருமணத்துக்கு எவ்வளவு கூட்டம் வந்து பிரச்சனை ஆகி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்//
?????

ஆகாயமனிதன்.. said...

எந்திரன் வெற்றியா ? தோல்வியா ?
படம் வெற்றி என்பது பணத்திலா ? ஓடும் நாட்களிலா ? இல்ல பிள்டப்பிலா ? புஷ்'வானமாகிபோன தீபாவளி தானே.... ரெண்டு நாள் கழித்தால் எல்லாம் அடங்கிவிடும், எப்படியோ மக்கள் தீபாவளி போனஸ் தப்பியது...

குகன் said...

// எந்திரன் வெற்றியா ? தோல்வியா ?
படம் வெற்றி என்பது பணத்திலா ? ஓடும் நாட்களிலா ? இல்ல பிள்டப்பிலா ? //

முதலாளிகளின் வெற்றி என்றும் பணத்தில் தான் உள்ளது. 'எந்திரன்' பொருத்த வரையில் சன் டி.விக்கு வெளிவரும் முன்பே வெற்றிப்படம் தான்.

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

LinkWithin

Related Posts with Thumbnails